(Reading time: 21 - 42 minutes)

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தவள் தைரியமாக எழுந்து பூட்டியிருந்த கதவை திறத்து குதிக்க துவங்கினாள்..

அந்தரத்தில் ஒரு நொடி தொங்கியவளை ஒரு கரம் உள்ளே இழுத்துப்போட்டு கன்னத்தில் தனது கரத்தை இறக்கியது இடியாக..

என்ன நடந்தது என நிர்ணயிப்பதற்கும் மறு கன்னத்திலும் ஒரு அறை..

பொறி கலங்கியது நங்கைக்கு..

மலங்க மலங்க முழித்துக் கொண்டு நின்றவளிடம்,“நான் குழல்மொழி..”,என்று ஒரு புன்னகையுடன் தன்னை அறிமுகப் படுதிக்கொண்டாள் சமுத்திராவை அடித்த கைக்கு சொந்தக்காரி..

புன்னகையுடன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட மொழியைக் கண்டு கடுப்பேற்றியது சமுத்திராவிற்கு..

தன்னை முறைத்தவளைக் கண்டு வாய்விட்டு மொழி,“உன் பெயர் என்னன்னு சொல்லமாட்டியா..??”,என்று கேட்டாள்..

“இப்போ அதான் ரொம்ப முக்கியம்..”,என்ற சமுத்திரா,”இப்போ எதுக்கு என்னைக் காப்பற்றினாய்..??”,என்று கேட்டாள் கோபமாக..

“நீ எப்போ சாகலாம்னு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால தான முடிவு பண்ண..??அதான் உன்னை காப்பாற்றினேன்..”,என்றாள் மொழி அசால்ட்டாக..

“நீ என்ன லூசா..??“,என்பது போல் அவளை முறைத்துக்கொண்டிருந்த சமுத்திராவிடம்,”சாப்பிட்டாயா..??”,என்று கேட்டாள் கனிவாக..

தாயின் கருணை குரலில் மொழி கேட்ட கேவ்ளியில் சமுத்திராவின் தலை தானாக இல்லை என்பதாய் அசைந்தது..

“வா..நானும் இன்னும் சாப்பிடவில்லை..சாப்பிடலாம்..”,என்று தனது சீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றாள்..

அது சைட் லோவர் பெர்த் என்பதால் எதிரெதிரே இருவரும் அமர்ந்து கொண்டனர்..

தான் வாங்கி வந்திருந்த சப்பாத்திகளில் இரண்டை தனக்கு எடுத்து கொண்டு மீதியிருந்த இரண்டை சமுத்திராவிற்கு கொடுத்து ஏதேதோ பேசி உண்ண வைத்தாள் மொழி..சமுத்திராவின் விடிவொளி..

“இப்போவாவது உன் பெயரை சொல்லலாமில்லையா..??”,இது மொழி..

“நான் சமுத்திரா..”,என்று தொடங்கியவள் மடை திறந்த வெள்ளமாய் தனது வரலாற்றை அவளிடம் ஒப்பித்துவிட்டு மொழியின் மடி சேர்ந்தாள் கண்ணீருடன்..

“சமுத்திரா..உன்னுடைய மனசையும் நிலைமையையும் என்னால புரிஞ்சுக்க முடியுது..”,என்ற மொழியை தடுத்த சமுத்திரா,”உங்களுக்கு என்னை மாதிரி நிலைமை வந்திருந்தா தான் என்ன உங்களால புரிஞ்சுக்க முடியும்..”,என்றாள்..

“நானும் உன் நிலைமையை கடந்தவள் தான்..என்ன ஒரு வித்யாசம் மட்டும்..சிவப்பு விளக்கு பகுதியில் நான் இரண்டு மணி நேரம் இருந்தேன்..நீ இரண்டு வருடம் இருந்திருக்கிறாய் அவ்வளவுதான்..”,என்றாள்..

அப்பொழுது தான் மொழியின் முகத்தை உற்றுப்பார்த்த சமுத்திரா சற்று அதிர்ந்து,”நீங்களும் என்னைப்போல்..”

“ஆம்..நானும் உன்னைப்போல் ஒரு திருநங்கை தான்..”,என்றாள் நிமிர்வாகவும் தைரிமாகவும்..

இவளைப் போல் நானும் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என ஒரு நொடி மனதில் தோன்றி மறைந்தது சமுத்திராவிற்கு..

“எனக்கும் அம்மா அப்பா அக்கா அண்ணான்னு எல்லாரும் இருக்காங்க சமூ..ராஜா போல தான் நானும் இருந்தேன்..

நான் ரொம்ப நல்லாவும் படிப்பேன்..எங்க வீட்டில் எங்க தலைமுறையில் காலேஜுக்கு போன முதல் ஆளும் நான் தான் கடைசி ஆளும் நான் தான்..

அது நான் காலேஜ்ல சேர்ந்த புதுசு..எனக்குள் நடக்கும் மாற்றத்தை உணர்ந்ததும் அங்கு படிக்கும் பொழுது தான்..

ஸ்கூல் படிக்கறவைக்கும் ஏனோ தானோன்னு ட்ரெஸ் பண்ண நான் காலேஜ் சேர்ந்ததற்கு பிறகு நல்லா டீசன்ட்டா எல்லாரையும் மாதிரி ட்ரெஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்..

எங்க அப்பா கிட்ட ட்ரெஸ் வேணும்னு சொல்ல மறுக்காமல் அடுத்தநாளே என்னை கடைக்கு கூட்டிட்டுப் போனார்..அங்கு தான் என்னை நான் உணர்ந்தேன்னு சொல்லலாம்..

அங்க போனதுக்குப்புறம் என் கண்ணு பசங்க போடற பேண்ட் சட்டை பக்கம் போகாம பொண்ணுங்க போடுற ட்ரெஸ் பக்கம் அலைந்தது..

அப்போ ஏதோ தப்பு பண்ற உறுத்தல் மனசுல தோனுச்சு..எதுவும் பிடிக்கலைன்னு சொல்லி எதுவும் வாங்காம அவரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்..

அன்னைக்கு ராத்திரி எனக்கு சுத்தமா தூக்கம் இல்லை..

அடுத்த நாள் காலேஜ் லீவுங்கறதாலையோ என்னமோ அந்த விடியல் எனக்கு ரொம்ப அழகா விடிஞ்ச மாதிரி இருந்துச்சு..ஆனால் அது நான் வீட்டில் இருக்கும் கடைசி நாளுன்னு தெரியாம போச்சு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.