(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 08 - பிரதீபா சுந்தர்

Meela mudiyaamal unnul

Hello Chillzee friends..

Cheers to a new year and a fond farewell to the old. May you have a prosperous and healthy New Year! Have fun..!!

ஹே... வர வர நம்ப ஊர் பசங்களுக்கு கொழுப்பு ரொம்ப அதிகமா ஆய்டுச்சு தாரா... அன்னிக்கு என்னன்னா உன்கிட்ட சிக்னல்ல ஒருத்தன் லந்து பண்ணிட்டு போனான்... நீயும் என்னவோ அவன் உன்னை புகழ்ந்து பாராட்டி பாடின மாதிரி அவனையே இன்னும் நினைச்சிட்டு, இங்க பார்ப்போமா அங்க பார்ப்போமான்னு தேடிட்டு இருக்க... இன்னிக்கு என்கிட்டே ஒரு லூசு லொள்ளு பண்ணுது... உன்னை மாதிரியே நானும் அவன்கிட்ட கவுந்துடுவேனா...?!! நோ..............வே..!!!!”

காவ்யா அலறிய அலறலில் உதய் பதறிப்போக.. ககன் இந்த பேச்சு ‘அந்த முகமுடி அணிந்த சிக்னல் பெண்’ தொடர்புடையதாக இருக்குமோ என்று அவர்களின் உரையாடலை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.. அடுத்தவரின் பேச்சை இவ்வாறு ஒளிந்துநின்று செவிமடுப்பது தவறு என்று புரிந்தாலும், அந்த மதுரமான குரலுக்கு சொந்தமான பெண்ணை கண்டுபிடித்து அவளின் சுந்தர முகத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற அவனின் ஆசைக்கு இந்த செயல் உதவும் என்றால் அதை செய்ய வேண்டியது தானே...

இந்த பெண்களில் ஒருவர் அவளாக இருப்பதற்கு பாதிக்கு பாதி வாய்ப்பு தான் என்றாலும்.. ககனின் உள்ளுணர்வு அவனை இவ்வாறாக வழிநடத்தி சென்றது.! அதற்கு காரணம்... முதலில் அவர்கள் பேசும் தமிழ் மொழி... அடுத்து சிக்னல் பற்றிய அவளின் பேச்சு.! பல சமயங்களில் நமக்கு உதவும் உள்ளுணர்வின் கட்டளையை, நாகரீகம் பார்த்துக்கொண்டு மீற துளியும் விருப்பம் இல்லை ககனுக்கு.!

அவன் நிற்கும் இடம்... இப்பொழுது வந்த போன்காலின் படி அடுத்து செய்யவேண்டிய வேலைகள்... இவன் வரச்சொல்லி அழைத்த நண்பன் உதய்... அனைவரும்.. அனைத்தும் ககனின் மனதில் பின்னுக்கு தள்ளப்பட, அந்த முகம் அறியா பெண்ணின் மீது உள்ள உணர்வுகள் மட்டுமே முதன்மையாகப் பட்டது... அந்த உணர்வுக்கு பேர் சூட்டும் அளவுக்கு, அது இன்னும் தெளிவாக புரியாததால் அதையும் அறிந்து புரிந்துக்கொள்ளும் ஆர்வம்கூட காரணமாக இருக்கலாம்...!!

றுபடியும் காவ்யாவே பேச ஆரம்பித்தாள்..  

“அடியே... என் அக்காக்காரி... தாரா.. நான் பாட்டுக்கு இவ்வளோ பேசறேன், நீ எங்கயோ கனவுல மிதக்கற... மறுபடி அவன் தானா...?! அடேய்.. சிக்னல்காரா... என்னடா பண்ணி தொலைச்ச என் அக்காவ... வாயே மூடாம பேசுவா.. இப்போ வாயே திறக்காம இருக்கா...! எப்போ பார்த்தாலும் ஏதோ சிந்தனை..!! தாரா... இன்னிக்கு உனக்கு பிறந்தநாள் டீ... நாம இங்க என்ஜாய் பண்ண வந்து இருக்ககோம்... இப்படி டல்லா இருந்து என் மூடையும் டல் ஆக்காதே டீ... “ என்று பேசிக்கொண்டே போன காவ்யாவின் குரலில் உஷ்ணம் ஏறிக்கொண்டே போக... அதை தாரா உணர்ந்தாளோ இல்லையோ... காவ்யாவை அவளுக்கே தெரியாமல் சிறிது தூரத்திலே நின்று கவனித்துக் கொண்டிருந்த உதய்க்கு நன்றாக புரிந்தது. எந்நேரம் வேண்டுமானாலும் பலூன் வெடிக்கலாம் என்ற சூழ்நிலையில் அவளின் கண்ணில் பட்டு.. அவனே பலூனை வெடிக்க வைக்கும் ஊசியாக மாற விருப்பம் இல்லாமல்.. மெதுவாக சென்று ககன் அமர்ந்திருந்த சோபாவில் அமர்ந்தான், அவளின் பார்வையில்படாமல் சாமர்த்தியமாக. அதற்கு துணைபுரிந்த அங்கிருந்த அரைகுறை வெளிச்சத்திற்கு பல நன்றிகள் கூறியபடி...!

பாதி கவனம் காவ்யாவிற்கும் மீதி கவனம் ககனுக்கும் தந்தபடி அமர்ந்தவனுக்கு ககனின் அமைதியில் ஒன்றும் விளங்கவில்லை.. ‘எதற்கு வரசொன்னான்... இப்பொழுது ஏதோ தியானத்தில் இருப்பதுபோல் அமைதியாக இருக்கிறானே’ என்றெல்லாம் தோன்றினாலும், அவனின் முக்கியத்துவம் காவ்யாவிற்கே சென்றதால் ககனை இப்போதைக்கு டீலில் விட்டுவிட்டான்.       

ங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது... உதய் கவனித்தது காவ்யாவையும் அவள் பேச்சில் இருந்த ஸ்வரங்களையும் ராகங்களையும்   மட்டுமே... அந்த பேச்சின் விஷயத்தையும் அர்த்தத்தையும் அல்ல.. அப்படி கவனித்திருந்தால் கண்டிப்பாக ககனுக்கு சாதகமாக ஏதாவது கூறியிருப்பான்... ககன் அவனின் மனதைப் பற்றி முழுமையாக உதய்யிடம் பகிரவில்லை என்றாலும் அவனிடம் இருக்கும் சின்ன சின்ன மாற்றங்களும் உதய்யின் நட்பு பார்வைக்கு தப்பவில்லை.. இன்று மாலை நடந்த அந்த சின்ன ‘முறை’க்கும் படலமே சான்று அல்லவா..!!?? 

ஆனால் இப்போதைக்கு உதய்யின் கவனத்தில் முழுதாக நிறைந்திருப்பது காவ்யா மட்டுமே.. அவனுக்கு உள்ள உணர்வுகளை அலசி ஆராய்ந்து அதற்கு பேர் சூட்டு விழா நடத்தி, தன்னை தானே குழப்பிக்கொள்ள தோன்றவில்லை... இப்பொழுது தோன்றும் ஒரே விஷயம் ‘காவ்யா’... அவளின் நடவடிக்கைகள்... அவளின் பேச்சு.. அவளின் தமிழில் அடிக்கும் தெலுங்கு வாடை.. இவை அனைத்தும் உதய்க்கு மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.. அதனால் ரசிக்கிறான்.! அவளுடன் வம்பு வளர்க்க வேண்டும் போல் உள்ளது.. அதனால் அவளை சீண்டுகிறான்..!!  அவ்வளவே... காவ்யா கூறியபடி... இல்லை.. இல்லை.. அலறியபடி ‘நானும் அவன்கிட்ட கவுந்துடுவேனா...?!!’ என்பதை பற்றியெல்லாம் நினைக்கவில்லை. அது அவனின் இயல்பும் இல்லை... இது சிறு குழந்தையுடன் சீண்டி விளையாடும் உணர்வோ..! சூறாவளி சுழல் போன்ற, கன்னியின் காதலில் விழவைக்கும் உணர்வோ..!! எந்த உணர்வாக இருந்தாலும் காலப்போக்கில் அதுவே விளங்கிவிடும் என்பது அவனின் திண்ணமான எண்ணம். அதுதான் அவனின் வழக்கமும் கூட.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.