(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - தாரிகை - 04 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2017..

இடம் : கோவை..

காலைக் கதிரோனின் ஒளி மிதமாக முகத்தில் அடிக்க மெல்ல தன் கண்களை மலர்த்தினாள் செல்வி..

வாக்கீ டாக்கீயின் சத்தம் இரவு என்று பாராமல் சத்தம் எழுப்பியதால் விடியகாலையில் தான்  கண்ணயர முடிந்தது அவளுக்கு..

தன்னை கடந்து செல்லலும் அதிகாரிகள் அனைவரும் தன்னை ஒரு தூரத்தில் வைத்துப் பார்ப்பது புரிந்தாலும் அதை வழக்கம் போல் அலட்சியம் செய்தவள் கையில் இருந்த வாட்சைப் பார்க்க அது மணி ஆறு முப்பது என்று காட்டியது..

நிதானமாக தன் முகத்தைத் துடைத்தவள் தலையை லேசாக சரிசெய்துகொண்டு நிமிர்ந்தாள்..

அப்பொழுதுதான் தன் முன்னே காலை தினசரியைக் கையில் பிடித்தவாறு முழித்தபடி நின்றிருந்த காவலர்களைக் கண்டு என்னவென்பது போல் அவர்களை ஏறிட்டாள்..

நேற்று இரவு அவளை கொஞ்சம் கீழ்த்தரமாக நடத்திய அந்த அதிகாரி, “சாரி மேடம்..”, என்றார் முணுமுணுப்பாக..

எழுந்து நின்றவள், “எதற்கு இந்த சாரி..??”, நிதானமாகவே கேட்டாள் செல்வி..

“அது வந்து.. நீங்க யாருன்னு தெரியாம நேத்து நான் உங்களை ரொம்ப அவமரியாதையா ட்ரீட் பண்ணதுக்கு..”, என்றார் தினறியபடியே..

“சோ.. இப்போ நீங்க எனக்குக் கொடுக்கும் மரியாதை என் பதிவாக்காக.. அப்படித்தானே..??”, கூர்மையாக..

“அப்படியில்லை மேடம்..”

“வேறு எப்படி..?? என் நிலையில் வேறு எந்த திருநங்கை இருந்தாலும் நீங்கள் நேற்று என்னை ட்ரீட் செய்தபடிதானே அவர்களையும் ட்ரீட் செய்திருப்பீர்கள்..?? இன்றும் அதுவே கண்டின்யூ ஆகியிருக்கும் அல்லவா..??”

அவரிடமிருந்து பதில் இல்லை.. வெறும் அமைதி மட்டுமே..

“என்ன சார்.. பதிலயே காணோம்..?? எங்களுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டீர்களோ..??”

“ஐயோ.. அப்படி எல்லாம் இல்லை மேடம்..” ,என்று தயங்கியவர், “சாரி மேடம்..”, என்றார் மீண்டும்..

அவரை ஒரு பார்வைப் பார்த்தவள், “உங்களுக்கு இன்று மாலைக்குள் வார்னிங் லெட்டர் வரும்..”, என்றாள் தீர்க்கமாக..

“மே..ட..ம்..??”, அதிர்ந்து போனார் அவர்..

அதை அலட்சியம் செய்தவள், “நேற்று வீட்டின் முன் கலாட்டா செய்தவர்களின் மீது கம்ப்ளைன்ட் செய்ய வேண்டும்.. ஒரு பேப்பரும் பேனாவும் கிடைக்குமா..??”, அந்த அதிகாரியின் அருகில் நின்றிருந்த ரைட்டரிடம் திரும்பி..

நானே எழுதி தருகிறேன் என்றவரைத் தடுத்தவள் நேற்று நடந்த சம்பவத்தைப் பற்றி எழுதி அவரிடம் ஒப்படைத்து விட்டு சாட்சிக்கு வீட்டின் சீசீடிவி புட்டேஜை கொண்டுவந்து தருவதாக உரைத்துவிட்டு வாட்சைப்பார்தபடியே போலிஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே சென்றாள்..

நிஷா.. இப்படி அழுதிட்டு இருந்த ஆச்சா..?? காலேஜுக்கு நேரமாகுது பாரு..??”, அதட்டலாக வெளிவந்தது குரல்..

“ம்மா.. உங்களுக்கு கொஞ்சம் கூட அக்கறையில்லை..”, சற்று கோபமாகவே அரட்டினாள் நிஷா அவரிடத்தில்..

“அக்கறை சக்கரை எல்லாம் நெறையாவே இருக்கு..”, என்று எடக்காக கிட்சனில் இருந்து குரல் கொடுத்தவர், “இப்போ நீ கிளம்பல தோசைக்கரண்டி பறக்கும்..”, என்றார் சத்தமாகவே..

புசுபுசுவென்று மூச்சுவிட்டுக்கொண்டே அவர் முன் நின்றவள், “செல்வி அக்காவை நேத்து ராத்திரி அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டுப் போய்ட்டாங்கன்னு சொல்லி பொலம்பிட்டு இருக்கேன் நான்.. ஆனால் நீங்க ஒரு அக்கறையே இல்லாம ஹாய்யா வேலைப்பார்துட்டு இருக்கீங்க..”, இயலாமையாக..

“உங்க அக்காவை அரெஸ்ட் பண்ணிக்கூட்டிட்டுப் போய்ட்டாங்க தான்.. அதுக்காக இப்படி உன்னை மாதிரி மூலையில் உட்கார்ந்து அழுதுட்டே இருந்தா எல்லாம் சரியா போயிடும்ன்னா சொல்லு.. நானும் உன்னுடன் சேர்ந்து அழறேன்..”, என்று அழுத்தமாக கூறியவர் அவள் அமைதியாக இருப்பதைக் கண்டு, “இங்கப்பாரு நிஷா.. செல்வி ஒன்னும் சின்னப்பிள்ளை இல்லை.. இவ்வள்ளவு பெரிய பதவில் இருப்பவளுக்கு அவளைப்பார்த்துக்க தெரியாதா என்ன..?? நீ வேணும்னா பாரு.. அவ சீக்கிரம் வீட்டுக்கு வந்திருவா..”, என்றார் தெளிவாகவும் உறுதியாகவும்..

அவரது பேச்சைக் கதவில் சாய்ந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த மொழி சத்தமாகவே கைத்தட்டினார்..

யாரு கைதட்டுவது என்பது போல் திரும்பிப்பார்த்த சமுத்திராவிற்கு அங்கு நின்று கொண்டிருந்த மொழியைக்கண்டதும் இவ என்ன போன மாயத்தில் வந்திருக்கிறாள் என்பது போல் பார்த்துவிட்டு, “கைத்தட்டல்லாம் பலமா இருக்கு.. என்ன விஷயம்..??”, கேள்வி பிறந்தது சமுவிடமிருந்து..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.