(Reading time: 21 - 42 minutes)

“அக்கா..என் கூட எங்க ஊருக்கு வரீங்களா..??எனக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும்..”,என்றாள் மொழியின் முகம் பார்த்து தயக்கமாக..

எதையும் யோசிக்காமல்,”எனக்கு பதினைந்து நாள் லீவ் கொடுத்திருந்தாங்க பூங்குழலி மேம்..அதுல எட்டு நாள் கல்கட்டால போயாச்சு..அடுத்த ஏழு நாள் மதுரைக்குன்னா மாத்தவா முடியும்..”,என்று கண்சிமிட்டினாள் மொழி..

மதுரைக்கு இவர்களது பயணம் துவங்கியது..அடுத்த கட்டத்தை நோக்கி..

மொழி சொன்னது போல் சமுத்திராவின் பெற்றோர்கள் அவளுக்காகக் காத்திருப்பார்களா..??

வருடம் : 2017..

இடம் : கோவை மருத்துவ கல்லூரி..

செமெஸ்டர் லீவெல்லாம் முடிந்து அன்று தான் கல்லூரி தொடங்கப்பட்டிருந்தது..முதல் வருட மாணவர்களுக்கு முதல் நாளும் அன்றே..

கல்லூரி தொடங்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்ததால் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்..

“யாரு மச்சி அந்த ரதி..?? யாராப்பாத்தாலும் அந்த புள்ளலைய பத்தியே பேசிட்டு போறாங்க..??”,தனது டுக்காட்டியில் சாய்ந்தமர்ந்து தனது தோழன் பிரஜித்திடம் கேட்டான் கவின்..

“அது ரதி இல்லை.. நிஷார்த்திகா..நியூ ஜாயினி..”,என்றான் பிரஜித்..

“என்னது..?? நியூ ஜாயினியா..??”,என்று கேட்டான் கவின் ஆச்சரியமாக..

“ஆமா..இந்த வர்ஷம் நடந்த ப்ளஸ் டூ எக்ஸாம்ல அவ தான் ஸ்டேட் பிரஸ்ட்..”

“ரொம்ப படிப்பிஸ்ட்டோ..”,குறுக்கே கேள்விகேட்டான் கவின்..

அவனை முறைத்த பிரஜித்,”அது மட்டும் இல்லை..நீட்ல ஆல் இந்தியா லெவல் ரேன்க் ஹோல்டர்..”

“ஓ..அதனால தான் எல்லாரும் அந்த பெண்ணைப் பார்க்க ரொம்ப ஆவலா இருக்காங்களா..??”

“அதுவும் ஒரு காரணம்..ஆனால் அதுமட்டும் ரீசன் இல்லை மச்சி..”என்று பில்டப் கொடுக்கத் தொடங்கிய பிரஜித்தை இடையிட்ட கவின்,“ரொம்ப அழகா இருக்குமோ  பொண்ணு..??”,என்று கேட்டான் சற்றே சிறிது நக்கலாக..

“ப்ச்..சொல்லறத கேளு மச்சி குறுக்க பேசாம..”,என்றான் பிரஜித்..

“சரி சரி..சொல்லு..சொல்லு..நான் இடையில் பேசல..”,என்று சரண்டர் ஆனான் கவின்..

“நிஷார்த்திகா தமிழ்நாட்டில் மெடிசின் படிக்க வரும் முதல் திருநங்கை..”,என்றான் பிரஜித்..

“வாட்ட்ட்...??”,இது அதிர்ச்சியா ஆச்சர்யமா..??

ட்ர்ர்ர்ர்..ட்ர்ர்ர்ர்..தனக்கு பின்னால் கேட்ட ஒரு ஸ்கூட்டியின் ஒலியில் சுயநினைவடைந்த கவின் என்னவென்பது போல் திரும்பிப் பார்த்தான்..

“எக்ஸ்க்யூஸ் மீ..வண்டி நிறுத்தனும்..கொஞ்சம் தள்ளி நிற்கிறீர்களா..??”,மஞ்சள் வண்ண சுடிதாரில் ஹெல்மெட் அணிந்த படி கேட்டாள் ஸ்கூட்டி பெண் கண்களில் கனலுடன் அவர்களை எரித்தபடியே..

அவளது கோபத்தை கவனிக்காதவன்,”யா..சாரி..ஒரு நிமிஷம்..”,என்றுவிட்டு டுக்காட்டியில் இருந்த தனது பேக்கை எடுத்துக்கொண்டு பிரஜித்திடம்,”கொஞ்சம் ஷாக்கிங் டா..பட் இவங்கள மாதிரி இருக்கறவங்க படிக்கறாங்கன்னு கேட்கும் பொழுது நல்லா தான் இருக்கு..”,என்றபடி வகுப்பறையை நோக்கி செல்லத் துவங்கினான்..

ஹெல்மட்டை கழட்டியவள் கண்ணில் இப்பொழுது சிறு குற்ற உணர்வும் சிறிது ஆச்சர்யமும்..

உங்க கெஸ் கரெக்ட் தான் மக்களே..இவங்க தான் நிஷார்த்திகா..  

தன்னைப் பற்றிப் இருவரும் பேசத் துவங்கும் பொழுதே அங்கு வந்துவிட்டவள் வாட்ட்ட் என்ற கவினின் கேள்வியில் கோபம் கொண்டாள்..

அதன் வெளிப்பாடே அவளது ஸ்கூட்டி சத்தமாக உறுமியதும் அவள் அவர்களிடம் கோபமாக பேசியதும்..

அவள் பேசியதைக் அவன் இயல்பாக எடுத்துக்கொண்டதும் பிரஜித்திடம் தனது எண்ணத்தை இயல்பாக வெளிப்படுத்தியதும் அவளிற்கு ஒரு ஆச்சர்யத்தையும் அவன் மேல் சிறு மரியாதையையும் ஏற்படுத்தியது என்றால்,அவனைப் பற்றி அவள் நினைத்தது சிறு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது..

 தனது தலையை லேசாக உலுக்கியவள் தனது பேக்கை எடுத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி நடக்கத் துவங்கினாள்..

அவளை பல கண்கள் மொய்ப்பது அறிந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆபிஸ் ரூமிற்கு சென்றாள்..

அங்கிருந்த இன்சார்ஜிடம் தனது ஐ டி கார்டை பெற்றுக் கொண்டவள் தனது வகுப்பறைக்கான வழியைக் கேட்டுக்கொண்டு அங்கு சென்றடைந்தாள்..

வகுப்பறையில் ஒரு பதினைந்து பேர் அமர்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க இவள் உள்ளே நுழைந்ததும் அமைதியும் ஒரு வித ஒதுக்கமும்..

அதை எல்லாம் கண்டுகொள்ளாதவள் காலியாக இருந்த முதல் வரிசையில் அமர்ந்து கொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.