(Reading time: 16 - 32 minutes)

பேந்த பேந்த விழித்தவாறு தான் எதற்கு இதெல்லாம் செய்கிறோம் என்றே தெரியாமல் மனம் படபடக்க காரைத் திறந்து அமர்ந்தாள்..கூறிபடியே இரண்டு நிமிடத்தில் வந்தவனை கண்டு கார் கதவை திறக்க ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் நிறையவே பதட்டத்தோடு இருந்தான்..வேக மூச்சுகளை அவனெடுக்க அவளோ தன் துப்பட்டாவை இறுகப் பற்றியவாறு அமர்ந்திருந்தாள்..ஆழ் மூச்செடுத்தவன் தன் வலக்கையில் வைத்திருந்த நான்கு ரோஜாக்களை அவள்முன் நீட்டி,

“ஹணி வில் யூ மேரி மீ??”எனக் கேட்க அவளோ அதிர்ச்சியாய் அவனை பார்த்திருந்தாள்..அவனே பேசினான்,

“இங்க பாரு ஹணி நீ எனக்கானவ எனக்கே எனக்காக காட் அனுப்பின ஏஞ்சல்..உன்னோட என் லைவ்ல ஒரு செகண்டும் ரசிச்சு ரசிச்சு வாழணும் உன் பக்கத்துலயே நூலளவு கூட கேப் இல்லாம உன் மூச்சுக்காத்தும் ஸ்பரிசமும் என்னையே சுத்தி வர்ற அளவுக்கு நெருக்கத்தோட உன் மேல பைத்தியமா ரொம்ப வருஷமா வாழணும்…

இப்போ இந்த செகண்ட் கூட உன்னை இறுக கட்டிப்பிடிச்சு என் காதலை என் முத்தம் மூலமா சொல்லனும்னு என் மனசு துடிக்குது இந்த நினைப்பு இனி சாகுற வர வேற பொண்ணுமேல வராது ஹணி..நா உன் அளவுக்கு நல்ல பையன் கிடையாது பொறுப்பானவன் கிடையாது பட் உன்னை என்னால மட்டும்தான் சந்தோஷமா வச்சுக்க முடியும்..எதாவது பேசு ஹணி..என்னை பிடிக்கலையா “,என அவள் கன்னங்களை தன் கையிலேந்திக் கொள்ள,

அதிரிச்சியிலிருந்து மீண்டவள் அவன் கையை தட்டிவிட்டு தன் உள்ளங்கையில் முகம் புதைத்து குனிந்து அழுதாள்..

“ஹணி இங்க பாரு..”

கண்களை துடைத்தவள் அவனிடம்,”நந்தா ப்ளீஸ் நா உங்களுக்கு வேண்டாம்..நா ஒரு முதுகெலும்பில்லாதவ..என் அப்பாவ பத்தி மட்டூமே யோசிக்குறவ..நாளைக்கு எங்கப்பா உங்களை எதாவது மரியாதை குறைவா பேசினா அதை பாக்குற சக்தி எனக்கில்ல..கண்டிப்பா நா லவ் பண்றேன்னு வீட்ல தெரிஞ்சா ஒண்ணு நீங்க இல்ல எங்கப்பானு தான் நா முடிவெடுக்குற மாதிரி இருக்கும்..அந்த நிலைமை எனக்கு வேண்டாம்..என்னால உங்களுக்கும் எந்த கெட்ட பேரும் வேணாம்..ப்ளீஸ் நந்தா புரிஞ்சுக்கோங்க..

நாளைக்கே நீங்க உனக்கு நா முக்கியமா உங்கப்பாவானு கேக்குற நிலைமையும் வரும்,அவன் தான் வேணும்னா என்னை மறந்துருநு எங்கப்பா சொல்ற நிலைமையும் வரும்..நா கோழை அதெல்லாம் சந்திக்குற துணிவு எனக்கில்ல விட்டுருங்க..எல்லாத்துக்கும் மேல உங்க ஸ்டேடஸ் அதோட பக்கத்துல நா வெறும் கடுகளவு தான்..எந்த விதத்திலேயூமே பொருந்தாது ஒத்துவாராது நந்தா ஐ அம் சாரி என்றவளுக்கு கண்ணில் நீர் வழிந்து கொண்டேயிருந்தது..

அதற்கு மேல் அவள் அழுகையை பொறுக்கமாட்டாதவன்,”சரி முதல்ல அழறத நிறுத்து ஹணி”, என்றவனின் கண்களில் நீர் கோர்த்திருக்க,

நந்தா..

“நத்திங் ஹணிம்மா..நீ எனக்காக தான் இவ்ளோ யோசிக்குறநு நினைக்கும் போதே சந்தோஷமா இருக்கு..இது போதும் நிச்சயம் என் லவ் என்கிட்ட வந்துரும்நு எனக்கு நம்பிக்கை இருக்கு..ஆனா இனி நா உன்னை பாக்க மாட்டேன்டா..நீ சக்ஸஸ் புல்லா படிப்பை முடிச்சு உனக்கான ப்ரோபஷனை சூஸ் பண்ணி வேலைல ஜாய்ன் பண்ணு..நாளையிலிருந்து நா காலேஜ் வர மாட்டேன் ஹணி…டூ வீக்ஸ் தான அப்பறம் ஸ்டடி ஹாலிடேஸ் சோ நாளையிலிருந்தே வர மாட்டேன்..

உன் போன் நம்பரும் என்கிட்ட கிடையாது இனி விதி உன்னை நான் எப்போ மீட் பண்ணணும்னு நினைச்சுருக்கோ அப்போதான் பாப்பேன்..டேக் கேர் ஹணி..லவ் யூ அண்ட் நீட் யூ மேட்லி..சாரி பார் திஸ்..என்றவன் சட்டென அவளை இழுத்து நெற்றியில் அழுத்தமாய் முத்தத்தை பதித்திருந்தான்..சத்யமா உன்னை பாக்கும் போதெல்லாமே இந்த பீல் இருந்துட்டேதான் இருக்கு…மன்னிச்சுருடா..ஆல்த பெஸ்ட் பார் யுவர் ப்யூச்ர்..என்றவன் காரை ஸ்டார்ட் செய்ய ஒன்றும் கூறத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் ஹரிணி..

அவள் வீட்டைவிட்டு சற்று தூரத்தில் இறக்கியவன் அவள் உள்ளே செல்லும் வரையுமே அவளையே பார்த்திருக்க வாசலை அடைந்தவள் அவனை திரும்பி பார்க்க கையசைத்து விடை கொடுத்தான்..உள்ளே வந்தவளை அவள் அன்னை த்ருஷ்டி கழித்து பெருமை பேசி ஆனந்தம் கொள்ள அவள் தந்தை வழக்கம்போல் குட் என்பதோடு நிறுத்திக் கொண்டார்…அசதியாய் இருப்பதாய் கூறி தனதறைக்குள் புகுந்தவளுக்கு கதறி அழவேண்டும் போலிருந்தது..தலையணையில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள்..

அவனை வேண்டாம் என்றதற்கு அழுகிறோமா இல்லை அவன் அவளை பார்க்க மாட்டேன் என்றதற்காகவா தெரியவில்லை..அழுதழுது ஓய்ந்தழவள் எப்போது உறங்கினாளோ தெரியவில்லை காலை வெயில் முகத்தில் பட எழுந்தமர்ந்தாள்..வேண்டா வெருப்பாய் எழுந்து கல்லூரிக்கு தயாரானவள் யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றாள்..தன்னை நினைத்தே அவளுக்கு கோபம் வந்தது…அவனில்லாத சாப்பாட்டு மேஜை வெறுமையாய் தோன்றியது…ஒரு நாளுக்கே இந்த நிலைமையெனில் இன்னும் ஓராண்டு காலம் அவனில்லாமல் இந்த கல்லூரியில் தாக்குபிடிக்க முடியுமாவென்றே தோன்றிவிட்டது அவளுக்கு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.