(Reading time: 15 - 30 minutes)

அவனிடம் இத்தனை காதலை அவள் நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை..இரு வருடங்களாய் அவனுள் இருந்த காதல் இந்த ஒரு வருடமாய் அவள் கொடுத்திருந்த பிரிவு இப்போது அவனின் காதலுக்கான அவளின் அங்கீகரிப்பு என அனைத்துமாய் அவனை கிறங்கடித்திருந்தது..

சாதாரணமாகவே அவளை பார்த்தால் பரபரக்கும் இதழ்கள் இன்று இத்தனை அருகாமையில் எப்படி அமைதி காக்கும்..இருந்தும் அவன் செய்த செயலை நியாயப்படுத்த விரும்பவில்லை..வேக வேகமாய் ஆழ்மூச்செடுத்தவன்  வேகமாய் அவளருகில் வந்து கைப்பற்ற,

“ப்ளீஸ்ப்பா வேண்டாம்..ப்ளீஸ்..”,என்றவளை சற்றும் தாமதிக்காது தன் தோள் சாய்த்துக் கொண்டான்..ஆதரவாய் பாதுகாப்பான அரவணைப்பு மட்டுமே அது..

“ரியலி ரியலி சாரி ஹணி..சத்யமா நா என் கண்ட்ரோல்ல இல்ல..நீ என்னோட ஏஞ்சல்டீ..உன்னை இவ்ளோ பக்கத்துல அதுவும் என் காதலை ஏத்துகிட்ட அப்பறம் சத்தியமா என்னால சும்மா இருக்க முடில..அதுக்காக என்னை தப்பா நினைச்சுறாத..உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லவா உன்னை லவ் பண்றதா தோணிண அடுத்த நொடியிலிருந்து உன்னை எப்போ எஙக பாத்தாலும் இழுத்து ஹக் பண்ணி கிஸ் பண்ணணும்னு தோணிட்டேயிருக்கும்..நிஜமா எனக்கே சில நேரம் தோணும் பொறுக்கி மாதிரி யோசிக்கிறேனோனு ஆனா உன்னை தவர வேற எந்த பொண்ணையும் மனசளவுல கூட தப்பா பாத்ததே இல்லடா ப்ராமிஸ்..”

மெதுவாய் அவனிடமிருந்து விலகியவள்,”பரவால்ல நந்தா..சரி நாம போலாமா??அப்பறம்..இதுமாதிரி அடிக்கடி வெளில லா வர மாட்டேன் நந்தா..தப்பா எடுத்துக்காதீங்க..”

“இதுனால தான்டீ உன் மேல நா பைத்தியமாவே இருக்கேன்..நானும் உன்னை எங்கேயும் கூப்டமாட்டேன்..கவலபடாம இரு..இனி ஒரே ஆபீஸ் தான டெய்லி பாக்க போறோமே இப்போதைக்கு அதுவே போதும் “,என்றவன் அவள் கையை மட்டும் விடவில்லை..

விரல்களை வருடிக் கொண்டேயிருந்தான்..கையை மென்மையாய் அழுத்துவதும் விரல்களை ஒவ்வொன்றாய் வருடுவதுமாய் அமைதியில் நொடிகள் கரைய அவள் விழி பார்த்தவன் விரல்களில் இதழ்பதித்து விடுவித்தான்..

அவள் தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்ப தயாராக,

“ஹணி உன் போனை குடு ஒரு நிமிஷம் “,எனக் கேட்க ஒன்றும் கூறாமல் கையில் கொடுத்தாள்..இரண்டு நிமிடத்தில் அவள் கையீல் கொடுத்தவன்,

“ஹணி என் நம்பர் என் ரூம் நம்பர் ரெண்டுமே இதுல சேவ் பண்ணிருக்கேன்..உனக்கு எப்போ பேச முடியுமோ நீயே கூப்பிடு இல்லனாலும் ப்ரச்சனையில்ல..சரியா பட் என்னைக்கு ஆபீஸ் வர்றநு மட்டும் சொல்லிடு..சரியா டா???”

“ம்ம் என் நம்பர் நீங்க எடுத்துக்கலையா??”

“வேணாம்டா நீ உன் சூழ்நிலை பாத்து கால்பண்ணு இப்போதான் நீயே என்ன ஏத்துருக்க அதுகுள்ள உங்கப்பாகிட்ட மாட்டி அவரு எதாவது சொல்லி இதெல்லாம் தேவையா…சோ கால் ஆர் மெசெஜ் நீயே பண்ணு..”

லேசாய் சிரித்தவள் வாசலை நோக்கிச் செல்ல அவளை ரசித்தவாறே பின்னே சென்றான்..அவளை  ஆபீஸ் அருகிலேயே இருந்த பஸ் ஸ்டாப்பில் இறக்கியவன் தன்னவளின் நினைவிலேயே மிதந்தான்..ஹரிணிக்கும் தன் காதலும் அவளவனின் ஸ்பரிசங்களும் முத்தங்களும் மொத்தமாய் உருக்கி விட்டிருந்தது…தன்னை சுற்றி அனைத்துமே அழகாகிவிட்டதாய் தோன்றியது..அன்று முழுவதுமே சொல்ல முடியாத ஒரு உற்சாத்தோடே அலைந்து கொண்டிருந்தாள்..

தங்கையின் உற்சாகத்தை கண்டவன் விஷயத்தை ஓரளவு ஊகித்திருக்க இரவு அவளை மாடிக்கு அழைத்தான்..

“என்ன ஹரிணிம்மா ஒரே சந்தோஷமா இருக்க போல??ஆபீஸ் அவ்ளோ நல்லாயிருக்கா????”

“ஏன் ணா அப்படி கேக்குற??”

“இல்ல சும்மாதான்..”

“ம்ம் நல்லா இருக்குண்ணா..வந்து நா ஒண்ணு சொல்லுவேன் கோப படாம கேக்குறியா??”

“என்னடா சொல்லு??”

“அது இன்னைக்கு நந்தாவ பாத்தேன்ணா..”

“யார சொல்ற????”

“அதான் எங்க காலேஜ் சீனியர்..ஒருதடவை சொன்னேனே..”

“ஓ ஆமா ஆமா..என்னாச்சு எதுவும் சொன்னாரா??? “

“இல்ல வந்து அவரு ஒண்ணும் சொல்லல நாதான் அவர்கிட்ட அவர லவ் பண்றதா சொல்லிட்டேன்.”.

“ஹரிணிம்மா..”

அண்ணா ப்ளீஸ் என்ன தப்பா நினைக்காத..நா சொல்றத கொஞ்சம் கேளேன்..போன அனுவல் டே அப்போவே எனக்கு அவர பிடிச்சுருக்குநு எனக்கு தெரியும்ண்ணா..ஆனா அவர்கிட்ட நா சொல்லல..அவரு காலேஜை விட்டு போயிட்டாருனா நா மறந்துருவேன்னு நம்பினேன் மறந்துட்டேன்னும் நினைச்சேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.