(Reading time: 14 - 28 minutes)

“ஏன் வீட்ல ஒத்துக்கலையா??”

“அதெல்லாம் இல்ல எங்கப்பா ஒரு யூனிபார்ம் போடாத மிலிட்ரி மேன்..அவருக்கு எப்போ என்ன தோணும் என்ன பண்ணுவாருனு யாருக்கும் தெரியாது..இதுல லவ் கிவ்நு போய் நின்னா அவ்ளோதான்..வீடே ரெண்டாயிடும்..”

“ஐயோ அப்படி ஒரு டெரரா??”

“ம்ம் அவரு கெட்டவருலா இல்ல பட் ரொம்ப ஸ்ரிக்ட்..”

“சரி கேக்கனும்னு நினைச்சேன்..நேத்து வர ஒரு திமிரு இருந்தது உன் ஃபேஸ்லா ஆனா இப்போ இவ்ளோ நல்லா பேசுற??”

“திமிரா??நீங்க வேற என் முகமே அப்படிதான்..புதுசா பாக்குற யாருமே என்னை அப்படிதான் சொல்லுவாங்க..ஆனா அப்பறம் அவங்கதான் என்னோட ரொம்ப க்ளோஸ் ஆய்டுவாங்க”, என கூற,

“அப்போ நானும்அந்த கேட்டகிரில வந்துருவேன்”, என்றவன் புருவம் உயர்த்த,

“எனக்கு பசங்க ப்ரெண்ட்ஸ் கிடையாது மேபி நீங்க தான் பர்ஸ்ட்டா இருந்தா சந்தோஷம்தான்..”என்றவள் சிரிக்க,

“நல்லா பேசுற…”

“நா ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே??”

“என்ன கேளு??”

“இல்ல காலைல அவ்ளோ பேர் உங்களோட இருந்தாங்க ஆனா லஞ்ச் நீங்க மூணு பேருதான் சாப்டுறீங்க??ஏன் அப்படி???”

“அக்சுவலி நா அகில் விக்கி மூணு பேருமே யுஜில இருந்தே இங்கதான் ஒரே டிபார்ட்மெண்ட் வேற சோ நாங்களே கேங்கா இருப்போம்..அப்போலா நாதான் கரஸ் பையன்னு யாருக்கும் தெரியாது..தெரிஞ்சப்பறம் வந்து ப்ரெண்ட்ஸ் ஆக ட்ரை பண்ணுவாங்க அது எனக்கு பிடிக்கல..அதனால க்ளாஸ் அவர்ஸ்ல எல்லாரோடையும் ஜாலியா பேசுவேன் மத்தபடி யாரையும் அலோ பண்ணமாட்டோம்..ஆல்சோ எங்கப்பாவும் அகில் அப்பாவும் ரொம்ப வருஷமா ப்ரெண்ட்ஸ்..லாஸ்ட் இயர் ஏஞ்சலும் எங்களோட ஜாய்ண்ட் ஆகிட்டா..”

“அப்போ நானும் அப்படிதான் பழகுறேன்னு நினைக்குறீங்களா??”என பட்டென கேட்டவளை பார்த்து பலமாகவே சிரித்தான்..

“ஏன் சிரிக்குறீங்க??”

“இல்ல நீ சொல்லமாதிரி பழகுறவங்க இப்படி டேரக்டா  அதை கேட்க மாட்டாங்க..”

ம்ம் என்றவள் ஒன்றும் கூறாமல் இருக்க அவனும் மொபைலை நோண்ட ஆரம்பித்திருந்தான்..அடுத்த பத்து நிமிடத்தில் ஏஞ்சல் வர மூவரிடமும் வீடைபெற்று வகுப்பிற்கு கிளம்பினாள்..

“என்ன மச்சி கேங்ல நியூ அடிஷன்???”என அகில் அவனை பார்க்க,

“டேய் அதெல்லாம் ஒண்ணுமில்லடா..காலைல அவ பண்ணிணதுல இன்ட்ரஸ்ட்டிங் கேரக்டரா தோணிச்சு சோ பேசுறேன்..மத்தபடி எதுவுமில்ல..”

“ம்ம் சொல்ற பாக்கலாம்...”

அங்கு ஹரிணியோ ஏஞ்சலை கிண்டல் செய்து கொண்டீருந்தாள்..”என்னம்மா வாய்க்கா தகராற எப்படி சரி கட்டலாம்னு முடிவுக்கு வந்தாச்சா??”

“ஐயோ இந்த ரகு அண்ணா உளறிட்டாரா??அவருக்கு எப்பவுமே இந்த லவ் ரொமெண்ஸ் மேலலா நம்பிக்கையே கிடையாது..இவ்ளோ ஜாலியா இருக்குற ஒருத்தருக்க லவ்ல நம்பிக்கையில்லனா நம்புறமாதிரியா இருக்கு???அத விடு நீ பாட்டுக்கு என் விஷயத்தை யார்ட்டையும் உளரிடாத தாயே..”

“அட நீ வேற க்ளாஸ்ல நா பேசுற ஒரே ஆள் நீ தான் இதுல நா யார்ட்ட சொல்ல போறேன்..எனி வே ஆல் த பெஸ்ட் உங்க காதலுக்கு..”

“தேங்க்ஸ்டா..பட் அவ்ளோ ஈஸியாலா கல்யாணத்தை நடத்திட்டாலும்..கடவுள்தான் காப்பாத்தனும்..”

மறுநாள் விடுமுறையாதலால் ஹரிணி குடும்பத்தோடு பீச்சிற்கு செல்ல முடிவெடுத்து கிளம்பினர்..கடல் அலைகளின் சலசலப்பும் அந்த குளிர் காற்றும் தொடு வானமும் மனதை ரொம்பவே அமைதிப்படுத்துவதாய் தோன்றும் அவளுக்கு..அப்படியாய் கடலை ரசீத்தவாறு திரும்பியவள் சற்று தூரத்தீல் தன்னை பார்த்து கையசைத்தவாறு வரும் ரகுவை பார்த்து அதிர்ந்து போனாள்..

அவனோ என்ன இவ பேயை பாத்தமாதிரி ரியாக்ஷன் குடுக்குறா என மீண்டும் கையசைத்து அவளருகில் வர கண்களால் அவனை மீரட்டியவள் வராதே என ஜாடை செய்ய அவனும் ஏன் என்பதாய் பார்த்தான்..வேகமாய் சென்று தன் அண்ணனருகில் அமர்ந்தவள் சற்று சாய்ந்து தன் தாய் தந்தையை காட்ட சரி ஏதோ சரியில்லை என சென்றுவிட்டான்..அப்போதுதான் பெண்ணவளுக்கு மூச்சே சீரானது..

மறுநாள் அவளுக்காகவே பைக் பார்க்கிங்கில் காத்திருந்தவனை பார்த்து சிநேக சிரிப்போடு அருகில் வந்தாள்..

“ஹாய்..”

“என்ன ஹாய் நேத்து என்ன பாத்தும் பாக்காத மாதிரி போய்ட்டு இன்னைக்கு என்ன???”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.