(Reading time: 10 - 19 minutes)

எங்கே ஸார் போகணும் ? 

மும்பைக்கு....?! நம்ம கெஸ்ட் அவுஸ்க்கு.......ராஜ்வீர் குரலில் இருந்த கிறக்கத்தைக் கண்டு டிரைவரும் புன்னகைத்துக் கொண்டான். அவனுக்குத் தெரியும் அந்த கெஸ்ட் அவுஸ் இதே போல் அநேக பெண்களை ராஜ்வீரின் பசிக்கு இரையாக்கியது போக தனக்கு உணவைத் தந்திருக்கிறதே வெகு குஷியோடு வண்டியைச் செலுத்தினான். யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் மறுநாள் மதியமே தங்களின் பயண ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கிவிட்டாள் வினிதா.

டிப்பாவி கமலின் குரலில் பழைய நினைவில் இருந்து மீண்ட வினிதா ம்... எத்தனை அருமையான எங்கும் சற்றே பிசிறில்லாத திட்டம் ஆனா அந்த ராஜ்வீரால் கெட்டுப்போச்சு, அவன் மட்டும் அன்னைக்கு சரியாக நடந்திருந்தா இந்த சிக்கல் எனக்கில்லை, நான் நல்லபிள்ளை வேஷம் போட்டு உன்னை கல்யாணமே பண்ணியிருப்பேன். 

கல்யாணமா ? உன்னைப் போன்ற துரோகியையா ? எங்கள் காதல் உன்னதமானது அதனால் தான் மாயா இங்கே மீண்டு வந்திருக்கா ?! அப்படியே அவ இறந்து போயிருந்தாலும் நானும் வாழும் வரையில் அவள் நினைவில் தான் வாழ்ந்திருப்பேன் அல்லது என்றாவது ஒருநாள் தற்கொலை பண்ணிக்கொள்ளுவேனே தவிர உன்னைப் போன்ற அற்பபிறவியை திருமணம் செய்து கொண்டிருக்க மாட்டேன். 

இறப்பா மாயாவை அத்தனை சீக்கிரம் சாகடித்துவிடுவேனா கமல் ராஜ்வீர் இப்போ மறுபடியும் வந்திருக்கிறான் முதல் பண்ண தப்பை இப்போ செய்ய தயாரா இல்ல, இங்கே வர்றதுக்கு முன்னாடியே அவன்கிட்டே பேசி மாயா இப்போ எங்கிட்ட இருக்கான்னு சொன்னேன், அவளை அவன் கிட்டே ஒப்படைக்கப்போறேன். கொஞ்சநாள் அவன் கூட ஆசைநாயகியா இருக்கிற மாயா, பெண்கள் தொழில் செய்ய இடத்துக்கு அனுப்பப்படுவா. வேணுமின்னா அதாவது உன்னோட உண்மையான காதல் அப்பவும் இருந்தா அந்த இடத்திலே மாயாவைக் கல்யாணம் செய்துக்கோ ?! வினிதா கொடூரமாக சிரித்தாள். நீயாவது பரவாயில்லை, இங்கே இவ கூடவே இருந்திட்டே ஆனா உனக்கும் மாயாவுக்கும் நல்லது பண்றேன்னு சொல்லிட்டு அங்கே இருந்த எல்லாரையும் முட்டாள் ஆக்கிட்டு நான் பறந்து போகப்போறேன். எல்லா ஏற்பாடுகளும் தயாரா இருக்கு, மாயாவை தூக்கிப்போக சொல்லி அங்கேயிருந்த முரடனுக்கு சைகை காட்டினாள். அவனும் மாயாவின் இருப்பிடம் சென்று ஒரு முயலைப் போல அவளைத் தூக்கிக்கொண்டு நகர்ந்தான். இந்த அறையில் நான் இப்போ கொஞ்சம் புகையை செலுத்தப் போறேன், அது இந்த அறையை நிரப்பியிருக்கும் போது உங்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு நீங்களும்....நடுவழியில் நிறுத்திட்டுப் போன வினிதா என்ன ஆனாளோன்னு நினைச்சே மத்த நண்பர்கள் காலத்தைப் போக்குவாங்க, ரொம்ப நேரம் ஆகிடுச்சு கமல் மாயா காத்திருப்பா இல்லை, நான் கிளம்பறேன். வினிதா சிரித்தபடியே புகை பரப்பச் சொல்லி இன்னொரு அடியாளிடம் சைகை காட்டிவிட்டு நகர்ந்தாள்.

கமல் கத்த அந்த அறைக்கதவு சாத்தப்பட்டது. வினிதாவின் கார் மாயாவோடும் அந்த இரு முரடர்களோடும் சீறிப்பாய்ந்தது. 

தொண்டையினை தன் எச்சிலால் ஈரப்படுத்திக் கொண்டு தொடர்ந்தான் ராஜ்வீர் நான் வினிதாகிட்டே சொல்லிட்டு கிளம்பினபிறகு, எங்க வண்டி வழியில விபத்திலே சிக்கிடுச்சு, மாயாவிற்கு அதிகமான அடி அப்போ யாருக்கும் சுயநினைவு இல்லாததால நாங்க எல்லாரும் கெளவர்மண்ட் ஆஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டோம். இடைப்பட்ட நாட்களில் மாயாவோட நிலைமை மோசமானதால இனிமே அவளால எந்த பிரயோசனமும் இல்லைன்னு நினைச்சி நான் மும்பை போயிட்டேன். ஆனா என்னோட டிரைவர் மட்டும் அப்பப்போ நிலைமையை கண்காணிச்சிகிட்டே இருந்தேன். இங்கே யாரோ ஒரு பொண்ணும் சிலரும் வந்து மாயாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் பண்ணதா கேள்விப்பட்டோம். போலிஸின் தலையீடு இருந்ததால என்னால நேரடியா ஏதும் செய்ய முடியலை கொஞ்சம் மறைமுகமாகவே நான் செயல்பட்டேன். நடந்ததை வினிதாகிட்டே சொல்லவும் பயம். ஏன்னா சென்னையில் என்ன நிலைமைன்னு எனக்குத் தெரியலை, ஆனா மயக்கமாயிருக்கிற மாயாவால வினிதாவிற்கு ஏதும் ஆபத்து ஏற்படுமோன்னு கொஞ்சம் பயமும் இருந்தது, நான் வினிதாவை சந்திக்க தீர்மானித்து சென்னைக்கு வந்தேன். நடந்த விவரத்தையும் தெரிந்து கொண்டேன். அதன்பிறகு மாயாவை மீண்டும் கைப்பற்ற முயற்சிகள் நடந்தது அப்போதான் நான் இன்ஸ்பெக்டரிடம் பிடிபட்டேன். வினிதாகிட்டே இருந்து மாயாவை நீங்க அத்தனை சுலபமா காப்பாற்றிட முடியாது என்று பேச்சை முடிக்கும் போது மீண்டும் அடி வாங்கினான் ராஜ்வீர்

இவனை செல்லில் போடுங்க என்றுரைத்த இன்ஸ்பெக்டர் வீராவிடம் திரும்பினார். நான் எல்லா செக்போஸ்ட்டுக்கும் சொல்லிட்டேன், உங்க ஐடியாபடி வினிதாவுடைய செல் இன்னும் எந்த பார்டரையும் தாண்டலை, இத்தனை நேரம் வரையில் அது நேற்று நீங்க தந்த முகவரியில் தான் இருக்கு...?! ஆனா இப்போ கொஞ்சம் டிராவல் ஆகுது, அவங்களை எப்படியும் மடக்கி பிடிச்சிடலாம் நாம ஸ்பாட்டுக்குப் போறது நல்லதுன்னு நினைக்கிறேன் லெட்ஸ் குவிக். அவர்கள் காரை ஆரோகணித்தபோது, இன்ஸ்பெக்டரின் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்படியா இதோ அங்கேதான் வந்துட்டு இருக்கோம். 

என்னாச்சு இன்ஸ்பெக்டர்

வினிதா வேலையை ஆரம்பிச்சிட்டா நாம இப்போ இங்கே தாமதிக்கிறது நல்லது இல்லை, வழியிலே பேசிகிட்டே போகலாம் கார் புறப்பட்டது.

மாயா வருவாள்

Episode # 21

Episode # 23

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.