(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 07 - ஸ்ரீ

en kadhalin kadhali

ரோஜாக் கடலே என் ராஜா மகளே

என் ஆசைக் கனியே வா தனியே

காதல் துணையே என் கண்ணின் மணியே

என் இன்னோர் உயிரே வா அருகே

 

பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்

பொன்னில் வார்த்தது மேனிம்........

பூச்செடியின் மேலே காற்றடித்தாலும்

உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி

 

வா வா அலைகடல் சிறுதுளி வா வா

பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா

வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா

கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா

 

உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது

அதுபோல் நம்காதல் மானே.......

ரோஜாக் கடலே என் ராஜா மகளே

என் ஆசைக் கனியே வா தனியே

த்தனை நாள் பார்க்காமல் இருந்தபோதாவது மனம் இவளிடம் பேருக்காகவாவது இருந்ததாய் தோன்றியது இன்று அவனை பார்த்தவளுக்கு அப்படியே அவன்பின் கைபிடித்துச் சென்ற தன் இதயத்தை நினைத்து நினைத்து கோபம் எழுந்தது..அதை முகத்தில் காட்டாமல் இருப்பது அதைவிட பெரிய கொடுமையாய் இருந்தது..மறுநாள் காலையில் தான் சேரவிருக்கும் அலுவலகத்தில் சப்மிட் செய்ய வேண்டிய டாக்குமெண்ட்ஸை ஒருமுறை சரிப்பார்த்தவள் ப்ரம்ம ப்ரயத்தனப்பட்டு தூக்கத்தை வரவைத்தாள்.

ஹர்ஷா அவளை அந்த ஐடி வளாகத்தின் வாசலில் இறக்கிவிட்டுச் செல்ல கொடுக்கப்பட்டிருந்த ப்ளாக்கிற்கு சென்று அவள் வந்த விவரத்தைகூறி காத்திருந்தாள்..அரைமணி நேரத்தில் அவளை அழைக்க உள்ளே சென்று தேவையான ப்ராஸஸ் அனைத்தையும் முடித்து வெளிவரும் போது ஒன்றரை மணிநேரம் கடந்திருந்தது..

லேசாய் தலை வலிப்பதாய் தோன்ற பின்பகுதியில் இருந்த அந்த ப்ரம்மாண்டமான கேபிடேரியாவிற்கு சென்றாள்..தன் டெம்பரவரி பாஸை செக்கியூரிட்டியிடம் காட்டிவிட்டு உள்ளே நுழைந்தவள் காபி வாங்கி தனியே இருந்த இருவர் இருக்கையில் சென்று அமர்ந்தாள்..

ஹே ஹணி என்ற குரலை கேட்டவளுக்கு இதமாய் குளிர்காற்று மனதில் வீச இவனும் இங்கதான் வேலை பாக்குறானா??என்ற கேள்வியோடு திரும்பியவள் சிநேகமாய் சிரித்து எழ,

“உக்காருடா நீ என்ன இங்க?? எந்த ஆபீஸ்??”

“இங்க தேட் ப்ளோர்தான் நந்தா..நீங்களும் இங்கேயா வொர்க் பண்றீங்க???”

“ம்ம் நா ஆப்போசிட் ப்ளாக்..இது காமன் கேப் தான் சோ இங்க வருவேன்..சரி இரு நானும் டீ வாங்கிட்டு வரேன்”, என்றவாறு சென்று வாங்கி வந்தமர்ந்தான்..

“அக்சுவாலா நாம ரெண்டு பேருக்குமே ஒரே க்ளைண்ட் தான்..சொல்லப்போனா நீ போற டீமோடதான் எப்பவுமே எனக்கு முட்டிக்கும்..சரி எப்போ ஜாய்ன் பண்ற???”

“மோஸ்ட்லி நெக்ட் மந்த்ல வந்துடுவேன்னு நினைக்குறேன்..”

“நிஜமா இது அன்எக்ஸ்பெக்டட் சர்ப்ரைஸ் தான்..ஒரு வருஷ தண்டனை போதும்னு கடவுளுக்கு இரக்கம் வந்துடுச்சு போல..”,என்றவன் அவளை லேசாய் நிமிர்ந்து பார்க்க,அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

“ஹணி இன்னமும் உன் முடிவுல எந்த மாற்றமும் இல்லயா???”

“நந்தா..”

“எதுவாயிருந்தாலும் சொல்லு ஹணி..”

“நீங்க இப்போ ப்ரீயா???”

“ஏன்டா என்னாச்சு???”

“இல்லை கொஞ்சம் பேசணும் ஆனா இங்க வேண்டாம்..”,குரல் நடுங்கியது அவளுக்கு..

அவளை பார்த்தவனுக்கோ தன்னவள் இத்தனை வேதனையை அனுபவிக்க தான் தான் காரணம் என்பதை எண்ணி வேதனையாய் இருந்தது..

“சரி எங்க போகணும்னு சொல்லு நா அதுக்கேத்த மாதிரி பெர்மிஷன் சொல்லிக்குறேன்..”

“எங்க வேணா போலாம் நீங்க எங்க சொல்றீங்களோ அங்க ஆனா நா பேசணும் “,குனிந்த தலை நிமிரவில்லை அவள்..

“ஹணி வீட்ல தேடப் போறாங்க.”

“அதெல்லாம் நா சொல்லிக்குறேன்..”

அதற்குமேல் பொறுக்காதவன் நீ இங்கேயே இரு ஹணி நா ஒரு 15 மினிட்ஸ்ல வந்துரேன்..என வேகமாய் அங்கிருந்து நகர்ந்தான்..ஹரிணியோ நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.