Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ரில் இருக்கும் தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு அவள் சொல்லப்போகும் பதிலுக்கென அவன் காத்திருக்க அவளோ

கதிர் நான் ரிசைன் பண்றேன் கதிர், இனிமேலும் என்னால இங்க வர்க் பண்ண முடியாது. ப்ளீஸ் என்னை உடனடியா ரீலீவ் பண்ணிடுங்களேன் என்று சொல்ல ,

ஹெட் செட் போட்டு அவளிடம் பேசிக்கொண்டிருந்தவனுக்கு, எங்கு போய் முட்டி கொள்வது என்று புரியவில்லை

நிலா என்று அவன் மேற்கொண்டு பேசும் முன்

ரேகா வில் டூ குட் ஜாப் கதிர். நான் வேணும்னா அவ கிட்ட பேசட்டுமா? என்று ரேகாவிற்கு இவள் வக்காலத்து வாங்க

பொசுக்கென்று கோபம் வந்துவிட்டது அவனுக்கு

ஏய் என்ன அதிகாரம் உன் கையில் இருக்குன்னு ஆடி பார்க்கலாம்னு நினைப்பா? எப்ப பாரு, போறேன் போறேன்னு பயம்  காட்டுற, நீயில்லன்னா கம்பெனி ஒன்னும் குடி முழுகி போயிடாது.  எனக்கு தேவை  கம்பெனி என் பெயருக்கு மாறனும். லுக் இது நானும் என் ஜெனியும் சேர்ந்து ஸ்டார்ட் பண்ண  கம்பெனி. இப்போ எல்லா அதிகாரமும் உன் மாமனார் பெயர் ல இருக்கு.

என் பெயர்க்கு எல்லாத்தையும் மாத்தி கொடுத்துட்டு நீ எங்க வேணும்னாலும் போ ஐ ஜஸ்ட் டோன்ட் கேர், அதுவரைக்கும் என் கூட இருக்கிறதை தவிர  வேற  வழி இல்லை புரியுதா? என்று கிட்டத்தட்ட மிரட்டி  விட்டு தொடர்பை துண்டித்து விட

அவனுக்கு காபி வாங்கி கொண்டு அப்போது தான் உள்ளே நுழைந்த வள்ளியம்மை கதிரை வேதனையோடு பார்த்தாள்.

மா இதெல்லாம் நீ சீரியஸ்சா எடுத்துக்காத அவ எதோ டிஸ்டர்படா இருக்கா மா அதான் அவளை டைவர்ட் பண்ண இப்படி பேசினேன். இந்நேரம் நான் பேசினதை யோசிச்சிட்டு இருப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு போன் பண்ணுவா பாருங்க என்று அவன் சொல்ல

வள்ளியம்மை ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

போன் வருதா இல்லையான்னு பாருங்க என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் அலைபேசி ஒலித்தது பேபி மூன் என்ற பெயரோடு.

 சொன்னேன் இல்ல என்றவன் சிரமப்பட்டு அழைப்பை ஏற்க முயல

ஏன்டா கை கால் அடிபட்டு கட்டு போட்டிருக்க இல்ல, இப்போ கூட ரெஸ்ட் எடுக்காம அப்படி என்ன வேலை? போன் கூட அட்டென்ட் பண்ண முடியல இந்த நிலையில வேலை செய்யணுமா? என்று கேட்க

மா அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் முதல்ல போன் அட்டென்ட் பண்ணி லவுட் ஸ்பீக்கர் ல போடுங்க என்றான்.

நீ பேசு பா நான் கொஞ்சம் அப்படியே நடந்துட்டு வரேன் என்று வள்ளியம்மை சொல்லவும்

மா மா ரொம்ப சீனெல்லாம் வேண்டாம். அப்படி நீங்க போறதுக்கு இன்னும் கொஞ்சம் நாள் எடுக்கும் சோ போன் ஆன் பண்ணுங்க என்று சொல்லவும் அவள் அழைப்பை ஏற்றாள்.

எதிர்முனையில் இளம்பிறை  கதிர் என்று சொல்லவும்

எஸ் மிஸஸ் கதிர் என்றான் அவன் தாயை பார்த்து புருவத்தை தூக்கியபடி

ஒரு நொடி மௌனத்திற்கு பின் கதிர் உங்க பெயர்ல கம்பெனி மாறினதுக்கு அப்புறம் எந்த பிரச்னையும் இல்லாம நான் போயிடலாம் இல்ல என்று கேட்க

அவனோ பல்லை கடித்தபடி ம் என்றான்

வள்ளியம்மையோ பெருமூச்சை இறக்கினாள்.

சரி அப்போ நான் இப்பவே உங்க அப்பா கிட்ட பேசிட்டு வரேன் என்று தொடர்பை துண்டித்துவிட

ஹே என்றவன் கட் பண்ணிட்டா என்று சொல்ல, வள்ளியம்மை ஏதோ யோசனையில் இருக்க,

மா ரொம்ப யோசிக்காத அவ்வளவு சீக்கிரம் உங்க ஆத்துக்காரர் என் பெயர்ல கம்பெனியை மாத்தி எழுதி தந்துட மாட்டார் என்று சொல்ல

அப்போதும் வள்ளியம்மையின் சிந்தனை முகம் மாறவில்லை

என்ன மா என்ன ஆச்சு? என்ன யோசிக்கிறீங்க? கொஞ்சம் டைம் எடுக்கும் மா பட் எல்லாத்தையும் சரி பண்ணிடலாம் என்று கதிர் ஆறுதலாய் பேச

விரக்தியாய் சிரித்தவள் இன்னும் என் வாழ்க்கையில நான் சந்திக்க வேண்டியது நிறையா இருக்கு கதிர் நான் அந்த நாளை யோசிச்சிட்டு இருக்கேன். அந்த நாள் என் வாழ்க்கையில் சீக்கிரம் வந்துட்டா என் குற்ற உணர்ச்சி என்னை கொல்ற சித்ரவதையில் இருந்து நான் பிழைப்பேன் என்று சொல்ல

என்னமா சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே என்றான்

ம் உன் அம்மா ஒரு சுயநலவாதி கதிர், நீ நினைக்கிற அளவுக்கு நான் நல்லவ கிடையாது. கதிர் ,ராசாத்தியை நீ வற்புறுத்தி எந்த காரியத்தையும் செய்ய சொல்லாத. ஒரு வேளை அவளுக்கு உன்னை பிடிக்கலைன்னா அவளை என்று மேற்கொண்டு பேச இயலாமல் நிறுத்திவிட

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையாsaaru 2018-07-10 17:25
nice update
trumba kathir kudika porana nooooo
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையாThenmozhi 2018-07-09 18:34
nice update Prama (y) (y)

Ilampirai life-l nadanthathu muzhusa therijuka curious aga iruku.

Kathir-ku Janani mela love irunthathaga thonalai, so Ilampirai ninaikura mathiri ilama avanga than avaroda first love-nu ninaikiren.

Kathir and Ilampirai life sariyaga avaroda appa company-i apadi ezhuthi vachara?

Yen Ilampirai apadi koba pada poranga? Ena nadaka poguthu?

Waiting to read ji :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையாmahinagaraj 2018-07-09 10:39
sema episod mam.. :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையாAdharvJo 2018-07-08 20:08
:D interesting epi prema ma'am :dance: :clap: :clap: but indha terror statements dhaan konjam terrific aga irukku....moon kadhir pattri thapaga ninaikurangalo :Q: en ippadi Adam pirikiranga??? Office varamatangana oppo will she go and stay with?? Marubadiyum sq one-k kadhir en varanum :eek: :eek: eppodhu thaan nangal vidai kanvom :sad: waiting for next update. Thanks for this cute update.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையாrspreethi 2018-07-08 18:15
Nice update.... Enjoy panni padichutu irundhen last la ippadi sollitingalea naa yenna seiven :sad: Baby moon um paavam dha... Yeadho paathu pannunga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையாmadhumathi9 2018-07-08 13:32
:clap: nice kathir pannugira alumbai ilavaal thaanga mudiyuma:Q: waiting to read more. (y) :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையாSAJU 2018-07-08 12:26
NICE UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையாPadmini 2018-07-08 11:18
Very Interesting update Prema!! Kathir romance is super!! feeling sad that Kathir will get into trouble again. dont make him hurt again... Eagerly waiting for next update :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top