(Reading time: 9 - 17 minutes)

“நான் முதன்முதலில் பார்த்த சமுத்திராவிற்கும் இப்பொழுதும் பார்க்கும் சமுத்திராவிற்கும் கடலளவு மாற்றம்.. இந்த மாற்றம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அதனால் இந்த கைத்தட்டு..”, என்ற மொழி, “பசங்களுக்கு வேலையை பகிர்ந்து கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.. நாம் இருவரும் மதியம் அங்கு சென்றால் போதும்..”

“ஏன்..??”

“எல்லாம் நம்ம நிஷாவின் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து தான்..”, என்று சிரித்தவர், “நான் உங்கள் இருவருக்கும் இடையில் பஞ்சாயத்திற்கு வரவேண்டும் என்று நினைத்து வந்தேன்.. பரவாயில்லை நீயே சமாளித்துவிட்டாய்..”, கண்சிமிட்டியபடியே..

மொழியை முடிந்த மட்டும் முறைத்த சமூ, “உனக்கு கொலஸ்ட்ரால் லெவல் கூடிப்போச்சுல அதான் நீ ரொம்ப பேசற..”, என்றுவிட்டு இருவரையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு நின்றிந்த நிஷாவை கல்லூரிக்கு கிளம்புமாறு விரட்டினார்..

முகம் சுண்டிப்போனவள் அவரின் பேச்சைத்தட்ட வழியில்லாது தனது அறையை நோக்கி போனாள்..

நிஷா தனது அறைக்கு சென்று மறைந்ததும், “ரொம்ப பயந்துட்டா மொழி அவ பாவம்..”, என்றார் சமுத்திரா..

“பார்த்தாலே தெரியுது.. நாம் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் கடந்துவிட்டோம்.. இவள் அப்படி இல்லையே.. போகப்போக எல்லாம் சரியாகிவிடும்..”, சமாதானமாக..

“சரியானால் சரி..”, என்ற சமூ, “செல்வி..??”, கேள்வியாய்..

“இன்னைக்கு பேப்பர் போலிஸ் ஸ்டேஷனுக்கு போயிருந்துச்சுன்னா இந்நேரம் அவள் யார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. வந்திடுவா சீக்கிரம்.. நீ கவலைப்பாடாதே..”

ல்லூரிக்கு கிளம்பிய நிஷா வாசலுக்கும் தனது ரூமிற்கும் ஒரு பத்து தடவையேனும் நடந்திருப்பாள்..

அதைக்கண்ட சமுவிற்கும் மொழிக்கும் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி அவள் செய்வதை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருதனர்..

சமயம் எட்டைத் தொட்டிருக்க இன்னும் செல்வி வீட்டிற்கு வந்து சேரவில்லை..

பொறுமை மொத்தத்தையும் இழந்துகொண்டிருந்தாள் நிஷா..

இன்னும் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் பொருத்துப்பார்க்கலாம்.. அதற்குள் செல்வி வரவில்லை என்றால் ஸ்டேஷனுக்கே போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்தவள் சோபாவில் அமர்ந்திருந்த மொழிக்கும் சமுவிற்கும் நடுவில் அமர்ந்துகொண்டான்..

நிஷாவை அதிகம் காக்க வைக்காது ஒரு ஆட்டோவில் வந்திறங்கினாள் செல்வி..

செல்விக்கா வந்தாச்சு என்று சந்தோஷத்துடன் கத்திக்கொண்டே துள்ளிகுதித்து செல்வியிடம் பறந்த நிஷா அவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்..

அதில் ஒரு நொடி திகைத்து பின்னால் நகர்ந்த செல்வி நிஷாவை லேசாக அணைத்து விடுவித்தாள்..

நீல நிற சல்வாரில் காலேஜ் ஐடியை மாலையாக போட்டபடி தன் முன்னே நின்றிருந்த நிஷாவைக் கண்டதும் கண்டதும், “டைம் என்னாச்சு நிஷார்த்திகா..??”, என்று கேட்டாள்..

தன் முழுப்பெயரைக் கொண்ட தன்னை அவள் விளித்ததிலேயே புரிந்தது நிஷாவிற்கு.. செவியின் கோபத்தின் அளவை..

வெளியே வராத குரலில், “எட்டு பத்து”, என்றாள்..

“காலேஜ் ஆரம்பிக்க இன்னும் முப்பத்தி ஐந்து நிமிடங்கள் இருக்கு போல.. இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் கிளம்பினால் ஒருமணிநேரத்தில் சென்றுவிடலாம் அல்லவா..??”, நக்கலாகவே ஒலித்தது செல்வியின் குரல்..

“அது வந்து.. அப்படி இல்லைக்கா.. நீங்க..”, சமந்தமில்லாமல் உளறிக்கொட்டினாள் நிஷா..

அவளை முறைத்தவாறு நின்றிருந்த செல்வியைப்பார்ததும் பயத்தில் வேர்த்துக்கொட்டியது நிஷாவிற்கு..

அதற்குள் வெளியே ஆட்டோவிற்கான காசுடன் வந்த மற்றிருவரும் வழக்கம் போல் நிஷா முழித்துக்கொண்டிருப்பதைக் கண்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு ஆட்டோவிற்கு காசு கொடுக்கும் சாக்கில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்..

“உளறுவதை முதலில் நிறுத்து நிஷா..”, என்று சிறிது கடுமையைக்காட்டிய செல்வி, “இன்னும் இரண்டு நிமிடத்தில் நீ இங்கிருந்து கிளம்பவேண்டும்..”, என்றாள் கட்டளையாக..

மண்டையை உருட்டியவள் அவசராமக உள்ளே சென்று அவசரவசரமாக தன் பொருட்களை எடுத்துக்கொண்டு சமுவிடமும் மொழியிடமும் சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பியிருந்தாள் (பறந்திருந்தாள்)

நிஷா சென்ற திசையைப் பார்த்து வெறித்தபடி நின்றிந்த செல்வியைக் சமுத்திராவிடம் காட்டிய மொழி அவளை ஒரு உலுக்கு உலுக்கினார்..

என்னவென்பது போல் பார்த்தவளிடம் சமூ,“உனக்கும் நேரமாகுது.கிளம்பு.”,என்றார் அமைதியாக.

அவருக்கு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவள் தன் முகத்தை இயல்பாக்கிக்கொண்டு உள்ளே விரைந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.