(Reading time: 14 - 28 minutes)

என்ன சொல்வதென தெரியாமல் உடன் சென்று அங்கிருந்த டேபிளில் அமர்ந்தாள்..அவளுக்குமாய் காபி வாங்கி வந்தவன் அவளிடம் அதை நீட்ட தர்ம சங்கடமாய் இருந்தது அவளுக்கு..ஒரு சிப் பருகியவாறே அவளிடம் பேச ஆரம்பித்தான்..

“ஆனாலும் உனக்கு கட்ஸ் ஜாஸ்தி தான்..பொய்யை கூட அவ்ளோ தைரியமா சொல்ற???”

“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..”,என மெதுவாய் அக்கம் பக்கம் பார்த்தவள் மெதுவாய் அவனிடம்,”அக்சுவலா செம பயத்துல இருந்தேன் அதை வெளிக்காட்டிகாம தப்பிக்க தான் அப்படி பேசிட்டேன்..நா படிச்சது எல்லாமே கேள்ர்ஸ் ஸ்கூல் காலேஜ் தான் உண்மைய சொல்லனும்னா எனக்கு இங்க படிக்க இஷ்டமேயில்ல என் அண்ணன் லூசுதான் கடைசி நேரத்துல எங்கேயும் சீட் கிடைக்காம இங்க மாட்டி விட்டுட்டான்..”என வெகுளியாய் கூறிவளை ஏனோ அவனுக்கு பிடித்திருந்தது..

“ஆமா உங்க காலேஜ்ல நீங்களே எப்படி படிக்குறீங்க??”,என்றவளை விநோதமாய் அவன் பார்க்க

“ஐயோ இல்ல அப்படி கேக்கல யூசுவலா இந்த பாரின் ரிட்டனாதான எல்லா பணக்கார பசங்களும் இருப்பாங்க அதான் கேட்டேன்..”

அவள் கேட்ட அனைத்திற்குமே அவன் உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும் மாறவேயில்லை..”பயப்படுறதா சொன்ன,கரஸ்பாண்டன்ட் பையன்னு தெரிஞ்சும் தைரியமா இவ்ளோ பேசுற??”

“இல்ல உங்களபாத்தா அப்படி போட்டு குடுக்குற ஆள்மாதிரி தெரில அதான்”, என நாக்கை கடித்து கூற,

“நல்லா பேசுற..சரி என்னைப்பத்தி ஒண்ணும் கேக்க மாட்டியா??”

“சாரி சொல்லுங்க உங்க பேரு அன்னைக்கு ஏஞ்சல் ஏதோ சொன்னாளே..ம்ம் ரகு தான???”

“ம்ம் ரகுநந்தன்..எம்பிஏ பைனல் இயர் பண்றேன்..”

“ஓ..சரி அப்போ நா கிளம்பட்டுமா க்ளாஸ்க்கு டைம் ஆச்சு..”

“ம்ம் போலாம்..இனி லஞ்ச் ஏஞ்சலோட வருவல??”

“அது…”

“சும்மா கேட்டேன்..விருப்பம் இருந்தா வா இல்லனா ப்ரச்சனையில்ல..”என்றவாறு வெளியில் வந்தவர்களை அவனின் மொத்த கேங்கும் வேடிக்கைப் பார்த்திருக்க,நீ போ என அவளை அனுப்பி வைத்தான்..

“மச்சி என்னடா நடக்குது இங்க????”

“டேய் போதும்டா உடனே ஆரம்பிக்காதீங்க..போ போ வேலையை பாரு “,என மழுப்பிச் சென்றான்..

அங்கு வகுப்பிற்கு வந்தவளை ஏஞ்சல் ஆவலாய் வரவேற்றாள்..”வாங்க மருமக மேடம்”, என சிரிக்க,

“என்ன அதுகுள்ள உனக்கே தெரிஞ்சுடுச்சா???இப்போதானடா நடந்தது “,என நாடோடிகள் பாணியில் கூறி அவளிடத்தில் அமர்ந்தாள்..

“என்னடீ ஒரே நாள்ல ஓவர் பாப்புலர் ஆய்ட்ட..”

“அய்யோ ஏஞ்சல் அவருதான் காலேஜ் ஓனர்நு தெரியாம நா இதை எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்ல..அவரு என்ன நினைச்சுருப்பாரோ..”

“ரிலாக்ஸ் ஹரிணி அண்ணா ரொம்பவே ஜாலி டைப்..டோண்ட் வொரி..சரி அதான் இரண்டு பேரும் ப்ரெண்ட் ஆய்டீங்களே இனி லஞ்ச் எங்களோடேயே வா..”

“எப்படி ரெண்டு பேரும் ஒரேமாதிரி சொல்றீங்க???”

“பின்ன கேவலமான ரீசன்லா சொல்லி நீ வரமாட்டேன்னு சொன்னப்போவே தெரியுமே இதான் விஷயம்நு”, என்று கூற அசடு வழியத்தான் முடிந்தது ஹரிணியால்..

மதியம் அவர்கள் இருவரும் மற்ற மூவருக்காக காத்திருக்க ஐந்து நிமிடத்தில் ஆஜராகினர்..

“வணக்கம் மேடம்”, என அகிலும் விக்கியும் கோரஸாய் கூற ரகு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்..ஹரிணி பாவமாய் அவனை பார்க்க சிரிப்பை அடக்கியவன் மெஸ் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பிக்க,வழக்கம்போல் அரட்டை களை கட்டியிருந்தது..சாப்பிட்டு முடித்த அடுத்த நொடி ஏஞ்சல் ஹரிணியிடம்,

“நீ இங்கேயே வெயிட் பண்ணு ஹரிணி நா வந்துட்றேன் “,என எழுந்து செல்ல விக்கி அவளை பின் தொடர்ந்தான்..அகில் யாரோடோ போனை எடுத்து பேச ஆரம்பிக்க,

“என்ன பாக்குற??”-ரகு..

“ஒன்றுமில்லையென அவள் தலையாட்ட,

“அக்சுவலா ஏஞ்சலுக்கு விக்கி கல்யாணம் பண்ணிக்குற முறைதான்..பட் ரெண்டு பேமிலிக்கும் நடுவுல சில பல வாய்க்கால் தகராறு சோ இதுங்க கிடைக்குற கேப்லலா லவ் பண்றேன் பேர் வழிநு எதையாவது பேசிட்டு இருக்கும்ங்க..இதுக்கு இந்த பாசக்கார அண்ணன் சப்போர்ட் ஏன்னா அப்போதான் அவன் கல்யாணத்துக்கு ரூட் க்ளியர் ஆகும்..”

“ப்பாபாபா இந்த அத்தை பையன் பொண்ணு கொடுமையெல்லாம் தாங்கவே முடில..”

“ஏன் உனக்கு யாரும் இருக்காங்களா??”

“நோ நோ இருக்கான் பட் என்னை பாத்தாலே தெறிச்சு ஓடுவான்..அவன் தங்கைக்கும் என் அண்ணாவுக்கும்தான் காதல் காவியம் ஓடிட்டு இருக்கு..எனிடைம் எந்த பூகம்பம் வெடிக்குமோனு வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்காங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.