(Reading time: 9 - 17 minutes)

"யாரை தேடிட்டு இருக்கீங்க?"என்றப்படி உள்ளே நுழைந்தான் ராம்.

"டேய் எப்பா!நீயாவது வந்தியே!அவன் எங்கேடா?"

"எவன் எங்கேடா?"

"உடையான் எங்கேடா?"-அவ்விளைஞன் வினாத் தொடு்க்கவும்,மேடையில் கட்டுக்கடங்காத ஆரவார ஒலி கேட்டது.

சில நொடிகள் நீடித்த அவ்வொலியை கட்டுப்படுத்தியது ஒரு இசை!!!!

அதை உயிர்ப்பிக்கும் கருவி யாதாயினும்,அவ்விசை பிறந்து வந்தது நிச்சயம் ஒருவனது உயிரிலிருந்து!!

குழுமி இருந்த நண்பர்கள் யாவரும் மேடையை எட்டிப் பார்த்தனர்!!இருள் சூழப்பட்டிருந்த மேடையில் ஔி கீற்று ஒருவனிடத்தில் தஞ்சம் அடைந்திருந்தது!!!!அவனது மெய்மறக்க வைக்கும் இசையில் அனைவரும் தன்னை மறந்திருக்க,உடன் அதற்கு அழகூட்டியது ஒரு பெண்ணின் குரல்!!!தேன் சுவையாய் தித்திக்கும் தீந்தமிழில் உருவான வைர வரிகள் அந்நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தன.ஆரவாரம்....முழுதுமாய் அவ்விடத்தை நிரம்பி இருந்தது.அவனது குரலில் தான் கேட்போருக்கு அவ்வளவு உற்சாகம்!!காலம் கடப்பதையும் அறியாமல் இசை நதியில் மூழ்கி இருந்தனர்,காக்க எவரும் வேண்டாம் என்ற வேண்டுதலும்!!!மாலையில் தொடங்கிய நிகழ்வு,நள்ளிரவு வரை நீடித்து முடிந்தது.முடியும் வகையில் தான் என்ன ஒரு ஆரவாரம்!!அவ்வரங்கமே அவன் பெயர் கூறி அதிர்ந்தது.அனைவருக்கும் நன்றிகள் கூறி,விடைப்பெற முயன்றவனை சூழ்ந்தனர் யாவரும்!!ஏதேதோ பல புத்தகங்கள் அவன் முன் நீட்டப்பட்டன.அவனது மைத்துளிகள் ஒவவொன்றிலும் மிக பொறுமையாக கையொப்பம் பதித்தன!!!அவ்வளவு நேரத்திலும் அவன் முகம் எவ்வித களைப்புமின்றி புன்னகைப் பூத்தது.

"எம்மா!ஏங்க...தள்ளுங்க!"-கூட்டத்தைப் பிளந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் ராம்.

"எப்பா டேய்!!அம்மா போன் பண்றாங்கடா!"-கூவினான் அவன்.

"என்னடா?கேட்கலை!"

"அம்மா...அம்மா!போன் பண்ணிருக்காங்க!"-அவன் இதழ் அசைவை வைத்து வார்த்தைகளை புரிந்தவன்,

"அம்மாவா!"என்று பரபரப்புடன் அனைவரிடத்திலும் விடைப்பெற்றான்.ஆயினும்,அவ்வெள்ளத்தை கடக்க,அவனுக்கு முழுதாக அரை மணி நேரம் பிடித்தது.இங்கு விதியும் சிலரின் ஆணைக்கும்,சபதத்திற்கும் பணிய வேண்டும் என்று கட்டாயத்தில் அல்லவா உள்ளது!!

1967 ஆம் ஆண்டு....

ழில் கொஞ்சும் மண் அது!!காணும் அனைத்தும் இடங்களுக்கும் கண்களை அர்ப்பணித்து விடும் மனித மனம்!!வறட்சியா அப்படி என்றால் யாது??என்ற வினா அனைவரது இதயத்திலும் உண்டு!!!ஏழ்மையால் வாடியோர் எவருமில்லை அந்நிலத்தில்!!நித்திலங்கள் மண்ணிலும் அங்கு விளையும்!!என்றும் வற்றாமல் ஓடும் ஜீவநதியாய் ஓடிக் கொண்டிருக்கும் 'பைராகி'நதி!!கங்கை,காவிரி,யமுனை போன்ற புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் பூமியின் உள்ளிருந்து சுரப்பதாக ஓர் ஐதிகம்!!இன்றைய நாள் அதன் நீர் ஆதாரம் எங்கிருந்து பிறக்கிறது என்பதை அறிந்தவர் எவருமில்லை!!எங்கும் மழலைகளின் சிரிப்பொலி கேட்டவண்ணமே இருக்கும்!குற்றமென்ற ஒன்று அவ்வூரில் நிகழாத ஒன்று,காரணம் அங்கு வழங்கப்படும் தண்டனைகள்!!கடுமைகள் வழங்கப்படுவதால் தவறிழைக்க மனம் வருவதில்லை எவருக்கும்!!அவ்வூருக்கு மற்றொருமொரு தனிச்சிறப்பு யாதெனின்,அங்கிருக்கும் சிவனாலயம்!!முழுதாக நூறு அடிகளை கொண்ட இறைவனின் தவக்கோலமே அங்கு காவல் தெய்வம்!!காவலாய் வீற்றிருப்பவர் உலகாளும் எம்பெருமான்!!அவரை தாண்டி யாதும் நிகழாத என்பது நம்பிக்கை!அந்நம்பிக்கையே அங்கு எவரிடத்திலும் வேறுப்பாட்டினை விளைவித்ததில்லை.அது நம்பிக்கை என்பதை விட அச்சம் எனலாம்!!

அன்று பெரும் காற்றுடன் மழை பொழிந்துக் கொண்டிருந்தது.அதிகாலை ஆதவன் உதிக்க சில நாழிகைகள் மீதமிருந்த சமயத்தில்,தான் ஏற்ற விரதத்தை பூர்த்தி செய்ய,நிறைமாத கர்ப்பிணியாய் ஈசனை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் அப்பெண்மணி.அடிகள் எடுத்தே வைக்க இயலவில்லை.எனினும் எடுத்து வைத்தார்,எல்லாம் தன் சிசுவிற்காக!!தாமரை மாலையை கொணர்ந்தவர் அதை இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்தார்.

"இன்றையோடு முழுதாக ஒன்பது மாத கணக்கு முடியுது இறைவா!!என் கரு உருவாகி ஒன்பது மாத கணக்கு பூர்த்தியாகுது!!தடைகள் வந்தாலும்,இந்த பிரம்ம முகூர்த்த வேளையில் நான் என் விரதத்தை முழுமையாக முடித்திருக்கேன்.இனி உங்க அருள் எனக்கு முழுமையா கிடைக்கணும்!!"அவளின் அனைத்து நம்பிக்கையும் அவராகிப் போனார்.விழிகள் மூடி நின்றிருந்தவர்,காலம் கடந்தவண்ணம் இருக்க,தனது வயிற்றினில் மிதமான வலி பரவுவதை உணர்ந்தார்.சில நிமிடங்கள் அவ்வலி விஸ்வரூபம் எடுத்தது.

"அம்மா!"அலறியப்படி தரையில் அமர்ந்தார் அவர்.

"ஐயோ!அம்மாக்கு வலி வந்துடுச்சு!நான் போய் ஐயாவை கூட்டிட்டு வரேன்!நீங்க பார்த்துக்கோங்க!"-உடனிருந்த பணிப்பெண்களிடம் கூறி ஓடினான் ஒருவன்.சில நிமிடங்களில் ஊரே அவ்விடத்தில் கூடியது.எவ்வளவோ போராடினர்.தாயிடமிருந்து சிசுவை பிரிக்க இயலவில்லை.

வலியால் உடல் சோர்ந்தவர் மயக்க நிலையை நோக்கிப் பயணித்தார்.

இறைவனின் பாதத்தில் வைக்கப்பட்ட மாலை,நழுவிக்கொண்டு அத்தாயின் வயிற்றில் விழுந்து,வெளி வர போராடிய சிசுவை வரவேற்க,கடும் வலியில் தாயிடத்திலிருந்து பிரிந்தது அக்குழந்தை!!ஆதவனும் சரியாக,அச்சிசுவுடன் சேர்ந்து பிரகாசமாய் உதித்தெழுந்தான்.அவ்வுலகிற்கு ஔி நல்க!!!

Episode # 02

தொடரும்!

{kunena_discuss:1163}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.