(Reading time: 15 - 30 minutes)

ஆனா நேத்து அவர மறுபடியும் பாத்தப்போ சத்தியமா என்னால முடிலணா..எங்க அவரை மறுபடியும் மிஸ் பண்ணிருவேனோனு பயமா இருக்கு..அவர் எனக்கு வேணும்..அவரோட மட்டும் தான் என்னால சந்தோஷமா வாழ முடியும்ணா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ எனக்கு உன்னை விட்டா ஷேர் பண்ண ஆள் இல்லணா..என அவன் கையை பிடித்துக் கொள்ள,

ஆதரவாய் சிறியவளின் தலை வருடியவன்,” ஹரிணிம்மா அழாத..நா இருக்கேன்டா உனக்கு..அம்மா அப்பாகிட்ட நா பேசுறேன் உனக்காக..நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் டா..நீ என்கிட்ட அவரைபத்தி சொன்ன மறுநாளே நா அவரை மீட் பண்ணி பேசினேன்..”

“என்ன அண்ணா சொல்ற?????”

ஆமா டா நீ சொன்னவுடனே எனக்கு தோணிணது பணக்கார வீட்டு பையன் சும்மா டைம்பாஸுக்கு தான் இப்படி பண்றான் கொஞ்சம் எடுத்துசொன்னா புரிஞ்சுப்பான்னு நினைச்சு தான் போனேன்..ஆனா அவருகிட்ட நா யாருநு சொன்னவுடனே துளி கூட பயமோ பதட்டமோ இல்ல..ப்ரண்ட்லியா பேசினாரு..சொல்லப் போனா ரொம்பவே தெளிவா..

அதுக்கு மேல எனக்கு என்ன சொல்லனு தெரில எந்த விதத்திலேயும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னாரு சொன்ன வாக்கை காப்பாத்தவும் செஞ்சுட்டாரு..அன்னைக்கே என் நம்பர் வாங்கினாரு..ஒரு மூணு நாலு தடவை பேசிருக்கோம்..பட் உன்னைபத்தி ஒரு வார்த்தை பேசினதில்ல..அதுலயே அவரை எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு..

“ஏன்ணா இவ்ளோ நாள் சொல்லைவே யில்ல???”

“இல்லடா ஒரு வேளை உன் மைண்ட்ல ஒண்ணுமேயில்லாம இருந்து வீணா நா ஆசையை வளர்த்துட கூடாதேநு தான் அமைதியா இருந்தேன்..நல்ல பையன் தான்டா..இப்போ சமாளிக்க வேண்டிய ஒரே ஆளு அப்பா மட்டும் தான்..எப்படி சம்மதிக்க போறாருனு தெரில பட் முடிஞ்ச வர ட்ரை பண்ணுவோம் நீ சந்தோஷமா இருடா ஹரிணி நா இருக்கேன்..”

தேங்க் யூ சோ மச் ணா..தனதறைக்கு வந்தவள் மொபைலில் இருந்த அவன் நம்பரையே பார்த்திருந்தாள்..மெசெஜ் செய்ய மனது துடித்தாலும் ஏதோ ஒரு பயம் உள்ளே எட்டிப்பார்க்க அந்த எண்ணத்தை அப்படியே கைவிட்டாள்.. அடுத்த 20 நாட்களும் தன்னவனோடு கனவிலேயே கழிந்தது..ஏனோ அவனை அழைத்து பேசும் தைரியம் மட்டும் வந்திருக்கவில்லை..

அன்று அவள் வேலைக்கு சேரும் தேதி குறித்த மெயில் வர அதை அவனிடம் கூற வேண்டுமே என காத்திருந்தாள்..இரவு அனைவரும் உறங்கிய பின் தனதறைக்கு வந்து கதவை பூட்டியவள் மொபைலை எடுத்து அவனை அழைத்தாள்..இரண்டாவது ரிங்கிலேயே எடுத்தவன் வேகமாய்..

“ஹணி..”

“நா தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க???”

“ம்ம் பின்ன இந்த ராத்திரில என் பொண்டாட்டிய தவர அன்னோன் நம்பர்ல இருந்து யார் என்கிட்ட பேசுவா??”

ம்ம் என்றவள் அமைதியாக,

“எப்படியிருக்க ஹணி டியர்??”

“ நல்லாயிருக்கேன் நந்தா நீங்க எப்படியிருக்கீங்க??”

“ம்ம் ஏதோ இருக்கேன்”

“ஏன் என்னாச்சு உடம்பு சரியில்லையா???”

“அதெல்லாம் இல்ல மனசுதான்..அதைதான் அன்னைக்கே நீ எடுத்துட்டு போய்ட்டியே..அதுக்கப்பறம் உன்னை பாக்காம மெலிஞ்சு போய்ட்டேன்..”

பெண்ணவளின் காது மடல் அதுவாய் சூடேறியது..காலையில் அழைத்திருக்க வேண்டுமோ என நொந்து கொண்டாள்..

“சரி எப்போ ஆபீஸ் வர ஹணி???”

“கம்மிங்  வெட்நெஸ் டே நந்தா..”

“கூல்..இன்னும் இரண்டு நாள் இருக்கா..ரொம்ப கஷ்டம் பட் பரவால்ல உன்கூட பேசினதே போதும்..மிஸ் யூ டீ மை ஹனி டார்லி..”

“நந்தா..”

“சொல்லு ஹணி..எப்போ நீ நம்ம வீட்டுக்கு வருவ..சத்தியமா ரொம்ப நாள் தாக்கு பிடிக்காதோனு தோணுது..ஐ அம் லைக் அ மேட் ஆன் யூ..உன் வாசம் என் மேல பட்டுகிட்ட இருக்கனும்..நீ எப்பவுமே என் கைக்குள்ளேயே..”

“நந்தா என்ன இதெல்லாம்??”

“ப்ச்ச் போடி நீ ரொம்ப படுத்துற என்ன பாத்தா பாவமா இல்லையா??உனக்கே உனக்காக தான் நா காத்துட்டு இருக்கேன்..லவ் யூ சோ சோ மச்ச்ச்ச்..என்ன எதுவும் பேச மாட்ற??”

“இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல..கொஞ்சம் பயமா இருக்கு…”

“என்னை பார்த்தா????”

“இல்ல நந்தா உங்க காதலை பாத்து ஏன் என் மேல இவ்ளோ லவ் வச்சுருக்கீங்க??நா அப்படி உங்களுக்கு என்ன பண்ணிணேன்??ரொம்ப அவசர படுறீங்களோனு தோணுது..”

“ஹணி ஏன் எப்பவும் தப்பு தப்பா யோசிக்குற..என்னை நம்பு பேபி நா கெட்டவன்லா கிடையாது உன்னை ஏமாத்திட்டுபோற ஐடியாவும் கிடையாது..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.