(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 23 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

லகமே ஸ்தம்பித்து போனாற்போல இருந்தான் கமல், பாவம் கமல் இந்த வினிதா ரொம்பவும் கனவுகளோடு இருக்கா, சந்துருவின் வலையில் விழுந்திடுவாளோன்னு ரொம்பவும் பயமா இருக்கு ?! அவளுக்கு ஒரு பாதுகாப்பை நாமதான் ஏற்பாடு பண்ணித் தரணும். நம்ம கல்யாணத்திற்கு பிறகு நான் நடனமாடப் போவதில்லை, உங்க ஆபீஸில் அவளுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யணும் கமல் இன்று கைதியாய் வினிதாவின் கரங்களுக்குள் கிடக்கும் மாயா அதே வினிதாவின் எதிர்காலத்தைப் பற்றித்தான் எத்தனை அக்கறையாய்ப் பேசினாள். அவள் ஒரு பச்சோந்தி பசுத்தோல் போத்திய ஓநாய் என்று அறியாமல் அவளுக்கு பரிந்து பேசிய மாயாவை எண்ணி மனம் கனத்தது கமலுக்கு !

அவளுக்கு வந்த இடைஞ்சலில் இருந்த இரண்டாம் முறையும் தன் அருமைக் காதலியைக் காக்கத் தவறியிருக்கிறான் எனில் இனிமேல் அவன் இருந்துதான் என்ன பயன் ? தான் தொலைத்த பொக்கிஷத்தை இரண்டாம் முறையும் இறைவன் அவனிடம் கொண்டு வந்து சேர்ப்பான் என்று என்ன நிச்சயம் இருக்கமுடியும். கமல் பெருங்குரலெடுத்து உடைந்து அழுதான். லட்சணா கண்விழித்தாள் தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று அவளால் உணர முடியவில்லை, உடலைச் சுற்றி இறுக்கியிருந்த கயிறு வலித்ததை அவளின் முகம் மாறுதல்கள் உணர்த்தியது. மாயா இருந்த கட்டில் காலியாக இருந்தததையும், கமல் அழுதுகொண்டு இருப்பதையும் காணும்போதே ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. சொல்லொன்னா ஏதோ புகை நாசியைத் தொட, கண்கள் எரிந்தன. ஏதோ அபாயகரமான சூழலில் அகப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்த லட்சணா கமலின் கவனத்தை திருப்ப முயன்றாள். ஆனால், அதே நேரம் இரண்டு மூன்று பேர் உள்ளே நுழைந்தார்கள். அதன்பிறகு ஐந்து நிமிடங்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வந்து கமலுக்கும், லட்சணாவிற்கும் முதலுதவியும் அளிக்கப்பட்டு அசோக் அவர்கள் எதிரில் அமர்ந்திருந்தான். 

கமலின் பார்வை அவனை துளைத்தது. மாறாக நடந்தது எல்லாம் எனக்கு தெரியும் கமல் மாயாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை, அவங்க நல்லாயிருக்காங்க

இல்லை அசோக் என்னைத் தேற்றுவதற்காய் நீ இதை சொல்ற மாயாவை அந்த வினிதா

கடத்திக்கிட்டு போனா ஆனா அவ போலீஸாரால் பிடிக்கப்பட்டு இப்போ ஆஸ்பத்திரியில் இருக்கா....

அப்போ மாயா ?

அவங்களும்தான் ! பயப்படாதேடா உன்னையும் லட்சணாவையும் காயப்படுத்திவிட்டு, வினிதா தப்பிக்கும் போது காவல்துறை ஆட்கள் அவங்க போன வண்டியை பின்தொடர ஆரம்பித்தாகிவிட்டது. மாயாமேல வினிதாவிற்கு இருக்கிற வன்மத்தை உன்னோட பேரில் அங்கே தங்கிய கெளதமும், இன்ஸ்பெக்டரும் கண்டுபிடிச்சாங்க, நாங்க விபத்து தொடர்ப்பா ஒருத்தனை விசாரிக்க வேண்டியிருந்ததால வினிதாவின் மீது இருந்த பிடியைத் தளர்த்தினோம். இங்கே நடந்த அனைத்தையும் வெளியே இருந்த காவல்துறை நண்பர்கள் ரெக்கார்ட் பண்ணிட்டாங்க, வினிதா அவ வாயேலேயே வாக்குமூலத்தை கொடுத்திட்டா இனிமே அவளால தப்ப முடியாது. 

உங்களுக்கு ஆபத்துன்னு தெரிந்ததும் உங்களையும் காப்பாற்றி எங்களுக்கு தகவல் தந்திட்டாங்க போலீஸ் வினிதாவோட காரை தொடர்ந்து போனப்போ எதிர்பாராதவிதமா சிறு விபத்து நடந்து போச்சு அதிலும் நன்மைதான் வினிதாவிற்கு நல்ல அடி மாயாவுக்கு மீண்டும் மயக்கம் ஆனா மயக்கம் தெளிந்து எழுந்த மாயா முதல்ல சொன்ன வார்த்தை என்ன தெரியுமா கமல் கமல் ன்னு உன் பெயர்தான்

அப்படியா நான் இப்போதே மாயாவைப் பார்க்கணும் கமலின் கண்களில் ஆறுதலோடு காதலும் வழிந்தது 

அவசரப்படாதே அசுத்தமான நச்சுப்புகையை சுவாசித்ததில் உனக்கும் லட்சணாவுக்கும் கொஞ்சம் தலைகிறுகிறுப்பு இருக்குமாம். ஆனா மாயா ரொம்பவே நல்லா இருக்காங்க இப்போ போலிஸ் மாயாவையும், காயத்திற்கு மருந்து போட்டு வினிதாவையும் கூட்டிட்டு வர்றாங்க. அதுக்குள்ளே கொஞ்சம் பிரிஸ்கா இரு, உன் மாயாவிற்காக காத்திரு. அசோக் கமலை ஆசுவாசப்படுத்திவிட்டு, லட்சணாவின் புறம் சென்றான். 

வினிதாவைப் பற்றிய அவர்களின் பேச்சு முடிவுற்றபோது, வெளியே வண்டியின் அரவம் கேட்டது. இன்ஸ்பெக்டர் வீரா தன்னுடைய சகாக்களுடன் வினிதாவை விலங்கிட்டு அழைத்து வந்திருந்தார், எதிர்பார்த்தாற் போலவே மாயா உள்ளே நுழைந்தாள் அவள் கண்கள் அத்தனை பேரிலும் கமலைத் தேடின. இருவரின் கண்களும் சந்தித்த போது எந்த வார்த்தைகளையும் வெளியிட முடியாமல் நீண்ட நேரம் வெறும் கண்ணீர் மட்டும் அலையலையாய் வெளியேறியது. அனைவரின் மெளனம் அடுத்த அத்தியாயத்தை எழுத காத்திருந்தது. 

மல் மாயாவை சந்தித்த சந்தோஷத்தில் நிம்மதிப் பெருமூச்செறிந்தான். அவர்கள் பேசிக்கொள்ள எத்தனையோ விவரங்கள் இருந்தபோதிலும் இருவரின் உடல்நிலைக்குமே சற்று ஓய்வு தேவை என்று உணர்ந்திருந்ததால் அருகருகே அமர்ந்திருக்கும் ஆறுதல் நிலையே இருவரின் மனத்திற்கும் உகந்ததாக இருந்தது. கமலின் கரங்களுக்குள் மாயாவின் கரங்கள் அடைக்கலமாகி இருந்தன. இனி இவள் இல்லை என்று பயந்து இருந்த நிமிடங்களின் நினைப்பினை உதறிட இந்த தொடுகை அவசியமாக இருந்திருக்கிறதோ என்னவோ ?!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.