ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல்,
“எனக்கு டேக்வான்டூ (Tae Kwon Do), கராத்தே எல்லாம் தெரியும்... பயமில்லை...” என்றாள்.
“கராத்தே தெரியும், இன்னொன்னு என்ன?”
“அதுவும் அதே மாதிரி தற்காப்பு கலை தான்... போரடிச்சப்போ கத்துக்கிட்டேன்...”
“சரி... இந்தா சாப்பிடு...” என்று கையோடு எடுத்து வந்திருந்த அரிசி உருண்டைகள் இருந்த பாத்திரத்தை கொடுத்தாள் விசாலினி.
ரச்னா பிகு செய்யாமல் வாங்கிக் கொள்ள, விசாலினி அவள் அமர்ந்திருந்த அதே பாறையில் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
“காலேல நான் பேசினதுக்கு மன்னிச்சுக்கோ...”
“ம்ம்ம்ம்”
"இதெல்லாம் சகஜமா இங்கே பேசுறது, கேட்குறது தான்... உங்க ஊர்ல இதெல்லாம் கேட்க மாட்டாங்க போலிருக்கு...”
ரச்னா முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
tru" href="/stories/tamil-thodarkathai-all-list/9930-malaiyoram-veesum-katru-bindu-vinod-11" rel="alternate">Episode # 11
{kunena_discuss:972}