(Reading time: 16 - 32 minutes)

அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி

அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,

எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில்

யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்

அவளின் ஒவ்வொரு அசைவும் முகபாவமும் தன்னைப் பார்த்தே யிருந்ததை உணர்ந்தான் கடைசி நால்வரியில் திரும்ப கிடைத்த நொடியெல்லாம் அவனையே கண்டாள்..தன் கண்ணணாகிய அவனுக்காகவே ஆடினாள் ஏன் அங்கு பார்க்கிறோம் என்றே புரியாமல் பார்வை அதுவாய் அவனிடம் சென்றது..

இறுதியாய் முடித்து ஒற்றை கால் வளைத்து தன் முன்னிருந்த கண்ணனை வணங்குவதாய் அவள் அமர அரங்கமே கைத்தட்டலில் திளைத்தது..அனைவரையும் வணங்கி அவள் உள்ளே நுழையவும் ரகுவை மேடைக்கு அழைக்கவும் சரியாய் இருந்தது..அவனை பார்த்தவாறே வந்தவளிடம் ஒன்றுமே கூறாமல் அவன் சென்றுவிட அவன் கண்கள் கூறிய ஆயிரம் பாஷைகள் புரிந்து முகம் செம்மை கொண்டது பெண்ணவளுக்கு..

அவனது நடனத்தை தன்னுள் நிரப்பியவள் அடுத்த மேக்கப்பிற்காக நகர மைக்கில் கேட்ட அவனின் குரலில் கால்கள் பின்ன அப்படியே நின்றுவிட்டாள்..

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து

கந்தலாகி போன

நேரம் ஏதோ ஆச்சே

ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்

காற்றோடு

போயே போச்சே

*Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே *Hosaanna*

வேறொன்றும் செய்யாமலே

நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன்,

அவள் போன

பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

வண்ண வண்ண பட்டு

பூச்சி பூ தேடி பூ தேடி

அங்கும் இங்கும் அலைகின்றதே

ஒ சொட்டு

சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று

எங்கெங்கோ நகர்கின்றதே

*Hosaanna*

பட்டு பூச்சி வந்தாச்சா?

*Hosaanna* மேகம் உன்னை தொட்டாச்சா?

கிளிஞ்சலாகிறாய்

நான் குழந்தை ஆகிறேன்,

நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி

கொள்கிறேன்..”

அவன் பாடுவது ஒருபுறமும் எனில் அரங்கத்தின் கரகோஷம் அதற்கு மிஞ்சியதாய் இருந்தது..அவனின் அந்த பிரம்மாண்டமே அவளை இன்னுமாய் மிரள வைத்தது…தனக்கும் இத்தனை பாராட்டுக்கள் கைதட்டல்களாய் இருந்ததை பெண் மனம் ஏற்க மறுத்தது..தன் அடுத்த வேலையில் இதை மனதிலிருந்து ஒதுக்கியவள் தயாராக அப்போது வரையுமே அவளுக்குத் தோன்றவில்லை ஏன் அடுத்தடுத்து அவனின் ப்ரோகிராமே வருகிறதென்று….

அனைத்தும் முடிந்து இறுதியாய் நிலைக்காட்சிக்கான ஏற்பாடுகள் மேடையில் திரையின் பின் தொடங்கின…சலங்கையோடு வந்தவளை பார்த்த ஆண்கள் அனைவரின் கண்களுமே அவள் மீதே இருந்தது..விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால் அவள் விழாமல் ஒழுங்காய் வருவதிலேயே கவனமாய் வந்ததால் மற்றவரை கவனிக்கவில்லை..

இரண்டு அகலமான டேபிள்கள் போடப்பட்டிருக்க அதன் ஒரு ஓரத்தில் இரண்டு மூன்று குஷன் போட்டு அதன்மேல் அழகிய பச்சைநிற பட்டுப்புடவையை கொசுவம் போல் மடித்து விரித்து விட்டிருந்தனர்..சின்னதாய் ஒரு ஸ்டூல் போட்டு ஆசிரியர்கள் அவள் கைப்பிடித்து அவளை அதில் அமர வைத்து அனைத்தையும் சரிபார்த்துவிட்டு அவளின் இடதுபுற கையருகில் குழிவாய் ஒரு அட்டையை வைத்து அதிலும் பட்டுத் துணியை விரித்தனர்..அப்போது தான் தன்னுடன் நடிக்க போவது யார் என்ற கேள்வியே அவளுள் எழ திரும்பி பார்த்தவள் ஐயோ என லேசாய் கத்தியே விட்டிருந்தாள்..

“ஹே என்ன என்னாச்சு???”

“இல்ல மேம் எதோ மேல பட்ட மாதிரி இருந்தது அதான்..”

“சரி சரி ஒண்ணுமிருக்காது..ஸ்கீரீன் திறந்தப்பறம் எதுவும் பேசாத லைட் ஆப் ஆகுற வர அசையாம இருக்கனும் லேசா பல் தெரியமாதிரி சிரி ஓ.கே வா ரகு நீ இங்க வா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.