“சூப்பர் சித்தி.. அருமையான பதில்.. சரி அடுத்து யாரு?..” என அபி கேட்க, சந்திரன் நான்தான் என சீட்டு எடுக்க, தமிழின் பெயர் வந்தது..
“ஓகே மாமா.. நீங்க ட்ரூத்ஆ டேரா?..” என கேட்க, எங்கு ட்ரூத் சொன்னால் லவ்வ பத்தி கேட்டுருவானோ என பயந்து டேர் சொல்ல, அதற்கு சந்திரன்,
“நீங்க ஒரு ரொமான்டிக் பாட்டு படிக்கனும், அதாவது பாட்டை உரைநடையா செய்தி போல வாசிக்கனும்.. அதோடு டான்ஸ்உம் ஆடனும்..”
“நல்லா பழி வாங்கறடா எந்த சாங்?..”
“கண்ணழகா சாங்..”
“டேய் இதுக்கு எப்படி டா டான்ஸ் ஆடறது. நீயும் வா” என அவனையும் இழுத்து கொண்டு ஆடினான் தமிழ்.. இவ்வாறு அனைவரும் விளையாட வந்து இறங்க வேண்டிய இடம் வந்தது.. வண்டி ஒரு பங்களாமுன் வந்து நிற்க, அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர்.. பின் சாப்பிட்டு போய் படுக்க ஆயுத்தமாக, மின்விழி நம் கேர்ல்ஸ் எல்லாம் ஒன்றாக படுக்கலாமென கூறி மினு,மீனு,ஆதினி,அமிர்தா,யமுனா,மித்ரா என அனைவரும் அரட்டை அடித்து கொண்டு தூங்கினர். மித்ரா அப்போதும் அமிர்தாவிடம் பேசவில்லை..
விடியகாலை 4 மணி. வீட்டில் உள்ள பெண்கள் குளித்து பூஜைக்கு தேவையானதை எடுத்து வைக்க.. சங்கரி பிள்ளைகளை எழுப்ப சென்றார்.. அங்கு அனைவரும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கி கொண்டிருக்க மித்ராவை எழுப்பி அவளிடம் “அனைவரையும் எழுப்பிவிடு. ஒருமணிநேரத்தில் ரெடியாகிடுங்க” என சொல்லிவிட்டு சென்றார். பின் அனைவரும் ரெடியாகினர். அமிர்தா யம்முவை ரெடி செய்தாள், அவள் பட்டுபாவாடையில் அழகாக இருந்தாள், பின் சகோதரிகளுக்கு உதவி செய்தவள் மித்ராவின் பக்கம் திரும்ப அங்கு அவள் புடவையில் அழகாக தாயாராகி இருந்தாள். அனைவரும் ரெடியாகிவிட கீழே சென்றனர்..
பாட்டி தன் மருமகள்களிடம் பேசிக்கொண்டிருந்தவர் அவர்கள் வருவதை கண்டு பிரமிப்புடன் பார்த்தார்.
“என் பேத்திங்க எவ்வளவு அழகு.. சாயும்காலம் சுத்திபோடணும்..”
அப்போது “நாங்க பாட்டி” என பேரன்கள் கேட்க, “நீங்களும் சூப்பர் தான்” என்றார்..
அமிர்தாவோ ஆண்களை பார்த்து.. “வாவ்.. எல்லோரும் பட்டுவேட்டி,சட்டை சந்திரன் நீயுமா?..”என கேட்க பாட்டிதான் பதிலளித்தார்,
“இந்த குடும்பத்தை பொறுத்தவரை கோவிலுக்கு சென்றால் ஆண்கள் வேட்டிசட்டையும், பெண்கள் புடவை, தாவணியும் தான் போடணும்மா.. இது தாத்தாவின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..”
“சூப்பர் பாட்டி, பார்க்கவே அழகா இருக்கு” என அமிர்தா கூறினாள்..
பின் அனைவரும் கோவிலுக்கு சென்றனர்.. அப்போது அமிர்தா “அனைவருக்கும் பூ வாங்கி வருகிறேன்” என்று பூக்கடைக்கு செல்ல, அனைவரும் கோவில் உள்ளே நுழைந்தனர்..
காரை கோவில் ஓரத்தில் நிறுத்தி விட்டு பட்டுவேட்டிசட்டையில் இறங்கினான் விக்ரம்.. அந்நேரம் போன் ரிங் அடிக்க, அதை எடுத்து பேசியவாறு விக்ரம் கோவிலின் உள்ளே நுழைய, அதே நேரம் அமிர்தாவும் அவனுக்கு பக்கவாட்டில் பூவை சரி பார்த்தவாறு உள்ளே நுழைந்தாள்..
இங்கு அமிர்தா இன்னும் வரவில்லை என அனைவரும் அவள் வருகிறாளா என கோவில் நுழைவாயிலை பார்க்க, அங்கு விக்ரமும் அமிர்தாவும் அவர்களே அறியாமல் ஜோடியாக உள்ளே வரவும் அதை கண்ட நந்தினி வாசுவிடம் “இவங்க ஜோடி நல்லாருக்கில்ல அண்ணா!.. நான் நினைக்கிறததான் நீங்களும் நினைக்கறீங்களா அண்ணா” என வினவ,
“ஆமாம்மா இருவருக்கும் ஜோடி பொருத்தம் சூப்பர்.. கடவுள் ஆசை அதுதான் என்றால் அப்படியே நடக்கட்டும்” என்றார்..
அமிர்தா பூவை சரி பார்த்தவள் கீழே கல் இருப்பதை கவனிக்காமல் அதில் இடித்து தடுமாறி விழ அவ்வளவு நேரம் போனில் பேசிக்கொண்டிருந்தவன் இவள்புறம் திரும்ப, அவளை விழாமல் பிடித்தவன் அவள் முகம் பார்த்து அதிர்ந்தான்..
“நிலா.. நிலா.. நீ வந்துட்டயா, இவ்வளவு நாள் எங்க இருந்த? நான் உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா? என்னை மன்னிச்சிடுடீ ப்ளீஸ்..” என்றவன் அவள் வலியில் முகம் சுருங்குவதை கண்டவன் காலில் இரத்தம் வருவதை பார்த்தான். பின் அவளை தூக்கியவன் அருகில் இருந்த மேடையில் அமர வைத்தவன் “இங்கயே இருடா நான் இப்ப வரேன்” என கூறிவிட்டு பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுக்க காரை நோக்கி சென்றான்..
அதுவரை அமைதியாக இருந்தவள் வெறுப்பாக அவன் செல்வதை பார்த்தாள்.. அவனை பார்க்கவே கூடாது என நினைத்தவள் இன்று அவனை பார்த்து விட்டாள்..எல்லாம் விதி.. மித்ராவை பார்த்தபோதே அவனையும் பார்க்க நேரிடும் என நினைத்தவள் தான்.. ஆனால் அவனிடம் பேசக்கூட துளியளவும் விருப்பம் இல்லை..
அதே நேரம்..
“அண்ணா அந்த பொண்ணு சாகலணா.. அவ இருக்கற இடம் தெரிந்துடுச்சு.. அவ அவளுடைய பேமலியோட சேர்ந்துட்டா..”
“உங்ககிட்ட ஒரு வேலைய கொடுத்தா சரியா செய்யமாட்டிங்களாடா.. நீங்க எல்லாரும் வேஸ்ட்டுங்க.. என் கண் முன்னாடி நிக்காதிங்க போங்கடா..”
“மன்னிச்சிடுங்கண்ணா.. இப்போதாவது அந்த பொண்ண போடலாம்னா புகழேந்தி குறுக்க நிக்கறான்.. எப்படியாவது கொன்னுடறோம்ணா..”
“அதெல்லாம் வேண்டாம்.. கொஞ்சநாள் இருக்கட்டும். குடும்ப ஆளுங்ககிட்ட நல்லா பழகட்டும்.. அவங்களும் பாசம் வைக்கனும். அப்போ கொன்னா அவங்க குடும்பத்துக்கு நல்லா வலிக்குமில்ல.. அந்த வலி.. அந்த வலியை...எல்லோரும் அனுபவிக்கனும்.. ஆதிநாதன்-நகநந்தினிதேவி பொண்ணு சாகனும்” என கோபத்துடன் சிரித்தான் கங்காதரன்....
தொடரும்
{kunena_discuss:1158}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.