(Reading time: 10 - 19 minutes)

“ஆனாலும் உங்களுக்கு இருக்கற லொல்லு இருக்கே.”என அவள் சினுங்கியபடி ”தூக்கம் வரல அத்த அதான்”என்றாள்..

“ஏய் லூசு போதும் கொஞ்சினது.. நீ கொவில் போனும் சொன்ன’நால தான் சீக்கிரம் வந்தேன்.. மசமச நு நிக்காம போய் ரெடி ஆகு.. “

எல்லாம் என் நேரம் என தலையில் அடித்தபடி தயாராக சென்றாள்..

“ரித்து உனக்கு வண்டி ஓட்டத் தெரியாதுனு தெரிஞ்சும் உங்கிட்ட வண்டி தந்த பாரு என்ன சொல்லனும்.. ஏய் ஏய் பார்த்து.. இன்னிக்கி எவன் கிட்ட திட்டு வாங்கப் போறோமோ..”என ஷைலு பொலம்பிக் கொண்டே பயணம் செய்தாள். இருவரும் இரண்டுத் தெரு தள்ளி இருந்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.. ரித்து நன்றாக தான் வண்டி ஓட்டுவாள்.. ஷைலவோ ரித்துவை ஓட்டுவாள் வேண்டுமென்றே..

“கோவிலுக்கு பொய்ட்டு இருக்கோம் என்ன சென்சர் வேர்ட்ஸ் யூஸ் பண்ண வெக்காதடி.. பொலம்பிட்டே வந்தனா போன தடவ மாதிரி உன்ன விழுக வெச்சிருவ..

இவ செஞ்சாலும் செய்வா.. எதுக்கு வம்பு என அமைதியாகி விட்டாள்.. அவனை இக்கோவில் அருகே தான் முதன்முதலில் பார்த்தாள்.. அவள் அம்மா அப்பா இறந்தப் பிறகு இன்று தான் அவள் கோவிலுக்கு வருகிறாள்.. முன்பு எல்லாம் சனி கிழமை இங்கு ரித்துவோடு வந்துவிடுவாள்.. அதான் சங்கீ அத்தை மகிழ்ந்துப் போனார்..

அன்றும் அப்படி தான் ரித்து வண்டி ஓட்டும் பொழுது வேண்டுமென்றே அவளை பயமுறுத்திக் கொண்டே இருந்தாள் ஷைலு.. அப்படி அவ்வாறு செய்து ரித்துவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வரும் பொழுது.. எதிரில் வந்த பல்லத்தை கவனிக்காமல் போனதில் இருவரும் அடுத்த நிமிடம் ரோட்டில் கிடந்தனர்.. சுற்றிலும் கூட்டம் கூட ஆளாளுக்கு அட்வைஸ் மழை பொழிய..

“அம்மாஆ.. ரித்து நா நெனச்ச மாதிரியே இப்படி என்ன கொலைப் பண்ணப் பாத்தியே.. எவளோ நாள் ப்ளேன் டி மா இது..”என ஷைலு வலியில் கேட்க..

“என் கோவத்த கெளப்பாத டி.. எந்திரிச்சனு வெச்சுகோ தொரத்தி தொரத்தி அடிப்பேன்.. கீழே விழுந்த்தே உன்னால தான்..”என பல்லை கடித்துக் கொண்டு உறைத்தாள் ரித்து..

ஷைலு ரித்து கிடந்த நிலமையைக் கண்டு அந்த நிலமையிலும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.. ஏனெனில் அவள் பப்பரவென கிடந்தாள்..

“சிரிக்காத டி லூசு.. இந்த கூட்டத்துல யாரச்சு தூக்க முன்னாடி வராங்களா.. அட்வைஸ் பண்ண மட்டும் வந்துருவாங்க..”என ரித்து பொலம்ப..

கூடி இருந்தவர்கள் உதவ சாலையோரம் வந்தனர் இருவரும்..

“ரித்து உனக்கு அடி எதுவும் படலையே டா?” என ஷைலு கேட்க..

“ஏன் டி கேட்கமாட்ட.. நீ இனி வண்டி ஓட்டும் போது பேசிப் பாரு அப்புறம் இருக்கு..அம்மாஆ கை வலிக்குதே..எல்லாம் உன்னால தான்”என அவள் ஷைலுவிடம் சாடிவிட்டு தனக்கு தானே புலம்பியப் படி ஷைலுவை அடிக்க கை ஓங்க..

ஷைலு சிரித்துக் கொண்டே..”செல்லம் கோச்சுக்காத டா.. வலிச்சுதுனா டிக்னிட்டி பாக்காம சொல்லு டாக்டர் கிட்ட போகலாம்.. நான் கூட்டிட்டுப் போறேன்..” என ஒரேடியாக ரித்துவை அலர வைத்தாள்..

“கை எடுத்து கும்பிடறேன் தெய்வமே.. நீங்க அமைதியா இருந்தா மட்டும் போதும்.. எனக்கு கை வலிக்கவே இல்ல..”என ரித்து கூற..

ஷைலு பலமாக சிரித்துக் கொண்டே இவர்கள் நின்று கொண்டிருந்த சாலையின் எதிர்புறம் எதர்ச்சையாக பார்த்தாள்.. தனது ஹார்லி பைக்கில் சாய்ந்துக் கொண்டு இவர்களை தான் சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று ஷைலுவை பேச்சிழக்க வைத்தது..

“ஏய் ஷைலு என்ன அமைதியாகிட்ட.. கீழேலாம் தள்ளிவிட மாட்டேன் டி.. நீ அதுக்குனு அமைதியாகி ஒரேடியா எனக்கு ஷாக் தராத..”

“ஹே ஹே ஏதோ பாவம்னு ரொம்ப கெஞ்சுனனு அமைதி ஆனன்.. ஒடனே நீ ரூட்ட மாத்தாத..”

என இவ்வாறு சலசலத்துக் கொண்டே தோழிகள் இருவரும் கோயிலை நோக்கி சென்றனர்..

ந்த டூப்லெக்ஸ் வில்லா கம்பீரமாக வீற்றுயிருந்தது.. வீட்டின் முன் இருந்த அழகிய தோட்டம்.. அதில் முழுவதும் பல விதமான ரோஜா வகை செடிகள் பூத்துக் குலுங்கியது.. அவ்வீட்டிற்கு அது இன்னமும் அழகு சேர்த்தது.. அச்செடிகளின் நடுவே நின்று நீர் ஊற்றிக் கொண்டிருந்தார் ஓர் ஐம்பது வயது மதிக்கதக்க ஓர் பெண்மணி.. அவர் முகத்தில் ஒர் கம்பீரம் அதையும் தாண்டி ஓர் ஆழ்ந்த அமைதி..அவர் தான் சாரதாதேவி.. அவ்வில்லத்தின் ராணி.. அதுவும் அவரின் மகன்களுக்கு அவர் என்றுமே சூப்பர் வுமன் தான்.. அவர் வாழ்கையில் சந்தித்த பல விஷயங்களே அவரின் மனதை இரும்பாக மாற்றியிருந்தது..

“அம்மா.. உங்கள எத்தன தடவ சொல்லியிருக்க இப்படி காலை’ல வந்து இங்க இருக்காதீங்கனு.. இதுல தண்ணிவேற ஊத்திட்டு இருக்கீங்க.. உடம்புக்கு ஒத்துக்காம போக போதுமா..” என கூறிக்கொண்டே வந்தான் க்ருஷ் (போன அத்தியாயத்தில் வந்தான்’ல அவனே தான்.. ;-) )

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.