Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - தாரிகை - 01 - மதி நிலா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - தாரிகை - 01 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2002..

இடம் : கல்கட்டா ரயில் நிலையம்..

முகத்தை துப்பட்டாவால் மறைத்து ஜன்னல் கம்பியில் தலையை சாய்த்தவாறு ஹவ்ரா சென்னை மெயிலில் அமர்ந்திருந்திருந்தாள் ஒரு நங்கை..

அவளொரு திருநங்கை..

மதுரை மண்ணில் சமுத்திரனாக பிறந்தவள் அவள்..வீட்டின் ஒரே வாரிசு..முடிசூடா இளவரசன்..

பதினொன்றாம் வகுப்பின் இறுதியில் தன்னுடலில் நிகழும் மாற்றம் உணர்ந்து வீட்டினரிடம் அதனை மறைக்காமல் தைரியமாக தெரிவித்தவ(ன்)ள்..

அதனால் உண்ண தனி தட்டையும் படுக்க வெளித் திண்ணையையும் பரிசாகப் பெற்றவ(ன்)ள்..

பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் அவளை அவனாக மாற்ற முடியுமென்று ஒருவன் சொன்னதை நம்பி தேர்வு முடிந்த அடுத்த தினம் வீட்டை விட்டு சில இலட்சங்களுடன் வெளியேற்றப்பட்டவ(ன்)ள்..

அறுவை சிகிச்சை முடிந்து சமுத்திராவாக மாறிய மயக்க நிலையில் விற்கப்பட்டு நரகத்தில் அடைக்கப்பட்டவள்..

ஆம், நரகமே அது..சோனாகச்சி, இரண்டு ஆண்டுகள் அவள் சிறைபட்டிருந்த நரகம்..

திரும்பிய இடமெல்லாம் பாலியல் தொழிலாளிகளே அங்கு..அது சுமார்  பதினோராயிரம் பாலியல் தொழிலாளிகள் வசித்து வரும் குறுநகரம்..

பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தால் நிறுவப்பட்ட இந்தியாவின் பெரிய சிவப்பு விளக்கு மாவட்டம்..

ஆசியாவின் மிக பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்ற புகழும் உண்டு சோனாகச்சிக்கு..

அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட வடு குணமாகும் வரை அவ்விடம் இந்திராவிற்கு சொர்க்கமாய் இருந்தது..

அதன் பிறகு அவள் அனுபவித்தது வலி..வலி..வலி மட்டுமே.. 

முழுதாக இரண்டு ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது அந்நரகத்திலிருந்து சுதந்திரம் பெற..அவர்கள் அளித்த சுதந்திரம் அல்ல..

அவள் அங்கிருந்து தப்பித்து வந்ததால் கிட்டிய சுதந்திரம்..

கையிலிருந்த காசை வைத்து ரயில் நிலையம் வந்தடைந்தவள் சென்னைக்கொரு டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தாள் கம்பியில் தலை சாய்த்த வண்ணம் அது ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் என்பதை கவணிக்காமல்..

சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்த அந்த இரயில் நிலையம் அவளை ஏனோ ஈர்க்கவில்லை..

கல்கட்டாவின் சுவை மிகுந்த சூடான டீயின் (chai) மனமும் அவளது பசியை தூண்டவில்லை..

கருவளையம் ஏறிய வெறித்த விழிகள் வெளிக்காட்சிகளை உள்வாங்க இயலாமல் மறத்துப்போய் வெறித்துக்கொண்டிருந்தது..

மிழ்நாட்டுக்கு ஒரு ஓ போடு..”,என்று தரண் (எ) தரண்யன் சத்தமாக கத்த அவனை சுற்றியிருந்த கூட்டம்,“ஓ...ஓ...ஓ..”,என்று பின்பாட்டு பாடியது அந்த கல்கட்டா இரயில் நிலையமே அதிரும் வண்ணம்..

“ஆர் எம் ஸ்கூலுக்கு ஒரு ஓ போடு..”

“ஓ...ஓ...ஓ..”

“நல்லா போடு..”

“ஓ...ஓ...ஓ..”,சத்தத்தை சற்று அதிகாமாக்கிய மாணவர்கள் சிறு ஆட்டம் ஒன்று ஆடத் துவங்கினர்..

நடுநாயகமாக இருந்த தரண் முதல் நாள் டி வி’யில் பார்த்தது போல் ஒரு கோக் பாட்டிலை எடுத்து ஒரு குலுக்கு குலுக்கி அதன் மூடியை திறந்தான் உற்சாகமாய்..

நுறையுடன் வெளியே பொங்கி வந்த கோக் தாறு மாறாய் சுற்றி நின்றிருந்த அனைவரின் மேல் தெறித்து அவர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது..

அங்கு மீண்டும் ஓவென்ற சத்தமும் கூச்சலும்..

“தரண்..வெற்றி சார் வரார்டா..வாங்க ட்ரைன் ஏறலாம்..”,என்றான்  கதிர் (எ) செங்ககதிர்வேலன் தரணின் தோளைத் தட்டி..

வெற்றி என்ற பெயர் தரணை அசைத்தது போலும்..

“டேய்..நானும் கதிரும் முதலில் உள்ளே போறோம்..நீங்கெல்லாம் சார் கூட வாங்க..”,என்று மற்றவர்களைப் பார்த்து சொன்னவன் தாவி ஏறினான் ரயிலில்..

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் 

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்..”

இவ்விரண்டு வரிகளை திரும்பித் திரும்பி பாடிக்கொண்டு ரயிலின் உள்ளே நடந்தவன் தங்களது பெர்த்தில் (seat) ஒரு பெண் அமர்ந்திருப்பது கண்டு கதிரிடம்,“இருபத்தி அஞ்சுல இருந்து முப்பத்திரண்டு வரைக்கும் நம்ம சீட்டுனு தானே வெற்றி சார் சொன்னார்..??”,என்று கேட்டான்..

“ஆமாடா..இந்த போர்ஷன் தான் நம்மளோடது தான்..”,என்றான் கதிர் சமுத்திரா அமர்ந்திருக்கும் சீட்டைக் காட்டி..

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Madhi Nila

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
 • NA
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - தாரிகை - 01 - வசுமதிDevisree 2018-01-17 14:46
wow mam.. Super intro.. as usual ur story line amazing.. Thirunangaigalukkum nammai pol ella urimaigalum kidaikanum.. Avargalukkana mariyathaiyai ellorum tharanum.. Ini varum thalaimuraigalavathu avargalai mariyathaiya nadaththanum.. Avargalai patriya purithal unga Tharagai moolam avargalai othukkum silarukku purinthal nallathu..
Nisharthika character super..let see what happen here after.. Good to see this type story of yours.. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாரிகை - 01 - வசுமதிVasumathi Karunanidhi 2018-01-23 17:33
thanks u devisree mam..
ennal mudintha alavirku ezhutha try pandren mam..
happy to see these typ of comments..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாரிகை - 01 - வசுமதிmahinagaraj 2018-01-17 12:56
amazing ..... :hatsoff: :hatsoff: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாரிகை - 01 - வசுமதிVasumathi Karunanidhi 2018-01-23 17:33
thank u mahi..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாரிகை - 01 - வசுமதிAdharvJo 2018-01-15 17:20
Trust all is well Miss :cool:

Unga theme-k oru :hatsoff: Purakanikka patta Purakanika padugindra group NAH let’s stop thinking this way “One among us who deserve to live rightfully with all the opportunities like any of us” :yes:

Unga narration as all ways very precise n lively.

It is bit painful to knw the journey of transgender but kandipa avangalukana angigaram muzhumaiya kidiakumn nambuvom not just in stories n movies 

I like the way you have projected this epi. Thirunangaikal pattri theriyama avangala indifferent ah pakura oru group, Group which treat them equally, Vulgara parkum oru kuttam n the last one namakku name kai koduthupom engira thirunagaikalin ottrumai :clap: :clap: Nala irundhadhu Sis. Hope indha epi la avangla indifferent ah parkura group get to know the real face of them. There is nothing wrong being a transgender-n ellarukkum puriyavaipingan nambi looking forward for the upcoming epi’s. :GL: Miss
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாரிகை - 01 - வசுமதிVasumathi Karunanidhi 2018-01-23 17:35
thnkz jo...
happiee to see ur comments..
yup they are also humans lyk us..i agree ur point..
purithal illathathuthan main reason jo..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாரிகை - 01 - வசுமதிmadhumathi9 2018-01-15 12:12
:clap: Nall thodakkam. Thirunangai kathai patri varuvathu arithu thaan. Adutha ep eppadi irukkum, thakka nerathil udhavi seivathu yaar endru therinthu kolla varapogum epiyai miga aavalaaga ethir paarkkirom. :thnkx: 4 this epi. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாரிகை - 01 - வசுமதிVasumathi Karunanidhi 2018-01-23 17:35
thanks u madhumathi..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாரிகை - 01 - வசுமதிShanthi S 2018-01-15 06:09
Nice start Vasumathi.

Puthiya kathai, athilum samuga akkarai ulla kathaiyai thodangiyatharku vazhthukkal.

Samuthravirku avanga ethirpartha varaverpu kidaithirukathunu thonuthu.
Nisharthika bold anavangala theriyuranga. That's good!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாரிகை - 01 - வசுமதிVasumathi Karunanidhi 2018-01-23 17:36
thank u shanthi mam..
Reply | Reply with quote | Quote
+1 # TharikaiSuveni 2018-01-14 19:20
Different story. Indha ulagathil Ulla entha oru uyirum perumathiyanathu. Ellorukkum unarvukal undu. Athanai
Naam mathikka vendum. Good job and good luck. :clap:
Wait for next episode. God bless you.
Reply | Reply with quote | Quote
# RE: TharikaiVasumathi Karunanidhi 2018-01-23 17:37
thank u suveni mam..
kandippa ellarum equal than..silar athai purinthu kolvathillai..
Reply | Reply with quote | Quote
+1 # RE:தொடர்க்கதை-தாரிகை 01-வசுமதிsamee 2018-01-14 12:26
மிகவும் வித்தியாசமான கதைகரு..! புதிய முயற்சி ..சமூகத்தில் அங்கீகாரம் இன்று எவ்வாறு இருக்கின்றது என்று நேர், எதிர் என யதார்த்தமாக கதைப்போக்கில் கூறியிருப்பது அருமை.. Vaazhthukkal mathii ...arumaiyana epi :hatsoff: :clap: waiting 4 the next epi☺ :GL:
Reply | Reply with quote | Quote
# RE:தொடர்க்கதை-தாரிகை 01-வசுமதிVasumathi Karunanidhi 2018-01-23 17:38
nandrikal adavadiii.. :P
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top