(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 04 - தேவிஸ்ரீ

En nilavu devathai

மித்ரா அமிர்தாவை பார்த்து முறைக்க அமிர்தாவோ கண்களால் மன்னிப்பை வேண்டினாள். மித்ரா தன் தந்தையிடம் திரும்பி,

“இவங்க யாருனு சொன்னிங்கப்பா?” என வினவ, அதை கேட்ட அமிர்தா கவலைப்பட,

“உன் நந்தினி அத்தை பொண்ணுமா, அமிர்ததரங்கிணி..”

“ஓ.. நைஸ் டூ மீட் யு மிஸ் அமிர்ததரங்கிணி. ஓகே எனக்கு டயர்ட்ஆ இருக்கு நான் என் ரூமுக்கு போறேன்” என கூறியவள் வேகமாக தன்னறைக்கு சென்றாள்.

இங்கு அமிர்தாவோ கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டு மித்ராவை பின் தொடர்ந்து சென்றாள். இதையெல்லாம் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் புகழ்..

நேராக மித்ராவின் அறைக்கு சென்ற அமிர்தா கதவை தட்ட, மித்ராவோ,

“நான் இப்போது யாரையும் பார்க்கறதா இல்லை...”

“சங்கு ப்ளீஸ்..”

“நான் இப்போது உங்ககிட்ட பேச விருப்பம் இல்லை மிஸ்.அமிர்ததரங்கிணி.. நீங்க போகலாம். இன்னோரு விசயம், இனி என்னை சங்குனு கூப்பிடாதிங்க. அந்த உரிமையை நீங்க இழந்துட்டிங்க..” என கூறினாள் மித்ரா என்கிற சங்கமித்ரா..

“ப்ளீஸ் சங்கு நான் சொல்றத கொஞ்சம் கேளு..”

“போடி.. நீ என்னை விட்டுட்டு வந்துட்ட இல்லை. இனி என்கிட்ட பேசாத.. குறைந்தது ஒரு வாரமாவது நான் உன்கிட்ட பேசமாட்டேன்.. இந்த தண்டனையை  நல்லா அனுபவி..”

அப்பாடி ஒருவழியா சமாதானத்துக்கு வந்துட்டா என நினைத்தவள்.. அப்போது “நான் போகட்டா? நான் சொல்லறத கேட்க மாட்டியா?..”

“நான் எதையும் கேட்கறதா இல்லை, இப்போ இங்கிருந்து போறீயா இல்லையா?..” என மித்ரா கூற, அமிர்தா  அங்கிருந்து சென்றாள்..

இங்கு மித்ராவும் கவலையுடனும் கோபமுடனும் இருந்தாள்.. மனதினுள் ஏன் இப்படி செய்தாய் அம்மு, எவ்வளவு துன்பம் வந்திருந்தாலும் நீ என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் என்னைவிட்டு சென்றது தவறு. நம் நட்பு அவ்வளவு பலவீனமானது அல்லவே.. ஏன் இப்படி செய்கிறாய் என புலம்பினாள்..

வீட்டில் உள்ள அனைவரும் பரபரப்பாக புறப்பட்டு கொண்டு இருந்தனர்.. வெளியே சென்றிருந்த வாசுதேவன் அப்போது தான் வீட்டினுள் நுழைய, அவரைக்கண்ட பானு “ஏங்க மித்ரா போன் லைன் போகல.. அவ இன்னும் வரலைங்க..” எனவும்

“அவ எப்பவோ வந்துட்டாமா.. ரூம் ல ரெஸ்ட் எடுக்கிறேனு சொன்னா.. புகழும் வந்திருக்கான், அவன கவனிச்சியா?..”

“நான் பார்க்கவே இல்லைங்க..”

“நல்ல பொண்ணுமா நீ.. போ.. அவன் ரூமில் தான் இருப்பான். போய் கவனி..”

“அதற்கு அவசியமில்லை மாமா.. நானே வந்துட்டேன்..” என்ற புகழ் தாத்தா பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றான்.. பின் அனைவரையும் நலம் விசாரித்தவன் தமிழ் அங்கு வர,அவனிடம் பேசிக்கொண்டிருந்தான். அப்போது காலில் பந்து விழ யார் எறிந்தது என பார்க்க அங்கு யமுனா நின்று கொண்டிருந்தாள்..

“அச்சச்சோ அங்கிள்!.. மன்னிச்சுகங்க.. தெரியாம உங்க மேல பட்டுருச்சி..”

“அடடே! யாரிந்த பிரின்சஸ்.. ரொம்ப அழகா இருக்கிங்களே.. உங்க பேர் என்ன?..”

“யமுனா.. யமுனாஅமிர்ததரங்கிணி..”

“அமிர்ததரங்கிணி?..”

“என் அம்மா பேரு அங்கிள்.. என் பேரோடு சேர்த்து சொல்லும்போது அழகாஇருக்கில்ல?..”

“ஆமான்டா குட்டி.. ஸ்வீட்நேம்.. சரி.. என் பேரு புகழேந்தி..”

“புக..புகலந்தி..” என யமுனா தடுமாறி சொல்ல தமிழ் விழுந்து விழுந்து சிரித்தான்.. அப்போது தமிழை பார்த்த யமுனா,

“ஏன் சிரிக்கிறீங்க தமில்அங்கிள்” என கேட்க இப்போது சிரிப்பது புகழ் முறையாயிற்று..

“புகலந்தி இல்லடா புகழேந்தி.. ழே.. ழே சொல்லுங்க..” என புகழ் சொல்லி கொடுக்க,

“லே.. லே..” என வேண்டும் என்றே மாற்றி கூறினாள்..

“ம்ம்ம்.. சரி விடு உனக்கு  எப்படி வாயில் பேர் நுழையுதோ அப்படியே கூப்பிடு.. ஓகேவா..”

ஓகே என்றவள் இப்போது தமிழ் மீது வேண்டும் என்றே பந்து போட்டவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு,

“சாரி அங்கிள்..பந்து பட்டதுக்கு சாரி.. நான் விளையாடலாம்னு நினைத்தேன்.. “என கூறினாள்.. அதற்கு அவன் அவளை நம்பாமல் பார்க்க.. இருந்தாலும் “இட்ஸ் ஓகே டா”.. எனவும்

“அப்படினா நமக்குள்ள ஒரு டீலிங்..”

என்ன? என தமிழும்,புகழும் கேட்க,

“நான் பந்து விளையாடனது, உங்க மேல பட்டதெல்லாம் அம்மாகிட்ட சொல்ல கூடாது..”

“ஏன்?..”

“ஏன்னா நான் பந்து விளையாடினா அம்மாக்கு பிடிக்காது..”

“அது ஏன்?..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.