(Reading time: 14 - 28 minutes)

“என்ன இவ்ளோ ஈஸியா கேக்குறீங்க??அதான் சொன்னேனே அப்பா அம்மா இருக்காங்கநு..”

“சோ வாட்???”

“என்ன வாட்??அப்பா கண்ணுல பட்டுருந்தீங்க நா செத்தேன் அப்பறம் என்ன காலேஜுக்கு அனுப்புறதேயே நிறுத்திப்பாரு..”

“ஹே இதென்ன கொடுமையா இருக்கு ப்ரெண்ட்னு சொன்னா அதுக்கே இப்படியா???”

“நாங்க சிட்டி வாசிங்க இல்லயே..அவ்ளோ ஈஸியா அக்ஸெப்ட் பண்ணிக்க,எங்க ஊர்லலா பையனும் பொண்ணும் பேசினாலே தப்பாதான் சொல்லுவாங்க..”

“அப்போ எப்படி நீ என்கூட பேசுற??”

“அடடா இப்போநா உங்ககூட பேசுறது உங்க ப்ரச்சனையா இல்ல நேத்து பேசாததா??”,என சிரித்தவாறே அருகிலிருந்த பைக்கில் சாய்ந்து நின்றாள்..

“ஹே எனக்கு ஒண்ணுமே புரில இப்போ என்னை நீ வெளில எங்கேயாவது பாத்து பேசினா அப்பா அம்மாகிட்ட நானே இன்ட்ரோ குடுப்பேன்..இதுல தப்பா நினைக்க ஒண்ணுயில்லதான???”

“பொண்ணை பெத்தவங்களோடதாட்ஸ் எப்பவுமே எக்ஸ்ட்ராடினரியாதான் இருக்கும்..அதுலயும் நா முதன்முதலா இன்ட்ரோ குடுக்குற பையன் நீங்கதான்ங்கிற பட்சத்துல அவங்க எப்படி யோசிப்பாங்க???”

“அப்போ வீட்டுக்கு தெரியாமதான் நீ என்னோட பேசுவியா??”

“கண்டிப்பா..அது அவங்கள ஏமாத்துறதா அர்த்தமில்ல..அவங்களோட கட்டுபாடுகளை நா கலைக்குறதா நினைச்சு அவங்க வருத்தபட கூடாதுநு தான்..அதே நேரம் எனக்கு என்னோட லிமிட்ஸ் தெரியும்..யாரோட எப்படி பழகணும்னு என்னால டிஸைட் பண்ண முடியும்..சோ உங்ககிட்ட பேசுறேன்..”

என்றவள் நிச்சயமாய் புதியவளாய் தெரிந்தாள்..அவனுக்கு தெரிந்த அவன் வகுப்பு பெண்களோ இல்லை தெரீந்த பெண்களோ மிகச் சாதாரணமாய் அவனோடு  பேசுவதை கேட்டுத்தான் பழக்கம்..இதுவரை அது ஒரு பெரிய விஷயமாக தெரிந்ததில்லை..ஆனால் இன்று இவள் கூறுவதெல்லாம் ஏதோ ஒரு கிரகத்தில் நடப்பதை கேட்பதாய் இருந்தது..

“எனக்கு ஒண்ணும் புரில”, என தோள்குலுக்கி அவன் நடக்க சிரித்வாறே அவனோடு சேர்ந்து நடந்தாள்..

“சரி இவ்ளோ ரெஸ்ட்ரிக்ஷனையும் தாண்டி நீ ஏன் என்கூட???”

“ஐய்யையேயேயே ஏன்னா நீங்க என்கூட பேசுறீங்களே..”

“ஹே.”

“பின்ன என்ன அதான் ரீசன்..ஒருத்தங்க நம்மகிட்ட பேசும் போது பேசாம மூஞ்சிய திருப்பிட்டு போக முடியுமா??பட் அட் த சேம் டைம் அந்தளவு அவங்க வொர்த்தான பீபுளானு பாக்கனும்”, என கண்சிமிட்ட,சற்று நேரம் கழித்தே அவள் கூறியது புரிய அவளை முறைக்க எத்தனித்து முடியாமல் சிரித்தான்..கேன்டினில் இருவருக்குமாய் காபி வாங்கிவிட்டு அமர்ந்தவன்,

“வாட் எவர் எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு..நா வீட்டுக்கு ஒரே பையன் சோ எந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸும் கிடையாது..ஈவன் ஏஞ்சல் கூட அப்படிதான்..”

“கரெக்ட்தான்..இப்போ காலம் எவ்வளவோ மாறிடுச்சு..ஆனா மிடில்க்ளாஸ் பொண்ணுங்களுங்கான கட்டுப்பாடுகள் அப்படியே தான் இருக்கு..”எனும்போதே பெல் சத்தம் கேட்க,

“ஓ.கே டைம் ஆச்சு நா கிளம்புறேன் லஞ்ச்ல மீட் பண்றேன் பை “,என பதில்கூட கேட்காமல் சென்றுவிட்டாள்..ஏனோ ரகுவிற்கு மனதிற்கு சந்தோஷமாய் இருந்தது..அவனோடு புதிதாய் பழகும் யாரும் இப்படி நடந்ததேயில்லை..காலேஜ் ஓனர் என்பதற்காகவே ஒருவித மரியாதை இருப்பதாய் காட்டிக் கொள்வார்கள்..ஆண் நட்புகளே அப்படி எனும் பட்சத்தில் பெண்கள் கேட்கவே வேண்டியதில்லை..பாதிக்கு மேல் பணக்கார மாணவ மாணவிகளே இருப்பதால் ஸ்டேடஸ் பார்த்து பழகும் கூட்டமே அதிகம்..

அப்படியிருக்கையில் இவளோ எதுக்கும் அசருவதாய் இல்லை..புதியவர்களுக்காக முகத்தில் காட்டும் அந்த திமிர்,பழகிய பின் வெகுளியாய் பேசும் குணம்,தான் இன்னாரின் மகன் என்று தெரிந்தும் அலட்டிக்காமல் பேசும் விதம் எல்லாமே ஏனோ முதல் முறையாய் நெருங்கிய தோழி ஒருத்தி கிடைத்ததாய் தோன்றியது அவனுக்கு..

வகுப்பில் கவனம் செல்லவில்லை எனினும் மதியம் அவளை பார்ப்பதற்காகவே பொழுதை தள்ளியவன் வழக்கமான நேரத்திற்கு சாப்பிட வந்தான்..மூவரையும் பார்த்தவள் ,”ஹாய் அண்ணா” என பொதுவாய் அகிலை பார்க்க,

விக்கி வேகமாய் ,”அம்மா தாயே அவனை மட்டும் அண்ணானு கூப்டு எங்களையும் கூப்டு அவமான படுத்திராத பசங்க கேட்டானுங்க அவ்ளோதான்”, என கூற ஏனோ ரகுவிற்கு நிம்மதியாய் இருந்தது..

“ஆமா ஏன் டெய்லி கேன்டின் சாப்பாடே சாப்டுறீங்க போர் அடிக்கலையா???”ஹரிணி..

“ம்ம் எங்களையும் உங்களமாதிரி டப்பா கட்டி ஸ்கூல் பசங்கமாதிரி வர சொல்றியா???”என அகில் சிரிக்க,

“அதுல ஒண்ணும் தப்பில்லையே டெய்லி வெளி சாப்பாடு சாப்டுறதுக்கு வீட்டு சாப்பாடு நல்லதுதான??”

“நல்லா சொல்லு ஹரிணி டெய்லி அம்மா அவனுக்கும் சேர்த்து தான் ரெடி பண்ணுவாங்க ஆனா இவன்தான் எதாவது சொல்லி வச்சுட்டு வந்துருவான்”, என ஏஞ்சல் குறைப்பட்டுக் கொண்டாள்..

“ம்ம் அவ்ளோ அக்கறை இருக்குறவ எனக்கும் சேர்த்து பாக்ஸை நீயே எடுத்துட்டு வா நா சாப்டுறேன்..”

“அப்படி ஒண்ணும் நீ சாப்ட்டு கிழிக்கவே தேவையில்ல..”

“ஐயோ ஆரம்பிச்சுடீங்களா???ஏம்மா உனக்கு இந்த வேலை ஏற்கனவே இதுங்க எப்போடா சண்டை போடலாம்னு அலையுங்க இதுல நீ டாபிக் வேற எடுத்துக் குடுக்குறியே!!!”விக்கி..

அனைத்திலும் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்து அவளை தான் கவனித்துக் கொண்டிருந்தான் ரகு..ஏனோ அவளீடம் பேச்சு வளர்த்துகொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு..தற்செயலாய் அவனை பார்த்தவள் என்னவென விழியால் கேட்க ஒண்றுமில்லையென தலையசைத்தவன் சாப்பிடுவதாய் தலை குனிந்து கொண்டான்..

ப்ரெண்ட்ஸ் எபி எப்படியிருந்தது..லேசாக ஹீரோ சாருக்கு லவ் எட்டி பாக்குற மாதிரி இருக்கே..

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1167}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.