(Reading time: 16 - 32 minutes)

இதென்னடா இந்த ஆண்டாளுக்கு வந்த சோதனை எனுமளவிற்கு கைவில்கள் விரைத்துப் போயிருந்தாள்..

அவனோ அவளிடமிருந்து ஒப்புக்கும் பார்வையை அகற்றவில்லை..கள்ளுண்ட வண்டாய் அவளிடம் அடிமையாகி விட்டிருந்தான்..அதே பரதநாட்டிய உடையில் தலையில் இடப்பக்கம் ஆண்டாள் கொண்டை வைத்து அவளின் நீளமான கூந்தலை விரித்து விட்டு சின்னதாய் கீரீடம் சூட்டி தன் வலக்காலை மணமகள் போல் குத்திட்டு அமர்ந்து இடக்காலை கம்பீரமாய் கீழே தொங்கவிட்டு இடக்கையில் கிளியைப் பிடித்வாறு அமர்ந்திருந்தாள்..

அவளும் முதன்முறையாய் தன்னை மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..பட்டு வேஷ்டியை பஞ்சகஜம் போல் கட்டி அங்கவஸ்திரத்தை இடுப்பை சுற்றி கட்டி கழுத்தில் நீளமாய் ஒரு ஆரம் போட்டிருக்க தலையில் பெரியதாய் ஒரு கீரிடத்தோடு நின்றவனைப் பார்ப்பதற்கு தன் அரசனாகவே தோன்றியது..அதற்குள் அவன் அவளருகில் வந்திருக்க தலையை நேரே திருப்பிக் கொண்டாள்..அருகிலிருந்த அட்டையின்மேல் அவன் தலைவைத்து கையை தலைப்புறம் பிடித்வாறு அவன் லேசாய் ஒருக்கழித்துப் படுக்க வேண்டும்..அவன் விரல்கூட அவள் மீது படவில்லை எனினும் பார்ப்பவர்களுக்கு அவன் அவள் மடியில் படுத்திருப்பதாய் தான் தோன்றும்..

அதன் பின் அவனுக்கும் அவளுக்குமாய் பெரிய மாலைகளை கழுத்தில் சாற்றி ஆசிரியர்கள் நகர திரைவிலகி தெரிந்த வெளிச்சத்தில் அந்த ஆண்டாளே அங்கு தன் ரங்கமனாரோடு அவதரித்து விட்டதாய் தோன்றியது அனைவருக்கும்…கைத்தட்ட கூட தோன்றாமல் பின்னனியில் ஓடிய திருப்பாவை மனதை மயக்க ஒப்பனை செய்த ஆசிரியர்களுக்கே ஒரு நொடி கைகூப்பத்தான் தோன்றியது..

en kadhalin kadhali

பத்து நிமிடங்கள் அப்படியே கடந்திருக்க அவர்கள் அசையாமல் இருப்பதின் கஷ்டம் உணர்ந்தவர்கள் மேடையிலிருந்து தாங்களே கைதட்டி ஓசையெழுப்ப சிறப்பு விருந்தினரோடு சேர்ந்து பிரின்ஸிபால் மற்றும் ரகுவின் தந்தையுமே எழுந்து நின்று கைதட்ட ஆரம்பித்திருந்தனர்…கைதட்டல் ஓசையடங்க வெகுநேரமாக நன்றியுரை கூறயவாறே திரையை மூடிவிட்டனர்..ரகு மெதுவாய் எழுந்து அவளிறங்க கைக் கொடுக்க அதை பற்றிவளுக்கு கைகள் இன்னுமாய் நடுங்கியது..

“ஹணி உன்னோட ஒரு டென் மினிட்ஸ் பேசனும் ப்ளீஸ் எனக்காக ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான் நானே உன்னை ட்ராப் பண்றேன் ப்ளீஸ்”,என அவசர அவசமாய் கூறிச் சென்றுவிட்டான்..

பெண்ணவளோ என்ன செய்வதென தெரியாமல் விழிக்க அதற்குள் கண்ணில் பட்டவரெல்லாம் அவளை பாராட்டி கைகொடுக்க அவர்களுக்கு புன்னகையை பதிலளித்தவாறே உடைமாற்றச் சென்றாள்..உடைமாற்றி ஒப்பனை களைந்து வெளி வருவதற்குள் அவள் தாயும் தமையனும் அவளுக்காக காத்திருக்க,

“அம்மா..”

“வாடி என் தங்கம் எவ்ளோ அழகாயிருந்த தெரியுமா என் பொண்ணு இவ்ளோ பெரிய மனுஷி ஆய்ட்டானு இன்னைக்கு தான் புரியுது..அப்படியே அந்த ஆண்டாளே வந்தமாதிரி இருந்தது..உன்கூட இருந்த தம்பி அதுக்கும் மேல அப்படியே அந்த பெருமாள்தான்..என் பக்கத்துல எல்லாரும் அதை பத்தியேதான் பேசிட்டு இருந்தாங்க..வீட்டுக்கு போய் மொதல்ல சுத்தி போடனும்”, என அவர்போக்கில் பேசிக் கொண்டிருக்க அவள் நிலையுணர்ந்த ஹர்ஷாவோ,

“ஹரிணிம்மா ரொம்ப நல்லாயிருந்ததுடா..சரி போலாமா??”

“அண்ணா அது எங்களுக்கெல்லாம் டின்னர் அரேண்ஞ் பண்ணிருக்காங்க நாங்க பிரின்சிபல் வேற பாக்கனும்..நீங்க அம்மாவ கூட்டிட்டு கிளம்புங்க நா ஏஞ்சலோட கார்ல வந்துருவேன்..அப்பாவ மட்டும் சமாளிண்ணா..ப்ளீஸ்..”

அதற்குள் அவள் அன்னையே ,”நீ சந்தோஷமா சாப்ட்டு வா ஹரிணிம்மா அப்பாகிட்ட நா பேசிக்குறேன் ஹர்ஷா போலாமா??”

“பாத்து பத்திரமா வா ஹரிணி எதுனாலும் எனக்கு போன் பண்ணு..”,என ஹர்ஷாவும் விடைபெற மெதுவாய் டைனிங் ஹாலை நோக்கிச் சென்றாள்..அங்கு ஏற்கனவே ரகுவை அனைவரும் சூழ்ந்து நிற்க இவளை கண்டதும் ஆரவாரம் இன்னும் அதிகமானது..

“டப்ளோ சான்ஸேயில்ல ஹரிணி யூ வேர் ஆசம்..ரொம்ப ரியலிஸ்டிக்கா இருந்தது.”,.என வருபவர் போவோர் எல்லாம் அவளிடம் கைகுலுக்க அவள் நிலையுணர்ந்த ஏஞ்சல் அவள் கைப்பற்றி தன்னோடு அழைத்துச் சென்றாள்..அவள் உள்ளே சென்றதிலிருந்து ரகுவின் பார்வை அவளை துளைத்தெடுத்துக் கொண்டுதான் இருந்தது..அதில் காதல் ஏக்கம் அதையும் மீறிய ஏதோ ஒன்று அவளை தடுமாறச் செய்தது..அவனை பார்பதை தவிர்த்து சாப்பிட்டு முடித்தவள் ஒவ்வொருவராய் கிளம்ப ஆரம்பிக்க என்ன செய்வதென தெரியாமல் தவித்தாள்..

அதற்குள் அவளை செய்கையால் பிறரறியல் அழைத்தவன் காருக்கு வரச் சொல்ல ஏஞ்சலிடம் மட்டும் கூறிவிட்டு கிளம்பினாள்..வெளியே வந்தவளின் அருகில் வந்தவன்,

”ஹணி இந்தா சாவி நீ கார்ல உக்காரு நா இதோ டூ மினிட்ஸ் வரேன்..உள்ள லாக் பண்ணிக்கோ”என அவளின் பதிலுக்கு நிற்காமல் சென்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.