“இங்க பாரு ஹரிணி நா உன்கிட்ட லவ் சொன்ன விதம் வேணா அவசரமா இருக்கலாம் பட் சொன்ன விஷயம் ரொம்பவே யோசிச்சு நிதானமா எடுத்ததுதான்..எப்போயிருந்துநுலா கேக்காத முதல் தடவையிலிருந்தேகூட இருக்கலாம்..பட் உன்னை முதன்முதலா புடவைல அதுவும் எங்க வீட்டுலயேபாத்தப்போ..காட் அத நா எப்படி உனக்கு புரிய வைப்பேன்..அதெல்லாம் பசங்களுக்கு மட்டுமே தெரியுற ஒரு பீல்..
அதுக்காக புடவை கட்டின எல்லா பொண்ணை பாத்தாலும் அப்படிதான் இருக்குமாநு கேக்காத..நூறு பொண்ணு ஏன் லட்சம் பேரை நிறுத்தினாலும் நமக்கானவங்கிற பீல் ஒருத்தர்கிட்ட தான் வரும்..என் லைப்ல அது நீதான்…நீ மட்டும் தான்..உனக்கு ஒரு நல்ல ப்ரெண்டா இந்த எட்டு மாசம் இருக்க முடிஞ்ச என்னால ஏன் உன் லைப் புல்லா இருக்க முடியாது..உன் மனசு உனக்கே புரில ஹரிணி அதான் உண்மை..”
“ஒரு சின்ன எக்சாம்பில் சொல்றேன் இதே வேற யாராவது உன்னை லவ் பண்றதா சொல்லிருந்தா மறுபடியும் அவங்களோட இப்படி உக்காந்து பேசிட்டு இருப்பியா சொல்லு??எனக்கு உன்னை பத்தி தெரியும்..என்னை பிடிக்கலனா நா எவ்ளோ கம்பல் பண்ணிணாலும் நீ இங்க இப்படி உக்காந்திருக்க மாட்ட..யோசி ஹரிணி..இன்னும் இரண்டு மாசம்தான் கரெக்ட்டா சொல்லனும்னா ஒன்றரை மாசம் அதுக்கப்பறம் நா உன்னை எப்போ பாப்பேன்னு எனக்கே தெரிலை..
சோ இந்த டூ மந்த்ஸ் ஆவது என்கூட சகஜமா எப்பவும் போல பேசு..அதுக்கப்பறம் எப்பவாவது என் மேல இருக்குற லவ் உனக்கு புரிஞ்சா கண்டிப்பா என்னை தேடி வா..அதுக்கு முன்னாடி நா உன்னைத் தேடி கண்டிப்பா வந்துருவேன்..நாளைலயிருந்து நா பழைய ஹரிணியை பாக்கனும் என்னோட ஒரு நல்லப்ரெண்டை நா மிஸ் பண்ண விரும்பல..ஹோப் யூ அண்டர்ஸ்டண்ட் ம்ம் “,என அவளை பார்க்க ஒன்றும் கூறாமல் வேகமாய் எழுந்து சென்றுவிட்டாள்..
நிறையவே யோசிக்க வைத்திருந்தான்..அதைவிட அவனது கண்கள் தன்னை மொத்தமாய் கடத்துவதாய் உணர்ந்தாள்..ஒவ்வொரு வார்த்தையின் போதும் அவன் கண்கள் தன்னை வருடியது நினைக்கும்போதே சிலிர்த்து..அவன் கூறுவதும் சரிதான்..இதைவிட டீஸண்டா யாரால நடந்துக்க முடியும்..அட்லீஸ்ட் முகம் பாத்து பேசுற அளவாவது இருக்கனும் என தனக்குத் தானே கூறியவள் ஓரளவு தெளிவடைந்ததாய் உணர்ந்தாள்..
மறுநாள் கல்லூரி வந்தவள் எப்போதும் போல் அவனுக்காக பார்க்கிங்கில் காத்திருந்தாள்..ஆனால் ஏனோ மனது மட்டும் படபடப்பாகவே இருந்தது..அவன் பைக் வாசலை கடந்து உள்ளே நுழைந்த போது ஒரு நிமிடம் இதயம் நின்றேவிட்டிருந்தது அவளுக்கு..பைக்கை நிறுத்திவிட்டு அவளிடம் வந்தவன்,
“ஹாய் ஹணி..சாரி சாரி ஹரிரிரிணிணிணிணி..போதுமா..”
ஹாய் என்றவாறு அவனோடு தங்களின் வழக்கமான இடமான கல்பெஞ்சில் அமர்ந்தாள்.சற்று தள்ளி அவளோடு அமர்ந்தவன், ஹரிணி..
“ம்ம்ம்..”
“என்னாச்சு சைலண்ட்டாவே இருக்க??”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…”
“ம்ம் சரி உன் டான்ஸ் வீடியோ பாக்குறியா??அன்னைக்கே காட்டனும்னு நினைச்சேன் அப்படியே போயிடுச்சு..”,என தன் மொபைலை எடுத்து அவளிடம் நீட்ட அதை வாங்கியவள் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்க கைதவறி ஹோம் ஸ்க்ரீன் வந்துவிட அதில் அழகாய் சிரித்தவாறு நடராஜர் போஸில் நின்றிருந்தது அவளேதான்..
சட்டென அக்கம்பக்கம் பார்த்தவளாய்,” என்ன நந்தா நீங்க??என் போட்டோ ஏன் வச்சுருக்கீங்க??யாராவது பாத்தா???”
“டென்ஷன் ஆகாத யாரும் பாக்க மாட்டாங்க இது என் பர்ஸ்னெல் மொபைல்..என்னைத்தவிர யாரும் யூஸ் பண்ணமாட்டாங்க..ஓரு சின்ன விஷயத்துக்கு எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற???”
பெஞ்சில் இரு கைகளையும் ஊன்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்,” தெரில நந்தா எப்போயிருந்து இந்த பழக்கம்நு..மேபி 12 வயசுல இல்ல 15 வயசுல தெரில..ஸ்கூல் போய்ட்டு வர்ற வழில எதார்த்தமா எதாவது ஒரு பையன் பாத்தா கூட அப்பா அவன்கிட்ட போய் திட்டும் போதா..11த் படிக்கும் போது ஒரு பையன் லவ் லெட்டர் குடுக்க வந்தது தெரிஞ்சு அவன கண்ணு மண்ணு தெரியாம அடிச்சத பாத்ததிலிருந்தா தெரில..
அப்போயிருந்தே பசங்க,லவ் இதெல்லாம் கேட்ககூடாத வார்த்தைகளா ஆகிடுச்சு என் அகராதியில.. அப்படியிருக்க ஒரு பையன் மொபைல்ல என் போட்டோ இருக்குறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லையே..”
“ஹரிணி..”
“வேண்டாம் நந்தா நீங்க காதல்நு ஒரு விஷயத்தை ஆரம்பிக்குற முந்தின செகண்ட் வர நமக்குள்ள ஒரு அழகான நட்பு இருந்ததுல அது ரொம்பவே அழகானது அது அப்படியே இருக்கட்டுமே ப்ளீஸ்..”