(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 07 - தேவிஸ்ரீ

En nilavu devathai

மிர்தா தன் அறையில் நுழைந்தாள்.. அவளது போனுக்கு கால் வரவும் யாரென பார்த்தவள்,

“சொல்லு ஆனந்தி! என்ன பண்ற.. ஏன் என் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ற”

“பொய் சொல்லாத.. உன் குரலிலே தெரியுது நீ தூங்கலனு.. சரி அதை விடு.. குட் நியூஸ் சொல்லட்டா..”

“குட் நியூஸா.. என்ன?”

 “அன்புவை குணப்படுத்திடலாம்னு சொல்றாங்கமா..”

“நிஜமாவா.. என கத்தினாள்..

“எதுக்கு இப்போ கத்துற..”

“நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.. சந்தோசத்துல தலைகால் புரியல.. சரி, யமுனாவுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே.. நான் உன்னை,அப்பாவை,அன்பு,யம்முவை ரொம்ப மிஸ் பண்றேன் மா..”

“எங்களுக்கும் தான்.. நீயும் இங்கே இருந்திருக்கலாம்..”

“என்ன செய்யறது.. எனக்கும் அன்புவையும் யம்முவையும் பார்க்கனும்னு தான் ஆசை.. ஆனா எனக்கு செமஸ்டர் எக்ஸாம் இன்னும் ஒன்னு இருக்கே.. செமஸ்டர் லீவ் முழுக்க உங்க கூடதான்.. இன்னும் 4 நாளில் அங்க இருப்பேன் ஓகேவா..”

“சரிடா.. டேக்கேர்.. குட்நைட்..”

குட்நைட்மா.. என்றவள் தாயம்மாவிடம் விசயத்தை கூறியவள் தன் அக்காவை நினைத்து பார்த்தாள்..

நெருங்கிய தோழிகளாக இருவரும் திகழ்ந்தனர்... இருவரும் ஒன்று சேர்ந்து செய்யும் சேட்டைகள் அதிகம்.. தமைக்கைக்கு காதல் உதவி செய்வதும் அமிர்தா தான்..

அன்புதரங்கிணி தன் உடன் படிக்கும் சூர்யாவை விரும்பி வந்தாள்.., அவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்ப இருவருக்கும் துணையாக அமிர்தா நின்றாள்.. அதை நினைத்து இப்போது வருத்தமும் படுகிறாள்..

அன்புவும் சூர்யாவும் திருமணம் செய்துகொண்ட இருமாதத்தில் சூர்யா விபத்தில் இறந்துவிட,  அனைவரும்  உடைந்துவிட்டனர்.. அதிகமாக வருத்தப்பட்டது அமிர்தா தான்.. பெற்றவர்கள் பேச்சை கேட்டிருந்தால் இந்நிலமை வந்திருக்காதோ என கவலைப்பட்டாள்.. ஆனால் சூர்யாவின் வாரிசு அன்பு வயிற்றில் வளர, அன்புவுக்கு தான் வாழ்வதற்கு ஒரு நம்பிக்கை உதித்தது.. யமுனா பிறந்தாள்.. ஆனால் அதற்கும் ஒரு துன்பம் வந்தது கேன்சர் வடிவில்..

அன்புவுக்கு இதயபுற்றுநோய் இருப்பது தெரியவந்தது.. இதைப்பற்றி மருத்துவரிடம் விசாரித்ததில், வெகு அரிதாக தோன்றும் புற்றுநோய், இந்நிலையில் நலம்பெறுவது கடினம். கார்சினாய்ட் (carcinoid) மிகவும் மெதுவாக வளரும் கட்டிகளாகும். இதன் காரணமாக வால்வு பழுதடையும் வாய்ப்பு அதிகம். மருத்துவமே இதயத்தினைப் பாதிக்கக் கூடும் என தெரியவந்தது.. மருத்துவர் பஞ்சாபில் உள்ள மேவோ மருத்துவமையத்தை பரிந்துரைத்தார்.. அங்கு சில காலம் அன்புக்கு ட்ரீட்மெண்ட் தரப்பட்டது.. பின்பு இப்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற அனைவரும் அன்புவுடன் சென்றிருக்கின்றனர்.. இப்போது சில சிகிச்சையின் மூலம் குணப்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறியதால் அமிர்தா மிகவும் மகிழ்ச்சியுடன் மித்ரா அறைக்குள் சென்றவள் யாரென கவனிக்காமல்.. எதிரில் இருந்த விக்ரமை இறுக்கமாக அணைத்து,

“மித்ரா.. நான் இப்போது ரொம்ப ஹாப்பியா இருக்கிறேன், அக்காவை குணப்படுத்த முடியும்னு சொல்றாங்க” என்றவள் அப்படியே இருக்க, அதை கவனித்த மித்ரா குறுஞ்சிரிப்புடன் தொண்டையை கனைத்தாள்.. அப்போதுதான் அம்மு விக்ரமை அணைத்திருப்பது புரிந்து விலகியவள், பேசமுடியாமல் அவ்வறையை விட்டு ஓட, விக்ரமின் நிலைதான் பரிதாபமானது..

தன்மீது மோதிய நிலவைக்கண்டு ஒரு நிமிடம் திகைத்ததென்னவோ உண்மைதான்.. இது அப்படியே நீடிக்கவேண்டுமென ஆசைப்பட்டான்.. பிறகு அந்நிலவு விலகிஓட, அதை தன்னருகே நிறுத்திக்கொள்ள விருப்பம் தான்.. ஆனால் அதற்குள் மித்ராவின் குரல் கேட்டது..

“என்ன அண்ணா... ஷாக் அடிச்சிடுச்சா” என கிண்டல் செய்ய..

“ஏய் வாலு.. நீ தூங்கு போ..”

“அண்ணா.. நீ என்கிட்ட உண்மையை மறைக்காத.. எனக்கு தெரியும்.. நான் என்றைக்கு அமிர்தாவை பார்த்து அதிர்ந்து உன்கிட்ட அவள் அத்தைமாதிரி இருக்கானு சொன்னேனோ, அன்னைக்கே உனக்கு அவளை பிடிச்சிடுச்சி.. அப்புறம் ஏன்ணா என்கிட்ட மறைக்கிற..”

“அவ அத்தைமாதிரி இருக்கிறதுனால எனக்கு பார்க்கனும்னு தோன்றியது என்னவோ உண்மைதான்.. ஆனா அதனால மட்டும் அவளை நான் விரும்பல.. அவ கேரக்டர் பிடிச்சுதான் அவள நான் விரும்புறேன்.. உனக்கு தெரியுமா!.. நான் அவளை இந்த ஆறுமாசமா அவளுக்கே தெரியாம அவளை பார்த்துட்டு இருக்கேன்.. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்டா.. அவ ஒரு குழந்தைமாதிரி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.