(Reading time: 15 - 29 minutes)

“ஹேய் சூப்பர்டா தம்பி” என 3 சகோதரிகளும் கூச்சலிட.. தாத்தாவோ “நான் இந்த ஆட்டத்துக்கு வரலப்பா” என்றார். பிறகு அனைவரையும் சமாதானம் செய்து அனைவரின் பெயரையும் எழுதியதும் கேம் ஆரம்பமானது..

“யார் முதலில் ஆரம்பிக்கறீங்க, தாத்தா நீங்களே ஆரம்பிங்க” என மினு கேட்டாள்.

சரிமா என்றவர் ஒரு சீட்டை எடுக்க அதில் வாசுதேவன் பெயர் இருக்கவும்,

“மாப்பிள்ளை ட்ரூத் ஆர் டேர்?..”

“ம்ம்.. ட்ரூத் மாமா..”

“சரி விக்ரம்-கிட்டயும் மித்ராகிட்டயும் உங்களுக்கு பிடிக்காத விசயம் எது?..”

“தாத்தா, இப்படியான கேள்வியா கேட்பாங்க? சீக்ரெட் பத்தியோ பர்ஸ்ட் லவ் பத்தியோ கேட்கலாமில்ல” என மீன்விழி கேட்டாள்..

“மீனு என்ன கேள்வி கேட்கனும்னு அவருக்குதான் உரிமை இருக்கு.. உன் டெர்ம் வந்தாமட்டும் நீ கேளு சரியா? ஆனா ஒன்னு, உன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கற அந்த அப்பாவி யாருனு தெரியல” என தமிழ்க்கதிர் கூற,

“அது யாரும் இல்லை  புகழ் அண்ணா தான்” எனவும் ஐயயோ என கதறினான் புகழ்..

“வாசுதேவன் நான் பதில் சொல்லலாமா?..” என கேட்க. அனைவரும் அமைதியாகினர்..

“மித்ரா குட்டி ரொம்ப ஸ்பெஷல்.. அவக்கிட்ட பிடிச்சது அமைதியா இருப்பா. சின்ன சின்ன குறும்பும் பண்ணுவா.. ஆனா அவகிட்ட பிடிக்காதுனு  சொல்ல முடியாது, அதை சேஞ்ச் பண்ணா நல்லாருக்கும். அது என்னனா அவளுக்கு கொஞ்சம் பிடிவாதம் இருக்கு, தன் பொருளை யாருக்கும் விட்டுதர மாட்டா அவ்வளவு தான்.. ஆனா விக்ரம் இருக்கானே அவனுக்கு கோபம்தான் அவன் எதிரியே..அதை கண்டிப்பாக அவன் மாத்தியாகனும். ஒருநாள் இந்த கோபத்தால எதாவது பெருசா இழந்துடுவானோனுதான் என் பயமே.. பிஸினெஸ்க்கு அவன் கோபம் ப்ளஸ்ஆ இருக்கலாம், ஆனா உறவுகளுக்குள்ள இந்த கோபம் சரி வராது.. அது அவன் உணரனும்” என்று வாசுதேவன் கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்.. ஆனால் மித்ராவோ அமிர்தாவை பார்க்க அமிர்தாவும் அந்நேரம் மித்ராவையே பார்த்து கொண்டிருந்தாள்..

சரி அடுத்து யாரு? என மின்விழி கூற, நான்தான் என்றாள் மீன்விழி. அவள் நல்ல நேரமோ இல்லை புகழ் கெட்ட நேரமோ அவள் எடுத்த சீட்டில் புகழின் பெயர்தான் இருந்தது..

“ஓகே உங்களுக்கு ஆப்சனே கிடையாது நீங்க ட்ரூத் தான் சொல்லனும்” என மீனு சொல்ல, “இது சீட்டிங்” என புகழ் வாதாடினான்.

“அப்படினா டேர்-னா ஏதாவது ஏடாகூடமா செய்ய சொல்லுவேன் பராவாயில்லயா?..”

“அம்மா தாயே நீ சொல்றதே செய்யறேன் சொல்லு..”

“ம்ம்.. மித்ரா அக்காக்கு முன்னாடி நீங்க யாரையாவது லவ் ஆர் சைட் அடிச்சிருக்கிங்களா?..” என மீனு கேட்கவும் மித்ரா புகழை குறுகுறுவென பார்த்தாள்..

அடக்கடவுளே! ஆல்ரெடி இவளுக்கு பொசசிவ் அதிகம் குறுகுறுவென பாக்கறாளே.. என மனதினுள் கூறிக்கொண்டவன் என்ன பதில் சொல்வதென்று புலம்பினான்..

“புகழ் நல்லா மாட்டிக்கிட்ட போல.. ஆனா நீ உண்மைய தான் சொல்லனும்..” என எச்சரிக்கை செய்தான் தமிழ்..

“அது வந்து காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ண சைட் அடிச்சிருக்கேன்.. ஆனா அது லவ் இல்ல பா; என தயங்கியபடி சொல்ல.. மித்ரா கோபத்துடன் முகத்தை திருப்பி கொண்டாள்.. ஆகா.. இவளை வேறு சமாதான படுத்தனுமே, சரி தனியா இருக்கும் போது பேசிக்கலாம் என நினைத்து கொண்டான்..

“ஓ! எங்க மித்ரா அக்காவ விட அந்த பொண்ணு அழகா?..” என மீனு கேட்டாள்..

“நீ ஏன்மா எரியும் தீயில எண்ணெய ஊத்துற. இந்த சகுனி வேலையெல்லாம் வேண்டாம். ஒரு கேள்விதான் கேக்கனும், சோ எனக்கு முடிந்தது.. நெக்ஸ்ட் யாரு?..”

“உனக்கு முடிந்ததுதான்” என மித்ராவை பார்த்து தமிழ் புகழிடம் சொல்ல, “இப்போது நான் எடுக்கறேன்” என்றான்.. பேப்பரில் உள்ள பேரை படித்தான்..

இவ்வீட்டின் மூன்றாம் மருமகள் சிவச்செல்வி அத்தை என்றவன் “நான் உங்ககிட்ட ட்ரூத் தான் கேட்கனும்.. இந்த வீடு ஒற்றுமையா இருக்க காரணம் யாரு? உங்க ஒற்றுமையின் சீக்ரெட் என்ன?..”

“ம்ம்.. சிம்பிள் கொஸ்டின் தான்.. யாரு காரணம்னா உங்க தாத்தா, பாட்டி, நந்தினி அத்தை தான்.. எந்த ஒரு உறவா இருந்தாலும் அது நல்ல உறவா அமைய நட்பு ஒன்று போதும்.. அது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.. அது பெற்றோர்- குழந்தைகளானாலும் சரி, அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, மாமியார் மருமகளா இருந்தாலும் சரி.. நம் உறவுகளுக்குள்ள உண்மையான நட்பு மட்டும் இருந்தா போதும், பாசம் தானா வரும். ஒற்றுமையாகவும் இருக்கலாம்.. ஏன்னா உண்மையான நட்பு பொறாமை படாது, எந்த தப்பு செஞ்சாலும் அத திருத்தி மன்னிக்க செய்யும்.. மகிழ்ச்சியாக இருக்க மட்டுமே யோசிக்கும்.. பிரண்ட் தான் துன்பம் வரும்போது தோள் கொடுக்கும் னு நீங்க சொல்றீங்களே.. அப்படி பட்ட நட்பு எங்களுக்குள்ள இருக்கு.. சோ இதுதான் நாங்க எப்போதும் ஒற்றுமையா மகிழ்ச்சியுடன் இருக்க காரணம்..” என சிவச்செல்வி சொல்லவும் அனைவரும் கைத்தட்டினர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.