தொடர்கதை - என் காதலின் காதலி - 02 - ஸ்ரீ
“வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)
நீலம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம்தோரும் என்னை சேறும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்..”
அடுத்த இரண்டு நாட்களும் ஏஞ்சலிடம் ஏதோ காரணம் சொல்லி வகுப்பிலேயே சாப்பிட ஆரம்பித்திருந்தாள்..மூன்றாவது நாள் காலை அவள் உள்ளே நுழைய சற்றுதூரத்தில் அமர்ந்திருந்த ஒரு கேங் அவளை கைத்தட்டி அழைக்க ஐயோ போச்சு மாட்னேன் என நினைத்தவள் அங்கே சென்றாள்..அதில் ரகுவும் இருந்தான் இருந்தும் அவள் அவனை தெரிந்தாய் காட்டிக் கொள்ளவில்லை..முதலில் அவளை சீண்ட வேண்டாம் என்று நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்தவன் அவள் தன்னை கண்டும் காணால் இருப்பதை பார்த்து அவனே ஆர்வமானான்..
அவன் அருகிலிருந்தவன்,”ஆமா எந்த டிபார்ட்மெண்ட்??உன்ன இங்க பாத்தது இல்லையே???”
“பி.எஸ்.சி மேக்ஸ்..நியூ அட்மிஷன்..”
“ஓ பார்ரா..நியூ அட்மிஷன்ங்கிற சீனியர்ஸ்க்கு மரியாதை குடுக்காம நீ பாட்டுக்கு போற..”
எனும்போதே அங்கு வந்த பெண்ணொருத்தி”,ஹே உன்னை ட்ராப் பண்ணது யாரு???”
“என் அண்ணா..”
“டேய் கௌதம் இவள என் வருங்கால நாத்தனாரா ஏத்துக்கலாம்னு இருக்கேன் விட்டுரா பாவம்” என அவள்கூற அனைவருமாய் சிரித்தனர்..
“சரி சரி போய் கேன்டீன்ல எங்களுக்கு சூடா சமோசா வாங்கி குடுத்துட்டு க்ளாஸ்க்கு போ”, என்று ஒருவன் கூற..
எரிச்லடைந்தவள்,” என்ன ரேகிங்கா??இதெல்லாம் நா கம்ப்ளைண்ட் பண்ணா என்னாகும் தெரியுமா??போனா போகுதுநு அமைதியா இருந்தா ரொம்ப பண்றீங்க நா நினைச்சா உங்களை என்ன பண்ணுவேன் தெரியுமா???”
“தோடா பெரிய இவங்க??என்ன பண்ணிடுவ???”
“ம்ம் இந்த காலேஜே என் மாமாவோடதுதான் ஒரு வார்த்தை சொன்னா போதும் அத்தனை பேர் சீட்டையும் கிழிச்சு குடுத்துருவாரு எப்படி வசதி”, என பயத்தில் இஷ்டத்திற்கு உளர அனைவருமாய் ரகுவை பார்க்க அவனோ அவளை ரசித்து சிரித்தவாறு,” சரி ஏதோ தெரியாம பண்ணிடாங்க நீ போ..”என்று கூற தப்பித்தால் போதுமென அவர்களை கடந்துச் சென்றுவிட்டாள்..
அனைவரும் தன்னை கேள்வி கேட்பதற்குள் அவளை பின் தொடர்ந்தவன்,”ஆனாலும் உனக்கு இவ்ளோ திமிரு இருக்க கூடாது “,என்றான் அவளோடு நடந்தவாறு…
அவனை கண்டுகொள்ளாமல் நடந்தவளை கண்டவன்,” உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்..”
“இப்போ உங்களுக்கு என்ன வேணும் அவங்களுக்கு சொன்னதுதான் உங்களுக்கும் எங்க மாமா ரொம்ப கோவகாரர் அப்பறம் உங்க இஷ்டம் “,என நின்று அவனை முறைக்க,
சத்தமாகவே சிரித்தவன்,”எங்கப்பா இப்படி ஒரு மருமக இருக்கிறதா என்கிட்ட சொல்லவேயில்லையே”, என மீண்டும் சிரித்தான்..
அவன் கூறியதை தனக்குள் கூறிப் பார்த்தவள் ஒரு நொடி மயங்கி விழாத குறைதான்..”கரஸ்பாண்டண்ட் உங்க…”
“ம்ம் என் அப்பா..நீ சொன்ன மாதிரி இல்ல நிஜமாவே”, என புருவமுயர்த்தி என்னவென கேட்க அவளுக்கோ ஐயோ என்றாகி விட்டது..
“ரியலி சாரி அவங்க போட்ட மொக்க தாங்காம தான்..தப்பா எடுத்துகாதீங்க..”
“இட்ஸ் ஓ.கே.நீ பண்ண அலம்பல்ல சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறு வலிக்குது..இஃவ் யூ டோண்ட் மைண்ட் கேன்டீன் போலாமா??ஒரு காபி??”