(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 01 - சகி

Nenchil thunivirunthaal

ரந்து விரிந்த உலகினை உலுக்கி எடுத்த வாசகங்கள் பல உண்டு!!அதில் ஒன்று,"நிலையாமை ஒன்று தான் நிலையானது!". "The only thing certain is nothing is certain." என்றார் மைக்கேல் மாண்டேய்ன்.உண்மை,நூறு சதவீதம் உண்மையே!!நிலையாமையே வாழ்வின் சாரம்.எதிர்மறையாக பார்த்தால் அது அழிவு.மறைமுகமாகப் பார்த்தால் அது ஆக்கம்.நேர்மறை என்றால் அது பரிணாம வளர்ச்சி.உருவாக்குதல் அழிவையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.படைப்பும் அப்படியே,பிறப்பும் அப்படியே!பசுமை மிகுந்த மூங்கிலானது துளையிடப்படும் போதே இனிய குழலாக உருவம் கொள்கிறது.வலி தாங்கி,பெரும் உதிர போக்கினை தாய் ஏற்றால் ஒழிய,உயிர் பிறக்க வாய்ப்பில்லை.இங்கு நிலையாமையே நிரந்தரமாகிறது.எண்ணற்ற கேள்விகள்,சமன்கள்,வலிகள் நிறைந்த வாழ்வினில் மனித மனம் மாயவலையினை பற்றிக் கொண்டு முன்னேற விழைகிறது.விளைவு..ஏமாற்றம், இழப்பு!!எப்போதும் விதி என்று ஒன்று உள்ளதெனில் விதிவிலக்காக ஒன்ற எழும் அல்லவா!!ஆம்...!நிச்சயம் எழும்!நிலையற்ற பிரபஞ்சத்தில் நிலைப்பெற்ற ஒன்று உண்டு!பரிபூரண தியாகம்!இதுவும் தியாகத்தை அடிப்படையாய் பெற்ற கதையே!!விதியினை தன் பாதத்தில் அடக்கிய பரிபூரண தியாகத்தின் கதை!!!

ஆதவனின் ஔியில் மாற்றம் எதிர்ப்பார்த்த விதத்தில் இல்லை எனினும் சற்றே புரிதலோடு இருந்தது.மார்கழி மாதமல்லவா!!தெய்வ பாசுரங்கள் அருகில் இருந்த ஆலயங்கள் வழி செவியினை அடைந்து மனதை நிறைத்தன.மணி ஏழு இருக்கலாம் என்றது கடிகாரம்!!

"தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தையுள்!ஊற்றான உண்ணார் அமுதே உடையானே!"-செவிகளுக்குள் தேனருவியாய் நுழைந்தன சிவபுராணத்தின் மொழிகள்!!தமிழமுதின் முத்துக்களை,மாணிக்கவாசகனின் பக்தியினை எவ்வித பிழற்சியுமின்றி,கம்பீரமாய் சிந்தின அவரது இதழ்கள்!!இறைவனின் முன்னிலையில் குவிந்த கரமும்,மூடிய விழியும் வேறு எவர் முன்னிலையிலும் பணியாததை உணர்த்தியது அவரது ஆளுமை தோற்றம்!!தாமரை மலர்கள் இறைவனை சூழ்ந்திருக்க,இறைவனோ அவர் மனதினை சூழ்ந்திருந்தான்.

"சிவம்!"-என்று முற்றிலும் தனது வழிப்பாட்டை முடித்து விழி திறந்தார் அவர்.அவர்....தர்மா!!!

இறைவனை வணங்கிவிட்டு வெளியேறியவரின் விழிகள் தேடின அவனை!!

"பார்த்திபா!"குரல் கொடுத்தார் அவர்.

"எங்கே இருக்கீங்க?"-விழி தேடிக் கொண்டிருக்க,செவியோ ஏதோ சப்தத்தை உணர்ந்தது.ஆம்...!அது அவன் காற்சிலம்பின் சப்தம் தான்!!சப்தம் வந்த திசை நோக்கி நடந்தார் தர்மா.அங்கே...புல்வெளியில் மெல்ல தவழ்ந்து எழுந்து நின்றான் அப்பாலகன்!!கதவின் மறைவிலிருந்து அதை கண்ட தாயின் மனம் ஒரு நொடி தன்னையும் மறந்தது...உலகையும் மறந்தது!!அவன் சுயமாக எழ தொடங்கிவிட்டான்!!தாயின் கொலுசொலி செவியில் விழுந்தவன்,மெல்ல திரும்ப,கால் இடறி தரையில் விழுந்தான்.

"கண்ணா!"-பதறிக் கொண்டு தன் மகனை தூக்கினார் தர்மா.

"என்னடா செல்லம்?எவ்வளவு அவசரம் உங்களுக்கு?இப்போவே நடக்கணுமா என்ன?"தன் மகனின் நெற்றியில் முத்தமிட்டார்.

"வாங்க!சாப்பிட போகலாம்!"என்று அவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடந்தார் அவர்.

"ம்...அம்மா உனக்கு பாயாசம் ஊட்டிவிடட்டா?இல்லை...இட்லி வேணுமா?"-அப்பாலகன் பாவமாய் தன் தாயை பார்த்தான்.

"சரி...சரி..!சாப்பிடு!"-என்று இனிப்பை முதலில் தன் மகனுக்கு ஊட்டினார் அவர்.

"நல்லா இருக்கா?"-அவன் எதற்கும் பதில் கூறாமல் தன் தாயின் முகத்தை பார்த்தான்.பேசியப்படி தன் மகனை சாப்பிட வைத்தவர்,தண்ணீரால் அவன் வாயை துடைத்தார்.

"அம்மாவுக்கு இன்னிக்கு எந்த வேலையும் இல்லை!அதனால,பாப்பாக்கூட தான் இருக்க போறேன்!"-என்றப்படி அவன் நாசியை செல்லமாக அழுத்தினார்.

"ம்...ம்...ம...அ!"-பதில் உரைத்தவன் அப்பாலகன் தான்!நம்ப முடியாமல் தன் புதல்வனை நோக்கினார் தர்மா.

"என்ன கண்ணா சொன்ன?"

"ம்...ம்...மா!"என்றான் திணறியப்படி!!உடனடியாக கண்கள் ஈர் கோர்த்துவிட,அவனை அள்ளித் தூக்கினார் அவர்.

"சொல்லு!"

"ம்...மா!"என்றவனை தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டார் அவர்.

"இன்னொருமுறை சொல்லு!"

"மா!"-சீராக கூறினான் பார்த்திபன்.

ஒவ்வொரு ஸ்திரிக்கும் சிறப்புமிக்க தருணம் இதுவே!!தன்னை தன் புதல்வன் "தாயே!"என்றழைக்கும் தருணம்!!ஆஸ்தி,அந்தஸ்து,செல்வம்,சீர்,பதவி அனைத்தையும் துறவுங்கள்!!தங்கள் புதல்வனாே அல்லது புதல்வியோ தங்களை முறை கூறி முதன்முதலாக அழைக்கும் தருணத்தை விடவா ஓடோடி செல்வம் சேர்க்கும் தருணம் சிறப்பாக போகிறது???நிச்சயம் கிடையாது...

"ன்னடா இன்னும் இவனை காணோம்?"-பதற்றமாக எவரையோ தேடினர் சிலர்!!!

"மச்சான்!!அவன் தான்டா மெயின் இங்கே!அங்கே பார்த்தியா பாதி மலேசியாவே இங்கே தான் இருக்கு!ஷோ ஆரம்பிக்க இன்னும் பத்தே நிமிடம் தான் இருக்கு!அவன் இன்னும் வரலை!போன் பண்ணாலும் எடுக்கலை!எங்கே தான் போயிருப்பான்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.