(Reading time: 16 - 32 minutes)

ஆனால் காதலும் காலமும் யாருக்காகவும் காத்திருக்குமா என்ன??மாதங்கள் கடந்திருந்தது..ஹரிணி தன் படிப்பை நாளையோடு முடிக்கிறாள்..கேம்பஸில் ஆல்ரெடி தேர்வாகி விட்டாள்..அவனைப் பார்த்து முழுதாய் வருடம் கடந்திருந்தது..ஆனால் அவனின் காதல் அந்த பார்வை அவளின் ஆழ்மனதில் அழகாய் ஆணிவேராய் பதிந்து விட்டிருந்தது..இந்த ஒரு வருடத்தில் ஹரிணிக்கு மூன்று ப்ரபோசல்கள் வந்திருந்தன ஆனால் அவன் முகம்தவிர எதையுமே அவள் மனம் உள்வாங்க மறுத்தது..தான் அவனை விரும்புவதை என்றோ உணர்ந்திருந்தாள்..ஆனால் அதை வெளிக்காட்டவில்லை..

மறுநாள் கடைசி பரீட்சையை முடித்து வந்து மரத்தடியில் அமர்ந்தவள் இலக்கில்லாமல் எங்கோ வெறிக்க தனதருகில் யாரோ இருப்பதாய் உணர்ந்தவள் திரும்ப ஒரு நொடியில் அந்த கண்கள் காட்டியது காதல் தேடல் தேடியது கிடைத்த சந்தோஷம் இத்தனை நாள் தொலைத்த வருத்தம்..மீண்டும் தொலைத்து விடுவோமோ என்ற பயம் என அத்தனை அத்தனை உணர்ச்சிகளும்..

அவன் நிறையவே மாறியிருந்தான்..நேர்த்தியாய் வெட்டியிருந்த சிகை அவன் அழகை அதிகரிப்பதாய் அந்த அடர்த்தியான மீசை..உடல் லேசாய் எடை போட்டிருக்க வழக்கமான ஆர்ம்ஸ்..பார்மல் சட்டையை இன் பண்ணியவாறு பார்மல் பேண்ட் அண்ட் ஷு..தனக்குள் அவசர அவசரமாய் தன்னவனை நிரப்பினாள்..

“எப்படியிருக்க ஹணி???”

இதோ அதோவென அவனிடம் சரணடைய காத்திருந்தது அவளின் இதயம்..

“நல்லாயிருக்கேன் நந்தா நீங்க..எப்படி???”

“ம்ம் அப்பா வர சொல்லிருந்தாரு..ரியலி அண்எக்ஸ்பெக்டட்..சரி எக்ஸாம் எப்படி பண்ணியிருக்க??”

“ம்ம் அதெல்லாம் வழக்கம்போல நல்லா எழுதியிருக்கேன்..”

“குட் ரொம்பவே மாறிட்ட ஹணி..”

“???”

“இல்ல பேஸ்ல ஒரு மெச்சூரிட்டி கொஞ்சமா வெயிட் போட்டு லுக்கிங் மோர் கார்ஜியஸ் நவ்..”

அவன் பேச பேச அவளின் கன்னம் சிவப்பேற ரகு தடுமாறிக் கொண்டிருந்தான்.”.ஹணி..”

“மிஸ்ட் யூ வெரி பேட்லி..நீ என்ன மிஸ் பண்ணியா???”

இல்லையென்று எப்படி கூற முடியும் ஒவ்வொரு நாளும் நொடியும் அவன் நினைவுகள் தானே அவள் வாழ ஆக்சிஜனை கொடுத்தது..பதில் கூறவில்லை அவனிடம்..

“உன்னை பாத்ததுல ரொம்ப சந்தோஷம் ஹணி..டேக் கேர் லவ் யூ”, என்றவன் நிற்காமல் சென்றுவிட்டான்..இனி அவனை எப்போது காண்போம் என பெண்ணவள் மனம் பரிதவிக்க அடுத்த 24 மணி நேரத்தில் அவன் முன்தான் இருக்கப் போகிறாள் என்பதை உணரவில்லை அந்த பேதை..

வணக்கம் ப்ரெண்ட்ஸ்..எபி எப்படியிருந்தது..கல்லூரி நாட்களில் எப்போதுமே இந்த கலைநிகழ்ச்சிகளுக்கு தனி இடம் இருக்கும்..அதற்காகவே இரண்டுமுறை இதை கதையில் சேர்த்திருக்கிறேன்..கருத்துக்களை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.. smilesmile

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1167}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.