(Reading time: 21 - 42 minutes)

வகுப்பறைக்குள் பேசிக்கொண்டே நுழைந்தவர்கள் இவளைக் கண்டதும் தங்களது பேச்சை நிறுத்தி அமைதியாக அமர்ந்து கொண்டனர் காலியாக இருந்த வரிசைகளில்..

நிஷார்த்திகாவைப் பார்ப்பதும் அவளைப் பற்றி தங்களுக்குள்ளே குசுகுசுவென தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்..

முதல் வகுப்பிற்கான பெல் அடிக்கும் வரை இதுவே தொடர்ந்தது..

சில நிமிடங்களில் அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் உள்ளே நுழைந்தார்..அவரின் பார்வையும் முதல் வரிசையில் அமர்ந்திருந்த நிஷார்த்திகாவின் மேல் படிந்து மீண்டது..

சிறு சிறு சத்தம் மாணவர்களின் பக்கமிருந்து வருவது கேட்டு தனது தொண்டைய சற்று சத்தமாக கனைத்தார் தன் இருப்பை அனைவரும் உணரும்படி..அவரது கனைப்பில் அலெர்ட்டான மாணவர்கள் கப் சிப்பானார்கள்..

அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர்,”ஹெலோ டாக்டர்ஸ்..வெல்கம் டூ கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ்..ஐ ஆம் டாக்டர் சிவராஜ் ஆத்ரேயா..யுவர் பிசியாலஜி (physiology) ப்ரொபசர் அண்ட் யுவர் க்ளாஸ் ட்யூட்டர்..இன்னைக்கு முதல் நாள் என்பதால் இன்ட்ரோடக்ஷன் க்ளாசஸ் மட்டும் தான் இருக்கும்..ஒவ்வொருவரா வந்து உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்..”,என்றவர்,”பார் அ சேன்ஜ் லெட்ஸ் ஸ்டார்ட் ப்ரம் தி லாஸ்ட் பெஞ்ச்..”,என்றார்..

பின்னிருந்த வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் இடையில் இப்பொழுது சலசலப்பு..

“கமான் பீப்பிள்..உங்களை யாரும் பாடம் எடுக்க வர சொல்லலை..உங்களை பற்றி ஒரு அறிமுகம் மட்டும் தான்..”,என்று சிரித்த வண்ணம் கூறியவரை சட்டென பிடித்து விட்டது மாணவர்களுக்கு..

தயக்கங்கள் பல இருந்தாலும் ஒருவர் பின் ஒருவராக எழுந்து வந்த மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்..

இப்பொழுது எஞ்சியிருந்தது நிஷார்த்திகா மட்டுமே..

அவளைப் பார்த்த சிவராஜ்,”கமான் லேடி..இட்ஸ் யுவர் டைம்..”,என்றார்..

அவரை நோக்கி புன்னகைத்து,”எஸ் சார்..”,என்றவள் வகுப்பறையில் அமைந்திருந்த சிறு மேடையில் ஏறி நின்றாள்..

அவளை வகுப்பறையில் உள்ள அனைவரும் சிறிது சுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..

சிலர் அவளை ஒரு வித ஆச்சார்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் என்றால் சிலர் சற்று அலட்சியத்துடன்..

குப்பிலிருந்த அனைவரையும் தனது கூரிய விழிகளால் எடை போட்டவள் கம்பீரமாக,”வணக்கம் நண்பர்களே..என் பெயர் நிஷார்த்திகா..நான் சேலத்தை சேர்ந்தவள்..உயர் பள்ளிப் படிப்பு சென்னையில்..இப்பொழுது உங்களுடன் எனது முதல் பட்டம்..என்னை உங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..”,என்றவள்,”நான் ஒரு திருநங்கை..”,என்றாள் கம்பீரமாக..

இப்பொழுது அனைவரது கவனமும் அவள் மீதே..

அதனை உணர்ந்து புன்னகையை இதழ்களில் தவழ விட்டவள்,”இதை சொல்வதற்கு நான் பெருமையே கொள்கிறேன்..”,என்றாள்..

“நைஸ் மிஸ் நிஷார்த்திகா..உங்க ஆம்பிஷன் என்ன..??”,இது டாக்டர் சிவராஜ்..

“எனக்கு கைனக்காலஜி படிக்கணும்னு விருப்பம்..”

சிலரது அலட்சிய பார்வை ஆச்சார்யமாய்..

“வெரி குட்..”,என்ற சிவராஜின் பாராட்டை ஏற்றுக்கொண்டவள்,”என்னிடம் வரும் பெண்களுக்கு சுகப்பிரசவம் மட்டுமே பார்க்கவேண்டும் என்பது என்னுடைய கனவு..”

“வித்யாசமான கோணம்..ஆல் தி பெஸ்ட் யங் லேடி..கோ டூ யுவர் சீட்..”,என்றார் சிவராஜ்..

அவள் சென்று இருக்கையில் அமர்ந்ததும்,”ஓ கே டாக்டர்ஸ்..இன்னும் ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரியன்டேஷன் க்ளாசஸ் மட்டுமே உங்களுக்கு..என்ஜாய் வெல்..அதற்கு பிறகு க்ளாசஸ் தொடங்கிவிடும்..உங்கள் பயணம் இனிதே தொடங்க வாழ்த்துக்கள்..”,என்று மாணவர்களிடம் கைதட்டை அள்ளிச் சென்றார்..

அன்றைய நாளில் பெரிய சலசலப்பில்லாததால் அமைதியாகவே கழிந்தது நிஷார்த்திகா..

சுமார் ஐந்து மணிக்கு வீடு சேர்ந்தவள் களைப்பில் சோபாவில் அமர்ந்து அப்படியே உறங்கி போனாள்..

திரவனை மேகங்கள் மறைத்து இருள் சூழ நிலவு மகள் வானமகனுடன் கைகோர்த்து..

அத்தெரு முழுதும் நிசப்தமே..

“தட்..தட்..”

கதவு தட்டும் ஓசையில் லேசாக அசைந்தாள் நிஷார்த்திகா..

“தட்...தட்...”

சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் கதவு தட்டும் ஓசை..

கண்களைத் திறக்க முடியாமல் திறந்தவள் மணியைப் பார்த்தாள்..அது இரு பத்து என்றது..

“இந்நேரத்தில் யாராக இருக்கும்..??”,என்று நினைத்தபடியே வெளி லைட்டைப் போட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்..

வெளியே சரியாக யாரும் தென்படாததால்,”யாரது..??”,என்றாள் சற்று சத்தமாக..

“உள்ள தான் இருக்கியா..கதவை திற..”,என்றது ஒருவனது குரல்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.