(Reading time: 17 - 33 minutes)

இருவரையும் காணும் தரண்யனின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்..?? அடுத்த மாசம் சொல்றேன்..

வருடம் : 2017..

இடம் : கோவை..

னது கால்களுக்கு அடியில் நெற்றியில் இரத்தம் சிந்தியபடி வந்து விழுந்தவனைக் கண்டு ஒரு நொடி பின்னடைந்த நிஷார்த்திகா தனது கையிலிருந்த பொடிகளை அவன் மீது தூவினாள் அபிஷேகமாய்..

தனது காயத்தில் விழுந்த போடிகளின் நெடி தாங்காமல் அவன் அலறிய அலறலில் அக்கம் பக்கத்தினர் வேடிக்கை பார்க்க அங்கு கூடினர்..

கைகளில் ஒரு இரும்பு கம்பியுடன் தலைவிரி கோலமாய் மீதி இருந்த இருவரையும் புரட்டுப் போட்டுக் கொண்டிருந்தாள் ஒரு இராட்சசி..

இரத்தம் சிந்த சிந்த அவர்களை துவைதவள் ஆத்திரம் தாங்காது எட்டி உதைத்தாள் நிஷாவின் காலுக்கிடையில் கிடந்தவனை..

அவளது ஆக்ரோஷத்தைக் கண்ட அக்கூட்டம் அவளைத் தடுக்க வழியறியாது நடு நடுங்கித் தான் போனது..

கீழே விழுந்து கிடந்த மூவரையும் தரதரவென வெளியே இழுத்துச் சென்றவள் கேட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு விட்டு திரும்பியும் பார்க்காமல் நிஷார்த்திகாவை முறைத்து வீட்டின் உள்ளே சென்றாள்..

வீட்டை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை நிமிர்ந்தும் பார்க்காமல் கேட்டை அடைத்த நிஷா மெதுவாக அடிமேல் அடி வைத்து இராட்சசியை எப்படி எதிர்கொள்வதென தெரியாமல் தட்டுத் தடுமாறியபடி உள்ளே சென்றாள்..

சோபாவின் மேல் கால் மேல் கால் போட்டு திமிராக அமர்ந்து தன்னை எரித்துக் கொண்டிருந்த இராட்சசியை நெருங்கியவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,”அ..க்..கா..”, என்றாள் தந்தியடித்தபடியே..

வாயை மூடு என சைகையால் நிஷார்த்திகாக்கு கட்டளையிட்டவள்,“கைய சுத்தம் பண்ணிட்டு வெளியில் இருக்க என் லக்கேஜ் எல்லாத்தையும் எடுத்து உள்ளே வை..”,என்றாள் கோபமாகவும் கட்டளையாகவும்..

பலியாடு போல் தலையை அசைத்த நிஷா அவளை பயத்துடன் பார்த்துக்கொண்டே தனது கைகளை சுத்தம் செய்து விட்டு அவள் சொன்னது போல் பைகளை எடுக்க வெளியே சென்றாள் சற்றே பயத்துடன்..

வீட்டை சுற்றிலும் நின்று கொண்டிருந்த கூட்டம் இன்னும் கலையாதிருக்க சலசலத்தபடியே அடிபட்டுக்கிடந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க தயாராகிக் கொண்டிருந்தனர் அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இறக்க குணம் படைத்த நல் உள்ளங்கள்..

நிஷார்த்திகா வெளியே வருவது கண்ட ஒரு பெண்மணி,”ஏய்.. இந்தா பாரு இவருக்கு ஏதாவது ஆச்சு உன்னை பொலந்திருவேன்..”,என்று ஒரு கருங்கல்லைத் தூக்கி அவளை நோக்கி குறிப்பார்த்து எறிந்தார்..

அவர் கல்லேடுக்கும் போதே சுதாரித்த நிஷார்த்திகா தன் மேல் அது படாதவாறு தள்ளி நின்று கொண்டாள்..

அதில் மெலும் ஆத்திரமுற்றவர் கீழே கிடந்த கம்பியை எடுத்துக்கொண்டு அவளை அடிக்க உள்ளே நுழைந்தார்..

நிஷார்த்திகாவை அடிக்க அவர் வருவதற்குள் அங்கு வந்த அந்த இராட்சசி அந்தப் பெண்ணின் கை பிடித்து பின்னால் மடக்கி லேசாக முறுக்கி அவரது கன்னத்தில் தனது கையை இறக்கினாள்..

அவளது அடியைத் தாளமால் அந்த பெண் கேட்டை விட்டு வெளியே சற்றுத் தள்ளி விழுந்தாள்..

இவளது அடாவடியைக் கண்டு ஒருவன் போலீஸிற்கு போன் செய்ய சில நிமிடங்களில் அங்கு வந்தனர் காவல் துறையினர்..

ரு அழகிய கண்ணாடி டம்ளரில் பழரசம் பருகிய வண்ணம் காவலர்களின் வருகையை எதிர்பார்த்து அந்த வீட்டுப் படிக்கட்டில் சாய்வாக அமர்ந்திருந்தாள் அந்த இராட்சசி..

கதவின் ஓரம் ஒண்டி நின்றுகொண்டிருந்த நிஷாவை ஒரு புழுவைப்போல் பார்த்த உள்ளே நுழைந்த அந்த அதிகாரி தோரணையாக அவரை எதிர்கொண்ட இராட்சசியைப் பார்த்து,”உன்னை நாங்க அரெஸ்ட் பன்றோம்..”, என்றார்..

“வாரன்ட் இருக்கா..??”,தெனாவெட்டாக வந்து விழுந்த கேள்வியில் அவளை முறைத்தவர்,”நீ பெரிய இது பாரு.. உனக்கெல்லாம் வாரன்ட் ஒரு கேடு.. முதிலில் எந்திரி..”, என்றார் அவரும் திமிராக..

“வாரன்ட் இருக்கா..??”,திரும்பவும் கேட்டாள் அழுத்தமாக..

“உன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க..”

“அதான் யாரு கொடுத்தா..?? எதுக்கு கொடுத்தா..??”

பொறாமையை மொத்தமும் இழக்கத் துவங்கியவரை இடையிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்தவன் சற்றே தைரியமாக,“நான் தான் கொடுத்தேன்..அதுக்கு இப்போ என்ன..??”,என்று கேட்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.