(Reading time: 21 - 42 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 06 - தேவிஸ்ரீ

En nilavu devathai

மிர்தா கண்களை துடைத்துக் கொண்டாள்.. விக்ரம் பாடிய பாடலை கேட்டு அனைவரும் அமைதி காத்தனர்.. ஆனால் விக்ரமுக்கும் அமிர்தாவுக்கும் ஏதோ பெரிய பிரச்சினை இருக்கிறது என வீட்டு பெரியவர்களுக்கு தோன்றியது.. இதைப்பற்றி யாரிடம் கேட்பது என தெரியாமல் தவித்தனர்.. அதன்பின் அனைவரும் அமைதியாக பயணித்தனர்..

வாசுதேவனோ சங்கர ஐயா தன்னிடம் தனியாக கூறியதை நினைத்து பார்த்தார்..

என்ன வாசுதேவன்.. என்ன குழப்பம் உங்க மனசுல?..”

அமிர்தா-விக்ரம் பற்றிதான் ஐயா..”

அவர்களை பற்றி நீ கவலைப்பட அவசியம் இல்லை.. அவர்கள் காதல் அவர்களை ஒன்று சேர்க்கும்.. உங்களுக்கு அவர்களை பற்றி வேறு எதாவது தெரியவேண்டுமெனில் உன் மகளிடம் கேள்..”

என் மகளிடமா?..”

ஆமாம்.. அப்புறம் இன்று பூஜை நல்லபடியாக முடிந்தது.. என் மனதில் இப்போது அடிக்கடி தோன்றும் விசயம் என்ன தெரியுமா? உங்கள் குடும்பம் மிகப்பெரிய நன்மையை பெறப்போகிறது.. பிரிந்த ஒன்று சேரும் நாள் வந்துவிட்டது..”

ஆமாம் ஐயா அமிர்தா வந்ததே எங்களுக்கு பெரிய நிம்மதிஎன வாசுதேவன் சொல்வதைக்கேட்டு மர்மமாய் புன்னகைத்த சங்கரஐயா,

அமிர்தாவுக்கு ஆபத்து இருப்பது உனக்கு தெரியும்.. உன் மகன் அவளை நல்லாவே பார்த்துப்பான்.. ஆனாலும் அவளை பத்திரமா பார்த்துக்கோ..”

சரிங்க ஐயா..”

சரி வாசுதேவன்.. வணக்கம்..”

வணக்கம்..”

நடந்ததை நினைத்து பார்த்த வாசுதேவன் வீட்டிற்கு சென்றதும் தன் மகளிடம் பேசவேண்டுமென நினைத்து கொண்டார்..

விக்ரம் அமைதியாக தன் இருக்கையில் அமர்ந்து தன் கடந்த காலத்தை நினைத்து பார்த்துக்கொண்டு இருந்தான்..

அனைவரும் நந்தவனத்திற்கு வந்து சேரும் போது மதியம் 3.00, அனைவரும் வழியிலே சாப்பிட்டு விட்டதால் அவரவர் அறைக்கு சென்று ஓய்வெடுக்க, புகழ் தன் மித்துவை தேடி அவள் அறைக்கு சென்றான்..

அப்போது வாசுதேவனும் அவள் அறைக்கு வர, மித்ரா இருவரையும் பார்த்து,

என்னாச்சு?..

மித்ரா நீதான் சொல்லனும்.. விக்ரம நான் அப்படி பார்த்ததே இல்லை.. அவன் ரொம்ப வருத்தப்படுறான்.. என்ன நடந்தது.. உன் க்ளோஸ் ப்ரண்ட் அம்மு-னு தெரியும்.. ஆனா அது அமிர்தா-தான்னு கோவில்ல தான் எனக்கு தெரிந்தது.. உன் அண்ணனும் அம்முவும் லவ் பண்றதா சொன்ன.. இப்போ என்னாச்சு?..” என படப்படவென கேள்விகளை கேட்டான் புகழ்.. மித்ரா கதவை சாத்திவிட்டு இருவரையும் அமர வைத்தவள் தண்ணீரை பருக செய்தாள்..

அண்ணன் செய்த வேலைக்கு இந்த தண்டனை தேவைதான்.. அவரால தான் இன்னிக்கு என் பழைய அம்முவ இழந்துட்டேன்.. அவ எப்படி கலகலப்பான பொண்ணு தெரியுமா.. அவர் செய்த வேலையால அவ பேமலிய இழந்தபோது அவளுக்கு துணையா கூட என்னால  இருக்கமுடியல..”  

முதலில் எனக்கு ஆக்சிடெண்ட் நடந்தபோதே அவ துடிச்சிட்டா, பத்தாததுக்கு அண்ணன் வேற அவகிட்ட சண்டை போட்டுட்டு இனிமே இங்க வராதனு சொல்லிட்டாரு.. அதுமட்டுமா.. அவ அக்கா கேன்சரால இறந்தது.. பேமலியோடு வெளியபோன போது ஆக்சிடெண்ட்ல அவள வளர்ந்தவங்களையும் இழந்துட்டா..அப்புறம் நீங்க திடீரென்று வந்து நாங்கதான் உன் பேமலினு இங்க கூட்டிக்கிட்டு வந்தது, தனி ஆளா இத்தனையும் இழந்து இங்க வந்து இருக்கறா.. அவ ரொம்ப பாவம்பா..” என அழ ஆரம்பித்தாள் மித்ரா..

அவளை நான் முதன்முதலில் காலேஜ் பர்ஸ்ட் டே அன்னிக்கு பார்த்தேன்என மித்ரா தன் கடந்தகால நினைவுகளை கூற ஆரம்பித்தாள்..

3 வருடங்களுக்கு முன்..

முதலில் சென்னை காலேஜில் ஆஸ்டலில் தனியாக தங்கி படிக்க மித்ராவுக்கு வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை.. ஆனால் விக்ரம்தான் அனைவரையும் சமாதான படுத்தி 6 மாதத்திற்கு பின் தானும் சென்னை branchயை கவனிக்க போகவேண்டி இருப்பதால், அப்போது தன்னுடன் அவளை தங்க வைத்துக்கொள்வதாக வாக்களித்தப்பின்தான் அனைவரும் அரைமனதாக ஒப்புக் கொண்டனர்.. மித்ராவை பொறுத்தவரை அவளுக்கு அண்ணன் என்றாள் உயிர்.. அதேபோல் விக்ரமுக்கும் தன் அம்மா, நந்தினி அத்தையின் பாசத்திற்கு நிகராக மித்ராவின் மீது உயிரையே வைத்திருந்தான்.. மித்ரா அவனை விட 6 வயது சிறியவள் என்பதால் அவளை கண்ணும் கருத்துமாக கவனத்துடன் பார்த்துக் கொண்டான்.. மித்ராவும் தன் அம்மாவிடம் இருந்ததை விட விக்ரமிடம்தான் ஒட்டுதலாக இருந்தாள்.. அப்படிப்பட்டவன் அவளுக்காக அவள் விரும்பிய கல்லூரியில் சேர்க்க இதைகூட செய்யமாட்டானா என்ன?..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.