(Reading time: 15 - 29 minutes)

“அது ஏன்னா நான் விளையாடும்போது நிறையா தடவை அம்மா மேல பட்டுடும்.. அதனால அவங்களுக்கு காயம் நிறையா ஆகிடும்.. நெத்தில பட்டு ரத்தம் கூட வந்துருக்கு. உங்களுக்கு கூட நெத்தில தான் பட்டுருக்கும் ஜஸ்ட் மிஸ்.. பரவாயில்ல, அடுத்த தடவ சரியா போட்டுடறேன்..” என குறுஞ்சிரிப்புடன் யமுனா சொல்ல.. அப்போது தமிழும் புகழும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள, தமிழ் “எனக்கு வேலை இருக்கு” என அங்கிருந்து ஓடினான்..

ஜஸ்ட் மிஸ்-ஆ? ஆகா எமகாதகபயபுள்ளயா இருக்கே.. என மனதினுள் நினைத்த புகழ், “இனி வீட்டுக்குள்ள ஹெல்மெட் போட்டுட்டுதான் சுத்தனும் போல இருக்கே..” எனவும்

“கண்டிப்பா அங்கிள்.. விளையாட்டுனா அப்படி தான் அடி படும்.. அதெல்லாம் பார்த்தா விளையாட முடியுமா?..”

“அதுசரி.. யார் விளையாடறது யார் அடி படறது?..”

“என்னை தவிர எல்லாருக்கும் தான் அடிபடும் அங்கிள்..”

“அதுசரி.. அப்போ எல்லோருக்கும் ஹெல்மெட் வாங்கிடனும்..”

“யமுனா எங்கிருக்க?..” என அமிர்தா அழைக்க,

“இங்கதான் இருக்காங்க உங்க தவப்புதல்வி யமுனா ரொம்ப நல்லா புள்ளைய வளர்த்திருக்கமா.. இந்தமாதிரி வீட்டுக்கு ஒன்னு போதும்” என புகழ் புலம்பிக்கொண்டே சமையலறை நோக்கி சென்றான்(வேறு எதற்கு சாப்பிடதான்..பேசி பேசி டயர்ட் ஆகிட்டாராம்..)

என்னாச்சு இவருக்கு என அமிர்தா குழம்பியபடி யமுனாவை பார்த்தவள்  “என்ன சேட்டை பண்ண??..” என கேட்க, அவளோ அவசர அவசரமாக பந்தை மறைக்க, அதை கவனித்த அமிர்தா “புரிந்துடுச்சு, பந்து அவர் மேல தூக்கி எறிந்தாயா?..” என கேட்டாள்.

“மா.. என்ன பண்றது.. எதிர்பார்க்காத நேரத்துல ஒருத்தர் மேல பந்து தூக்கி போடனும்.. அப்படி அவங்கமேல பந்து விழும்போது அவங்க பந்த கேட்ச் பிடிக்கனும்..ஆனா யாருக்குமே கேட்ச் பிடிக்க தெரியல” என பாவமாக முகத்தை வைத்து கொண்டு யமுனா சொல்ல..

“அடப்பாவி, அதனால அவங்களுக்கு அடிபடுதுனு உனக்கு எத்தனை தடவை சொல்றது. உனக்கு அது தெரியலயா?..”

“மா.. நான்தான் காயம் படறமாதிரி அடிக்கறது இல்லையே.. அதுவும் இல்லாம யாருக்குமே கேட்ச் பிடிக்க தெரியல, இதுல என் தப்பு எங்க இருக்கு? போங்க.. நான் கோபமா வெளியே  போறேன்..”

“ஹேய்.. நியாயமா நான் தான் உன்மேல கோபப்படணும்.. நில்லு யம்மு” என அவள் பின்னாடியே ஓடினாள் அமிர்தா..

ங்கு, மித்ராவின் அறையில் பானு மித்ராவை எழுப்ப படாதபாடுபட்டு கொண்டிருந்தார்.. பிறகு பேக்கிங்கில் உதவி செய்தவர், கீழே சாப்பிட அழைத்து சென்றார்.. அங்கு அனைவரையும் நலம் விசாரித்த மித்ரா பின் அனைவருடன்  சாப்பிட அமர்ந்தாள்.. அங்கு வந்த யமுனா மித்ராவை பார்த்து ஹாய் சங்..என்பதற்குள் அவள் வாயை தன் கையால் மூடிய அமிர்தா அனைவரையும் பார்த்து தடுமாறியபடி புன்னகைத்தவள் “நான் என் ரூமுக்கு போகனும். இதோ வந்துடறேன்” என்று யமுனாவை தூக்கி கொண்டு அவள் அறைக்கு விரைந்தாள்.. அதைபுரிந்து கொண்ட மித்ரா அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள். அனைவரும் சாப்பிட்டு முடித்ததும்...

“எல்லோரும் தயாரா? சாப்பிட்டதும் கிளம்பனும், அப்போது தான் நைட்டுக்குள்ள அங்கு போக முடியும்” என தாத்தா கூற,

எல்லோரும் தயார் என்றனர், இதில் மினு,மீனு,ஆதினி,சந்திரனுக்குக்கு தான் மிகவும் கொண்டாட்டமாக இருந்தது.. 3 நாட்களுக்கு காலேஜ்,ஸ்கூலுக்கு பை பை சொல்லிவிட்டு உற்சாகமாக ரெடி ஆகினர்.. அனைவருக்கும் 20 பேர் அமரக்கூடிய வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அதில் அனைத்து லக்கேஜ்களையும் சரி பார்த்து அடுக்கினர்..

அமிர்தா தன் அறையில் மித்ராவை தெரிந்தமாதிரி காண்பித்து கொள்ளவேண்டாம் என யமுனாவிடம் விளக்கி கொண்டிருந்தாள். பின் அவளும் கிளம்பி வந்து வண்டியில் ஏறினாள்.. அனைவரும் உட்கார்ந்தபின் வண்டி புறப்பட்டது.. அமிர்தா தன் தாயின் அருகில் அமர்ந்தாள், பின்  தாத்தாவை பார்த்து,

“தாத்தா நாம் கோவிலுக்கு போக எவ்வளவு நேரம் ஆகும்?..”

“நைட் 8 மணி ஆகிடும்மா.. அங்க நமக்கு பங்களா இருக்கு, நைட் தங்கிட்டு காலையில நேரமா கோவிலுக்கு போகணும்”

“அப்போ அதுவரைக்கும் என்ன செய்யறது?..” என மின்விழி மீன்விழியை கேட்க,

“ட்ரூத் ஆர் டேர் விளையாடலாமா?..”

“ஆனா எப்படி விளையாட?..”

“அக்கா என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. என்கிட்ட பேனா, பேப்பர் இருக்கு, எல்லாருடைய நேம்ஸ்உம் எழுதி ஒரு பவுல்ல போட்டுடலாம், ஒருவர் வந்து சீட் எடுத்து நேம் படிக்கனும், அவர் அந்த சீட்ல இருக்க நேம் இருந்தவர்கிட்ட ட்ரூத் ஆர் டேர் கேட்டு டாஸ்க் குடுக்கனும், ஓகே வா?..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.