(Reading time: 9 - 18 minutes)

ஹே பாரதி வந்து ரொம்ப நேரம் ஆச்சா... sorry கிளம்பும்போது கரெக்டா பிரின்சிபால் கூப்பிட்டு விட்டுட்டாரு.... அவருக்கிட்ட பேசிட்டு கிளம்ப கொஞ்சம் டைம் ஆகிடுச்சு.....’

“வந்து பத்து நிமிஷம் ஆகுது ராஜா.... ஆனாலும் நீங்க இத்தனை மோசமான லவ்வரா இருக்கக்கூடாது.... அவனவன் காதலி சாயங்காலம் ஆறு மணிக்கு வரேன்னு சொன்னா, காலைல ஆறு மணிக்கே வந்து வெயிட் பண்றாங்க..... ஆனா நீங்க இவ்ளோ லேட்டா வர்றீங்க..... very bad... very bad....”

“அது யாரு அது, சொன்ன பேச்சு கேக்காத லவ்வர்.... சாயங்காலம் வரசொன்னா காலைல வர்றது..... நான்லாம் நீ என்ன சொல்றயோ அதை அப்படியே கேட்டு நடப்பேன்....  சரி என்ன ஐஸ்கிரீம் சாப்பிடற....”

“ராஜா இன்னைலேருந்து உங்களுக்கு டெய்லி அசைன்மென்ட் நான் கொடுக்கப்போறேன்.... ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ரெண்டுலேர்ந்து மூணு காதல் படமானும் பாருங்க... கொஞ்சம் கூட காதலோட பேஸிக் ரூல்ஸ் தெரியவேயில்லை உங்களுக்கு....”

“பேஸிக் ரூல்ஸா... அது என்னதும்மா....”

“இப்படி வந்தவுடனே ஆர்டர் கொடுத்து அடுத்த அஞ்சு நிமிஷத்துல அது வந்து உடனே நாம சாப்பிடக்கூடாது.... வந்து ஒரு அரை மணிநேரம் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கணும்.... கண்ணோடு கண் நோக்கின் feel....”

“ஆத்தி அரைமணியா.... கண்ணுவலி வந்துடுமே....”

“ஷ்... பேசாம கேளுங்க.... அப்பறம் போனாப்போகுதேன்னு சர்வர் மேல பாவம் பார்த்து அங்க இருக்கற மெனுகார்டை மேல இருந்து கீழ வரை படிச்சுட்டு, அடுத்த ஒரு அரை மணிக்குப்பின்னாடி எல்லாருக்கும் தெரிஞ்ச காசாட்டாவோ இல்லை வெண்ணிலாவோ ஆர்டர் கொடுக்கணும்...”

“பாவம் அந்த சர்வர்.... அது வரை அவர் நம்மளை கண்ணோடு கண் நோக்குவாரா...”

“நக்கலு.... அப்பறம் ஆர்டர் பண்ணின ஐட்டம் வந்த பின்னாடி ஐஸ்கிரீம் திரும்ப மில்க் ஸ்டேட் வந்து அது அப்படியே திரிஞ்சு தயிராகறவரை அதை வச்சு சாப்பிடணும்...”

“அப்பறம் கடை முதலாளி வந்து டைம் ஆகிடுச்சுன்னு நம்மளை கழுத்தைப் பிடிச்சு தள்ளுவாரா....”

“ச்சே நான் எவ்ளோ feel பண்ணி சொல்றேன்... நீங்க இப்படி கவுன்ட்டர் கொடுக்கறீங்க.....”

“லவ் பண்றது ரொம்ப கஷ்டமான விஷயம் போல இருக்கே பாரதி... ஒரு ஐஸ்கிரீம்க்கே இந்த நிலைமைன்னா.... இன்னும் ஹோட்டல், ஷாப்பிங் இதையெல்லாம் நினைச்சா இப்போவே என் கண்ணு வேர்க்குது..... பேசாம நாம நேரடியா கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன...”

“ஹாங் அது எப்படி.... எனக்குன்னு மாட்டி இருக்கற ஒரே ஒரு அடிமை லவ்வர் நீங்கதான்....  உங்களுக்கு ஏகப்பட்ட செஷன் ட்ரைனிங் கொடுத்தாவது current trendக்கு கொண்டு வந்துடுவேன்...”

“ஆவ்வ் செல்லம் நாம இந்த ட்ரைனிங் அடுத்த சந்திப்புலேர்ந்து வச்சுக்கலாமா... உன்னை பார்க்க வர்ற அவசரத்துல coffee கூட குடிக்கலை... பயங்கரமா பசிக்குது....”

“சரி போனாப்போகுது இந்த ஒரு வாட்டி மன்னிச்சு விடறேன்... அடுத்த முறை கண்ணோடு கண் நோக்கியாலேர்ந்து ஆரம்பிக்கணும்...”, பாரதியும், ராஜாவும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு  கண் நோக்கி, வாய் உண்டு காதல் பாடத்தைப் படித்தனர்... இவர்களை இரு ஜோடிக் கண்கள் வேறு வேறு திசைகளில் இருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன....

ன்னய்யா நட்டு.. அந்த வக்கீல் பத்தி விசாரிக்க சொன்னேனே... ஏதானும் விஷயம் தேறிச்சா....”

“முழு விவரமும் கிடைச்சிடுச்சுய்யா.... அந்த சந்திரன் வீட்டுல அவரும், அவர் மனைவியும்தான்... அப்பறம் அவர்கீழ வேலை செய்யற ரெண்டு பேர் வேலை செய்யறாங்க.... இவங்க மூணு பேர் மேல கை வைக்கறதுமே நம்மளை நாமளே காமிச்சுக் கொடுக்கறா மாதிரி...”

“என்னய்யா இப்படி சொல்ற... அந்த வீட்டு சொந்தக்காரங்க ஏற்கனவே நம்ம மேல கேஸ் கொடுத்துட்டாங்க.. அப்படியே இன்னைக்கு அவங்களுக்கு போலீஸ பாதுகாப்பு வேனும்ன்னும் கேட்டிருக்காங்க.... அதனால அவங்களையும் ஒண்ணும் பண்ண முடியாது....”

“அந்த வக்கீல் கீழ வேலை செய்யறவங்க வீட்டுல இருக்கறவங்களை மிரட்டி இந்தக் கேஸ்ல இருந்து அவங்களை விலக வைக்க முடியாதா....”

“சார் அவங்க அப்படியெல்லாம் பயப்படற குடும்பமா தெரியலை... இதுவரைக்கும் அந்த சந்திரன் எடுத்த கேஸ் எல்லாமே கொஞ்சம் கஷ்டமான கேஸ்தான்... அதுவும் எதிர்பக்கம் எல்லாம் பெரியாளுங்க.... கண்டிப்பா ஏகப்பட்ட மிரட்டல் பார்த்திருப்பாங்க... எனக்கு கிடைச்ச தகவல்படி அந்த சந்திரனுக்கு அத்தனை விவரமும் வெளிலேர்ந்து திரட்டி தர்றது அவர்கிட்ட வேலை செய்யற ரெண்டு பேர்தானாம்.... மிரட்டலுக்கு பயப்படறவங்கன்னா இதெல்லாம் முடிஞ்சிருக்காதே...அதுவும் இல்லாம ரெண்டு பேருக்கும் கராத்தேலேர்ந்து எல்லா விதமான தற்காப்பு கலையும் தெரியுமாம்.... இந்த ஆளுங்களை வச்சு அடிச்சு மிரட்டறது எல்லாம் சரியா வராது....”

“என்னய்யா இப்படி சொல்ற.....’

“எனக்கு தெரிஞ்சு அவங்க அடுத்து என்ன செய்யறாங்கன்னு  பார்த்துட்டு நாம proceed பண்ணலாம்  சார்.... மொதல்ல நேத்து மாட்டின நம்ம ஆளுங்களை எப்படி வெளிய எடுக்கறதுன்னு பார்க்கலாம்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.