Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

வள் சொன்னவற்றை கேட்டு சிலை போல் அமர்ந்திருந்த ரேகாவை கண்டவள் மெல்ல சிரித்து விட்டு “அப்பா ரேகா அப்படியே சிலையாயிட்டா பாருங்க, ஓகே பா எனக்கு இன்னொரு  டீ குடிக்கணும் போல இருக்கு உங்களுக்கு வேணுமா?” என்று அவள் பேசிக்கொண்டே கிச்சனுக்குள் செல்ல

பக்கென்று இருந்தது ரேகாவிற்கு.

அவள் உள்ளே டீ போட்டு கொண்டிருக்க, புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்த குணசேகரை கண்ட ரேகா, புருவங்களை சுருக்கி யோசித்துவிட்டு இளம்பிறையின் தோளை தொட

நிச்சயமா நான் பயித்தியம் இல்லை ரேகா, “இந்தா ஸ்டராங் டீ குடி”என்று அவளிடம் நீட்ட

ஏதும் பேசாமல் பருகினாள் ரேகா. நிச்சயமாக ரேகாவிற்கு இப்போது அது தேவைபட்டது.

“இளா, அங்கிள்.. அது…” என்று அவள் தயங்கவும்

“எப்பவும் இங்க என்னோட இருந்துட்டே என்னை வழிநடத்துறார் ரேகா” என்று அவள் இதயத்தை  தொட்டு காட்ட

ரேகாவின் குழம்பிய முகத்தை கண்டவள்

“ரொம்ப குழப்புறேன் இல்ல? தெளிவாவே சொல்றேன் ரேகா, மத்தவங்களை பொறுத்த வரைக்கும்  அப்பா இறந்துட்டார்.  ஆனா என்னால அதை ஏத்துக்க முடியல. என்னை பொறுத்த வரைக்கும் அப்பா இருக்கார். என்னால அவரோட பேச முடியும், சிரிக்க முடியும், அவரை கோச்சிக்க கூட முடியும். அவர் இங்க இருக்கார் என்று அவள் இதயத்தையும், நெற்றியின் பக்கவாட்டில் ஆள் காட்டி விரலை வைத்து தன் மனதும் அறிவும் அவரை முன்னிறுத்தியே யோசிக்கும் என்று அவள் சொல்லாமல் சொல்ல

ரேகா அவளை பாவமாக பார்த்தாள்

“ரேகா ப்ளீஸ் என்னை அப்படி பார்க்காத, சில விஷயங்கள் எல்லாம் மானசீகமா உணரணும். மத்தவங்களுக்கு அது புரியாது. லுக் நான் என் அப்பா இறந்துட்டாருங்கற உண்மையை மறுக்கல அதே சமயம் அவர் என்னோட தான் இருக்காரு, நிச்சயம் என்னை பார்த்துட்டு, என்னை வழி நடத்திட்டே இருக்காருன்னு நான் நம்புறேன். கடவுளை மட்டும் பார்த்திருக்கோமா என்ன? ஆனா இருக்காருன்னு நம்புறோம் தானே இதுவும் அப்படித்தான் ப்ளீஸ் இனி இப்படி பாக்காத ஓகே” என்று அவள் சொல்ல

ரேகா மௌனமாய் அவள் தந்தையின் புகைப்படத்தை கண்டாள்.. இமைக்க மறந்தாள் ரேகா.

இளம்பிறையோடு தன் நட்பு தொடங்கிய நாள் முதல் அவள் தந்தை பற்றி அவள் பேசியவை அனைத்தும் அவள் நினைவில் வந்து போயின. இவளே எத்தனை முறை சொல்லியிருப்பாள் லக்கி டாட்டர் இளா நீ என்று. ஆனால் இவை அனைத்தும் இவளது கற்பனை  என்ற உண்மையை  அறிந்தபோது ரேகாவால் பேச முடியவில்லை.

“ஓகே ரேகா நான் ஹாஸ்பிடல் போக போறேன் நீ வரியா இல்லையா?” என்றபடி இளம்பிறை கிளம்ப வேறு வழியின்றி அவளும் கிளம்பினாள்.

மனம் லேசாக இருப்பது போல் உணர்ந்தாள் இளம்பிறை.

ங்கே மருத்துவமனையில் அசோக் விக்கிக்கு அவசியமான செய்தியை மட்டும் தெரிவித்திருந்ததால் அவனும் கிட்டத்தட்ட ரேகாவின் நிலையில் தான் இருந்தான்.

கதிர் கண் விழித்ததும் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு செல்வதாய் சொல்ல அசோக்கும் மறுத்து பேசவில்லை.

இளம்பிறையும், ரேகாவும் மருத்துவமனைக்கு வந்த போது தான் கதிருக்கு நினைவு திரும்பியது.

விக்கி உணர்ச்சி பெருக்கில் மன்னிப்பு கேட்க ஆயத்தமாக, அசோக் கதிரிடம் பக்குவமாய் நடந்தவற்றை சொன்னான்.

அப்போது இளம்பிறை அவன் அருகே நின்று கொண்டிருக்க அவளை கண்டவன், “பேபி மூன் ஹனி உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணாங்களா?” என்று கேட்க அவள் மறுப்பாய் தலை அசைத்தாள்.

“சாரி கதிர்” என்று விக்கி சொல்ல முயல

“விடுங்க விக்கி ஜஸ்ட் பர்கெட் இட் “என்று சொன்னபடி மெல்ல எழ முயல அவனால் முடியவில்லை.

“இல்ல இப்ப எதுவும் ட்ரை பண்ணாதீங்க, கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க” என்று இளம்பிறை சொன்னாள்.

“ஓ”என்று சலித்தான் கதிர்.

விக்கிக்கு அனல் மேல் நிற்பது போல் இருந்தது.

“ரேகா, அசோக் சார்  நீங்க ரெண்டு பேரும் ஆபிஸ்க்கு கிளம்புங்க” என்று இளா சொல்ல

“இளா, ஐ யம் சாரி” என்றான் விக்கி

“நீ பண்ண காரியத்துக்கு.., ஆனா என் மேலயும் தப்பிருக்கு உன்னை நம்பி உன் கூட கொஞ்சம் நெருங்கி பழகினேன் பாரு என்னை சொல்லனும்” என்று அவள் கோபத்தை காட்ட

“நிலா என்ன இது? விக்கி ஆல்ரெடி கில்ட்டியா பீல் பண்றான் நீ வேற”

“நீங்க கொஞ்சம் வாயை மூடிட்டு இருக்கீங்களா?”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# unnil tholaithavan nanadiJage 2018-06-17 00:05
What is this mam.its too interesting but that's next episode is missing why :sad:
Please update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையாSaaru 2018-04-23 15:19
Arumai
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையாThenmozhi 2018-04-23 05:13
Interesting update Prama.

Ilampirai koncham thidamana manam kondavargal enbathal strong-aga irukirargal. Kudos to her.

Janani varuvargala? yes endral eppothu? Waiting to read about it :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையாmadhumathi9 2018-04-23 04:00
:clap: kathai viruviruppa interesting ah poikittirukku. :thnkx: 4 this epi.waiting to read more. :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையாAdharvJo 2018-04-22 17:04
Interesting update ma'am :clap: :clap: epi with
lots of twists n turns but janani eppo varuvanga :Q: gunna uncle n family ena ananga :Q: :Q: :Q: innum lot of suspense irukke....wait seithu therindhu kolgiren BTW ila and avanga dad sequence was cool :clap: :clap:

Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top