Malaiyoram veesum kaatru is a Family / Social genre story penned by Vinodarshini a.k.a Bindu Vinod.
This is her third story in this pseudonym and sixteenth serial story @ Chillzee.
தென் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஹரி – விசாலினிக்கும், சென்னையில் ஸ்ரேயான்ஷ் – ரச்னாவிற்கும் ஒரே நாளில் திருமணம் நடக்கிறது.
ஹரி - விசாலினி திருமணம் பெற்றவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்றால், ரச்னா – ஸ்ரேயான்ஷ் திருமணம் அமெரிக்காவில் ஒன்றாக வேலை செய்த போது மலர்ந்த காதல் திருமணம்.
திருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஓடி விட, ஹரி – விசாலினிக்கு வித்யா, சத்யா என்று இரண்டு பெண் குழந்தைகள் இருக்க, ரச்னா – ஸ்ரேயான்ஷ் தம்பதிகள் இன்னமும் குழந்தைகள் இல்லாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் இரண்டு குடும்பங்களிலும் புயல் வீசுகிறது.
ஹரிக்கும் ராகினி எனும் பெண்ணிற்கும் இடையே இருக்கும் தவறான உறவு தெரிந்து கணவனுடன் பேசுவதை நிறுத்தி பாராமுகமாக இருக்கிறாள் விசாலினி.
அங்கே அமெரிக்காவில் மருத்துவமனையில் இருக்கும் ரச்னாவிற்கு ஆதரவாக இருக்க மறுக்கிறான் ஸ்ரேயான்ஷ்.
ஸ்ரேயான்ஷின் பாராமுகத்தினால் மனம் உடைந்து போகும் ரச்னா, கணவனிடம் சொல்லாமல், ஒரு மாற்றத்திற்காக சென்னை நோக்கி பயணம் செய்ய முடிவு செய்கிறாள்.
வேலை அழுத்தத்தினால் ரச்னாவை மறந்து இருக்கும் ஸ்ரேயான்ஷிற்கு அவ்வப்போது அவளின் நினைவு வர தான் செய்கிறது. ஆனாலும் அவள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் டாக்டர் அவளின் தோழி என்பதினாலும், ‘ஏதோ காரணத்திற்க்காக’ அவளின் மீது இருக்கும் கோபத்தினாலும் மருத்துவமனைக்கு சென்று மனைவியை சந்திப்பதை தவிர்க்கிறான்.
அவனின் நடவடிக்கையை தவறு என்று அவனின் தந்தை பூபாலன் கண்டிக்க, ரச்னா மீது தான் தவறு என்று மகனிற்கு ஆதரவு தருகிறாள் அம்மா ரேவதி.
இந்தியாவில் தன்னுடைய தோழியரிடம் வந்திருக்கும் மாற்றம் உரைக்க, கேரளா நோக்கி பஸ் பயணம் தொடங்குகிறாள் ரச்னா.
வழியில் அவள் சென்ற பஸ் ரிப்பேர் ஆகி விட, ஒரு கிராமத்தில் இறங்குகிறாள்.
அங்கே அவள் சந்திக்கும் விசாலினி காரணமே இல்லாமல் அவள் மீது எரிந்து விழுகிறாள்.
ஆனாலும் ரச்னாவிற்கு விசாலினியின் மீது தோன்றும் நட்பினாலும், அந்த ஊரின் எழிலாலும், விசாலினியின் இரண்டு குழந்தைகளாலும் கவரப் பட்டு அங்கேயே தங்க முடிவு செய்கிறாள்.
அவளுக்கு ஹரியின் பாட்டி துணையாக இருக்கிறாள்.
விசாலினிக்கு ஏன் என்றே புரியாமல் ரச்னாவை பார்க்கும் போது எரிந்து விழ தோன்றுகிறது...
ஒருவேளை சுதந்திரமாக சுற்றி திரியும் அவள் மீது தனக்கு பொறாமையா என்று யோசிக்கிறாள் அவள்.
ஆனால் அவள் எத்தனை எரிந்து விழுந்தாலும் ரச்னா அவளிடம் நேசக்கரத்தையே நீட்டுகிறாள். மெல்ல மெல்ல ரச்னாவின் அன்பு விசாலினி எனும் பாறையையும் கரைய செய்கிறது.
அமெரிக்காவில் ஷ்ரேயான்ஷின் ப்ராஜக்ட் வெற்றி பெற்றுவிட, அவன் அந்த சந்தோஷ செய்தியை மனைவியிடம் பகிர்ந்துக் கொள்ள அவளை செல்போனில் அழைக்கிறான்.
ஆனால் அவனின் அழைப்பு ஏற்கப் படாமல் போகவே அவனின் நண்பன் அபினவின் மனைவியும், ரச்னாவின் தோழியுமான டாகடர் தீபாவை சந்தித்து விபரம் கேட்கிறான்.
அபினவ் மீது ஏற்கனவே கோபத்தில் இருக்கும் தீபா, ஸ்ரேயான்ஷ் முன்பு ரச்னாவிடம் பேசிய விதத்தினால் அவனையும் வெறுக்கிறாள். எனவே அவனிடம் சரியான விபரம் எதுவும் சொல்லாமல் கோபமாக பேசுகிறாள்.
பதிலுக்கு அபினவ் கோபப்பட்டாலும் பொறுமை காக்கிறான் ஸ்ரேயான்ஷ்.
அவர்கள் இருவரும் சென்ற பின், ரச்னா இப்போது எங்கே சென்றிருப்பாள் என்று யோசிக்கும் தீபா, பல வருடங்களுக்கு பின் ரச்னாவை மீண்டும் சந்தித்ததை அசை போடுகிறாள் தீபா.
ஸ்ரேயான்ஷிற்கு ரச்னாவின் மீது என்ன கோபம்? ரச்னாவின் மனதை தான் புண் படுத்திவிட்டதை ஸ்ரேயான்ஷ் உணர்ந்துக் கொள்வானா? அவள் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பானா? பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்களா???
ஹரி – விசாலினி சண்டை என்னவாக போகிறது?
தெரிந்துக் கொள்ள கதையை தொடர்ந்து படியுங்கள் பிரென்ட்ஸ்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.