(Reading time: 21 - 42 minutes)

“அந்த அக்கா சீட் நம்பர் பார்க்காம இங்க உட்கார்ந்துட்டாங்கன்னு நினைக்கறேன்..”,என்ற தரண் தலை சாய்த்து அமர்ந்திருந்தவளை நெருங்கி,”அக்கா..அக்கா..”,என்றழைத்தான்..

அவளிடமிருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாததால் அவளின் தோளை தனது கையிலிருந்த பாட்டிலால் தட்டினான்..

எதுவோ தன்னை உரசும் உணர்வில் நிமிர்ந்து பார்த்த அப்பெண் அம்மாணவர்களை கண்டு மலங்க மலங்க விழிக்கத் துவங்கினாள்..

தரண் அவளைக் கண்டு முதலில் மிரண்டு அடுத்த கணம்,”ஏய்..இது எங்க இடம்..இடத்தை காலி பண்ணு..”,என்று கத்தினான் அருவருப்பாக..

அக்குரலில் பயந்து போனவள் சற்று நிதானித்து,”நான் டிக்கேட் எடுத்திருக்கேன்..”,என்றாள் சிறிது படபடத்த குரலில்..

“நாங்களும் தான் டிக்கெட் எடுத்திருக்கோம்..”,என்று எரிச்சலாக மொழிந்தவன்,”இது ரிசெர்வேஷன் சீட்..முதலில் இங்கிருந்து எந்திரி..”,என்றான் எள்ளலாக..

அவன் சொன்ன பிறகு தான் சுரணை வந்தது போல் சுற்றுப்புரத்தை நோட்டமிட்டவள்,”சாரி தம்பி கவனிக்காம ஏறிட்டேன்..”,என்று தன்மையாக மொழிந்தபடி சீட்டை விட்டெழுந்தாள்..

“என்னது..?? நான் போயி உனக்கு தம்பியா..??”,என்று கொந்தளித்தவன் அவளை முறைத்துப் பார்த்தான்..

தரணின் பார்வையில் கூவிக் குறுகியவள் தலை கவிழ்ந்தபடியே தளர்வாய் அவ்விடத்தை விட்டு அகலத்துவங்கினாள்..

அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்த ஒரு பையைக் கண்டவன் அதனை இரு விரல்களால் எடுத்து அவள் முகத்தில் விட்டெறிந்து,“எடுத்துட்டு போடி..”,என்றான்..

எதுவும் பேசாமல் அதனைக் கையில் வாங்கியவளைக் கண்டு,”ஆமா..நீ டீ யா இல்லை டா வா..??”,என்று கேட்டான் நக்கலாக..

ரண்யா.. என்ன பேச்சு இது..??”,பின்னால் இருந்து கேட்ட வெற்றியின் குரல் தரண்யனை தூக்கிவாரிப்போட்டது..

தனது திணறலை மறைத்து,”சார்..இது நம்ம சீட்ல வந்து உட்கார்ந்திருந்துச்சு..அதான் எழுந்து போக சொன்னேன்..”,என்றான்..

“என்னதிது தரண்யன்..?? அவங்களை மரியாதை இல்லாமல் அது இதுன்னு சொல்லிக்கிட்டு..?? சாரி கேளு முதலில்..??”,அதட்டல் போட்டான் வெற்றி..

“இதுக்கெல்லாம் மரியாதை கொடுக்கனுமா..??”,என்று மனதில் நினைத்தவன் அந்த எண்ணத்தையே தனது முகத்தில் காட்டியபடி வெற்றியைப் பார்த்திருந்தான்..

அவனது முகத்தை ஏறிட்ட வெற்றிக்கு கோபம் தலைக்கேறத் துவங்கியது..

பொறுமையை இழுத்துப் பிடித்தபடி,”அவங்கக்கிட்ட சாரி கேளுனு சொன்னேன்..”,என்றான் அழுத்தமாக..

வெற்றியை இடையிட்ட சமுத்திரா சன்னமான குரலில்,”வேண்டாம் சார்..சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான்..விடுங்க..”,என்றாள்..

தரண்யனின் செயலில் கடுப்படைந்திருந்தாலும் சமுத்திராவை சங்கடப்படுத்த வேண்டாம் என எண்ணி வெற்றியே அவளிடம்,”அவன் பேசினது தப்புதான் மன்னித்து விடுங்கள்..”,என்றான் கைகூப்பி..

“ஐயோ..பரவாயில்லைங்க..”,என்றவள் தளர்வாக நடக்கத் துவங்கினாள் அப்பெட்டியின் கதவை நோக்கி..

அவள் போவதை பார்த்துக்கொண்டிருந்த வெற்றியிடம்,”எதுக்கு சார் அதுக்கிட்டை எல்லாம் சாரி கேட்கறீங்க..??”,என்று கேட்டான் தரண்..

தனது பொறுமையை முற்றிலும் இழந்த வெற்றி தனது கோபம் தாளாமல் தரணின் கன்னத்தில் அடித்தே இருந்தான்..

வெற்றி தன்னை அடிப்பான் என எதிர்பாராத தரண் அதிர்ச்சியாக,“சா..சார்..”,என்றான் கண்களில் நீருடன்..

“என் ஸ்டுடென்ட் கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல..ஒரு டீச்சரா உன்கிட்ட தோத்துப்போய்ட்டேனோன்னு தோனுது..”,என்றவன் தரணின் திகைத்த பார்வையை உதாசினப்படுத்தி தனது பெர்த்தில் கண்மூடி படுத்துக் கொண்டான்..   

ளர்ந்த நடையுடன் பெட்டியின் கதவருகில் வந்த சமுத்திரா அதன் மேலேயே சாய்ந்து அமர்ந்து முகத்தை முழங்காலில் புதைத்து அழத் துவங்கினாள்..

மனதில் வெறுமை..வெறுமை..வெறுமை மட்டுமே..

தனது கனவுகளெல்லாம் இந்த உடல் மாற்றத்தால் சிதைந்து போனது ஒரு புறம் நினைவு வந்து அழுகையைக் கூட்டியது என்றால் ஒரு பன்னிரெண்டு வயது பையனின் உதாசீனம் உடைந்து போகவே செய்தது..

அப்பொடியனின் பேச்சையே என்னால் தாங்கிக்கொள்ள முடியலையே..எப்படி என்னால் இச்சமூகத்தை எதிர்கொள்ளமுடியும்..??

இந்த எண்ணம் மனதுள் தோன்றியவுடன் செத்துப்போய்ட்டால் என்ன..?? நான் இல்லைன்னு யார் அழப்போறா..?? கழிவிரக்கத்தால் சட்டென எண்ணங்கள் உருவானது அவள் மனதில்..

ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை அந்நங்கை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.