(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 22 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

Merry Christmas and a very happy and prosperous new year to you all... இங்க என் பசங்களுக்கு லீவ்.. so அவங்களோட டைம் பறக்குது.... கிடைச்சசந்து காப்ல அடிச்ச அப்டேட்... ஸ்பெல்செக் கூட பண்ணலை... so ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா sorry....

வாய்யா லோகேஷ்... அந்த ராணியைப்பத்தி விஷயத்தைக் கறக்க முடிஞ்சுதா...”

“இந்த லோகேஷ் களத்துல இறங்கி ஒரு விஷயம் நடக்காம இருந்து இருக்கா தல.... அதெல்லாம் பக்காவா கறந்துட்டேன்....”

“செம்ம ஆளுய்யா நீ.... என்னோட மேனேஜர் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் படு ஸ்ட்ரிக்ட்.... எந்த விஷயமும் வெளிய வராது... அப்படி இப்படின்னு சொன்னான்...”

“அது சரிதான் தல... நாலு நல்லவன் இருக்கற இடத்துல ஒரு கெட்டவன் கூடவா இருக்க மாட்டான்... அதுல ஒருத்தனை மடக்கி பிடிச்சு விஷயத்தை வாங்கினேன்... ஆனா அவங்கக்கிட்ட இருக்கற எவிடென்ஸ் மட்டும் கிடைக்கலை.... ஆனா அது ஒரு வீடியோ அப்படிங்கறது மட்டும் தெரிஞ்சு போச்சு.....”

“வீடியோவா.... என்ன மாதிரி வீடியோ.....”

“நீங்க அந்த ராணிக்கூட நெருக்கமா இருக்கா மாதிரி......”

“யோவ் என்னய்யா அநியாயம்... நான் அவளைப் பார்த்தே வருஷக்கணக்காகுது.... இதுல எப்படிய்யா வீடியோ எடுக்க முடியும்... இது எதுனாச்சும் மார்பிங்கா இருக்கப் போகுது.... எவனோ என் capacity தெரியாம விளையாடறான்... அவன் யாருன்னு மட்டும் தெரியட்டும்... மவனே வச்சு செய்யறேன்.....”, தரை லோக்கல் அளவிற்கு இருந்தது நரேஷின் பேச்சு.

“இல்லை தல.... அந்த போலீஸ் அதுல இருக்கறது நீங்கதான்னு உறுதியா சொன்னாரு... அதுவும் இல்லாம அந்த ராணிக்கூட வேற யாரும் வரலை போல இருக்குது.... ஒரு வக்கீல் பொம்பளை மட்டும்தான் கூட வந்திருக்கு”

“வக்கீலோட வந்தாளா.... யாருய்யா அது.....”

“உங்களுக்கு வக்கீல் சந்திரனைத் தெரியுமா....”

“நல்லாத் தெரியுமே.... நான் கூட ஒரு கேஸ் விஷயமா அந்தாளை போய் பார்த்திருக்கேன்.... சட்டம், நீதி, நேர்மைன்னு ஆயிரெத்தெட்டு நோனாவட்டை பேசுவான்....”

“அவருக்கிட்ட வேலை பார்க்கிறவங்கதான் கூட வந்ததா சொன்னாரு....”

“ஓ பேரு என்னய்யா சொன்னாரு.... அந்த வக்கீலை நம்ம பக்கம் இழுக்க முடியுமா பாரேன்....”

“ஏன் தல.... என்கிட்டே அந்த ராணியைப் பார்க்கலைன்னு பொய் சொல்லிட்டீங்களா... உணமையாவே அந்த வீடியோல இருக்கறது நீங்கதானா....”

“அட நீ வேற ஏன்யா.... நமக்கு இளசா கிடைக்கும்போது முத்தின சரக்கெல்லாம் எதுக்கு தேடப்போறோம்..... நான் அரசியலுக்கு வரலாம்ன்னு  இருக்கேன்யா... இந்த நேரத்துல அந்த வீடியோ பொய்யா இருந்தாலுமே வெளிய வர்றது அவ்ளோ நல்லது இல்லை...”

“அடப்பார்றா.... முப்பது வருஷமா வரேன், வரேன்னு சொல்ற சூப்பர் ஸ்டாரே இன்னும் வரலை.... நீங்க வரப்போறீங்களா....”

“அவரெல்லாம் வர்றதுக்குள்ள நான் ஒரு இடத்துல செட்டில் ஆகிடலாம்ன்னுதான்யா இப்போவே அதுக்குள்ளே நுழையறேன்....”

“தல... நம்மளை மறந்துறாத... ஒரு வட்ட செயலாளர் பதவியானும் நம்மளுக்குத் தந்துடு...”

“உனக்கு இல்லாததாய்யா.... வட்ட செயலாளர் என்ன... என்னோட கொள்கை பரப்பு செயலாளரே நீதான்.....”

“கொ.ப.செவா அப்படி என்ன தல உன்னோட கொள்கை.....”

“இதுவரைக்கும் இங்க இருக்கற கட்சில்லாம் என்ன கொள்கை வச்சிருக்காங்க.....”

“ஊரைக் கொள்ளை அடிக்கணும் அப்படிங்கற கொள்கை....”

“சூப்பர் அதேதான் நம்ம கொள்கையும்.... சரி நாம ட்ராக் மாறி போகறோம்... நீ அந்த வக்கீல் பொம்பளை யாருன்னு பார்த்து அதுக்கிட்ட பேசு... முடிஞ்சவரை சுமுகமா இந்த விஷயத்தை முடிச்சுடலாம்....”

“அது கொஞ்சம் கஷ்டம் தல... அந்த வக்கீல்கிட்ட இந்த மாதிரி போய் பேசாதீங்கன்னு அந்த போலீஸ் சொல்லியே அனுப்பினாரு..... அந்த சந்திரன் சார்கூட  வாயாலதான் பேசுவாராம், இதுக்கு பேசறதே கைதானாம்.... அதுங்கிட்ட உதை வாங்கினவங்க லிஸ்டை பார்த்தா என்கிட்டே அடி வாங்கினவங்களை விட ரெண்டு மடங்கா இருக்குது...”

“யோவ் நீ எவ்ளோ பெரிய ரௌடி... இப்படி ஒரு பொம்பளைக்கு பயப்படற.... உன்னை அந்த போலீஸ் தேவையில்லாம நல்லா பயப்படுத்தி வச்சிருக்கான்”

“தல உடனே தடாலடியா எந்த விஷயத்துலயும் இறங்கக்கூடாது.... அந்த ராணி நீங்க சொன்ன அந்த பழைய இடத்துல இல்லை... அவ இப்போ எங்க இருக்கா... அதே மாதிரி அவக்கூட யார் யார் இருக்காங்க எல்லாம் பார்த்திட்டு, அப்படியே அந்த வக்கீலை பிடிக்க முடியுதா பார்க்கிறேன்....”

“சரிய்யா நீ பாரு... இன்னும் ஒரு மாசத்துக்கு எனக்கு எந்த ஷூட்டிங்கும் இல்லை.... இங்கதான் இருப்பேன்... அதுக்குள்ள இந்த தொல்லை ஒழிஞ்சா சரி... அப்பறம் நீ எதுவா இருந்தாலும் எனக்கு போன்லயே சொல்லு... வீட்டுப்பக்கமெல்லாம் வந்துடாத... என் பொண்டாட்டிக்கு நான் பண்ற விஷயமெல்லாம் தெரிஞ்சது, என் கதி அதோ கதிதான்....”

“நீ சொல்லணுமா தல... அதெல்லாம் நான் வரவே மாட்டேன்... எதுனா அவசரம்னா உனக்கு போன் பண்றேன்... இல்லைன்னா எல்லா விஷயமும் தெரிஞ்சுட்டு உன்னை வந்து பார்க்கிறேன்..... இப்போ கிளம்பறேன்...”, நரேஷிடம் விடை பெற்று கிளம்பினான் லோகேஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.