(Reading time: 6 - 12 minutes)

“அப்புறம் ஏன் நீங்க உங்க காதலை அவகிட்ட சொல்லலை.. அவளை எப்பவும் திட்டிட்டே இருக்கிங்க..”

“நான் அவகிட்ட இப்போ சொல்லாததுக்கு காரணம் அவ டீன் ஏஜ் என்பதால்தான்.. அதுமட்டுமில்ல, படிக்கிற பொண்ணை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுனுதான், அதுவும் அவ மெச்சூர் இல்லாம விளையாட்டுதனமா இருக்கா.. அவ எதப்பத்தியும் கவலைபடறதில்லை.. அவளுக்கு காதல்பத்தி இந்த ஸ்டேஸில புரியாது.. சில சமயம் ஏதாவது செஞ்சு பிரச்சினையில மாட்டிக்கிறா.. அதை பார்க்கும்போது கோபம் வந்து திட்டிடுறேன்.. எனக்கு இன்னோரு பயமும் இருக்கு, எங்க என் கோபமே எங்களை பிரிச்சிடுமோனு பயம்.. என் கோபம் அவளுக்கு நல்லதுஇல்லை.. அதனாலயே அவமேல அன்பை வளர்த்தாம வெறுப்பை வளர்க்கனும்னு நான் நினைத்தாலும் என்னால் முடியவில்லை”

“அண்ணா.. நீங்க தைரியமா லவ்வை சொல்லுங்க.. உங்க காதல் உங்களை பிரிக்காது.. நீங்க எங்கிருந்தாலும் உங்களை அது சேர்த்துவைக்கும்”

“பார்க்கலாம்டா.. நீ தூங்கு..” என்றவன் அவளறையை விட்டு வெளியே வர, அருகிலுள்ள  அமிர்தாவின் அறையில் நுழைந்தான்.. அங்கு அமிர்தா தூங்கிக்கொண்டிருக்க சத்தம் இல்லாமல் அருகில் சென்று அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன் ஐ லவ் யூ நிலா.. என்று சொல்லிவிட்டு அவனறைக்கு திரும்பினான்..

ந்தபக்கம் மித்ரா  கடந்தகாலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், அந்தபக்கம் விக்ரமின் அறையினுள் நந்தினி வந்தார்.. விக்ரம் யோசனையுடன் முதுகு காட்டி நின்றுகொண்டு இருந்தான்..

“விக்ரம்”

“அத்தை நீங்களா.. சொல்லிருந்தா நானே வந்திருப்பேனே”

“என்கிட்ட இருந்து ஏன் மறைச்ச விக்ரம்”

“நீங்க என்ன சொல்றீங்க..”

“அமிர்தாவை நீ விரும்பிய விசயத்தை என்கிட்ட ஏன் சொல்லலை.. நீ எப்பவும் என்கிட்ட எதும் மறைச்சதில்லை.. இதை மட்டும் மறைச்சிட்டயே.. ஏன்!..”

“அப்படி மறைக்கனும்னு நான் நினைக்கலை அத்தை.. அதை சொல்லிருந்தா நீங்க அவளை பார்க்கனும்னு சொல்லுவிங்க, அவ உங்களைமாதிரியே இருக்கா.. அதனால உங்க குழந்தை ஞாபகம் உங்களுக்கு வரும்.. உங்களுக்கு கவலையா இருக்கும் என நினைத்தேன், ஆனா அவ உங்க பொண்ணுனு எனக்கு சத்தியமா தெரியாது.. தெரிந்துருந்தா நாம எப்பவோ ஒன்றாகிருப்போம்.. இந்த தாயம்மா தான் குழப்பிட்டாங்க, அவங்க அமிர்தா பிறக்கும் போது கூடவே இருந்ததாக சொல்லி அமிர்தா மனோகர் ஆனந்தி பொண்ணுதான்னு சொன்னாங்க..”

“என்ன பேர் சொன்ன?...” என அதிர்ச்சியாக நந்தினி கேட்க..

“தாயம்மா” என விக்ரம் கூறியதும் சிலையாய் நின்றார் நந்தினி..

ஹாய் ப்ரண்ட்ஸ்.. இந்த சிறிய எபிசோடுக்கு மன்னிச்சிடுங்க.. நெக்ஸ்ட் எபிசோடில் மோர் பேஜ் வரமாதிரி பார்த்துகிறேன்.. என் தொடர்கதை உங்க எல்லோருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்..

அனைவருக்கும் இனிய  ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. பிறக்கபோகும் வருடம் 2018 முழுவதும் அனைவருக்கும்    மகிழ்ச்சியாக அமையட்டும்.. நன்றி.. வணக்கம்..  

                  அன்புடன்     உங்கள் தோழி தேவிஸ்ரீ...

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.