(Reading time: 21 - 42 minutes)

மித்ராவும் தனக்கு பிடித்த கல்லூரியில் சேர்ந்தாள்.. கல்லூரியின் முதல்நாள்.. ராகிங் என்ற சொல்லை கேட்டாளே ஜூனியர்ஸ் அலறுவார்கள்.. மித்ராவும் அதை நினைத்து கொண்டே வந்தாள்.. ஆனாலும் சீனீயர்களிடம் மாட்டிக்கொண்டாள்.. அப்போது அங்கிருந்த குரூப்பில் உள்ள ஒருவன் மித்ராவை டான்ஸ் ஆட சொல்ல அப்போது அங்கு அமிர்ததரங்கிணி வந்தாள்.. வந்தவள் திமிராக,

யார் நீங்க.. என்ன பண்றீங்க.. ராகிங்ஆ.. அதுவும் என் கசின் கிட்ட என மிடுக்காக அவள் கூற..”

ஏய்.. நீ யாரு.. எவ்வளவு திமிரா பேசுற.. சீனியர் நாங்க அப்படிதான் ராகிங் பண்ணுவோம்.. நீ ஜூனியர் எங்கள எதிர்த்து பேசறயா..”

நான் யாருனு தெரியுமா?..”

யாரு.. எம்எல்ஏ பொண்ணா?..”

நான் ஐபிஎஸ் சத்யாவோட பொண்ணு.. இது மட்டும் என் அப்பாவுக்கு தெரிந்தது.. நீங்க எல்லாம் கம்பிதான் எண்ணனும்..”

பொய் பேசறதுக்கும் ஒரு அளவு வேணும் கண்ணு.. என்ன சொன்ன.. என்ன சொன்ன.. நீ ஐபிஎஸ் பொண்ணு, இந்த பொண்ணு உன் கசினா? அப்புறம் ஏன் இவ நாங்க ராகிங் பண்ணபோது பயந்தா..”

ஆதாரத்துக்குதான்..”

என்ன?..

பின்னே.. ஆதாரம் இல்லாம உங்களை எப்படி அரஸ்ட் பண்றது.. என் கசினை நீங்க ராக் பண்ணத என் மொபைல வீடியோ எடுத்துட்டேன் பார்க்கறீங்களா..” என கெத்தாக அமிர்தா வினவ..

அங்கிருந்த இன்னோருவன் தன் நண்பனிடம் மச்சி பொண்ணு பயமே இல்லாம திமிரா பேசுது.. அது சொல்றது உண்மையா கூட இருக்கலாம்.. நான் கூட கேள்விப்பட்டுருக்கேன், அந்த சத்யாக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு.. அந்த ஆளு செம ஸ்ரிக்ட், எதுக்கு வம்பு.. வா போயிடலாம்என கூறியவன் அங்கிருந்து அனைவரையும் கூட்டிச்சென்றான்..

பிறது மித்ரா அமிர்தாவிடம்..

தேங்க்ஸ் பா.. நான் சங்கமித்ரா பிஎஸ்ஸி கம்பியூட்டர்சயின்ஸ்..”

ஹே.. நானும் அதே கிளாஸ்தான்தான்.. என் பெயர் அமிர்ததரங்கிணி..”

.. ஸ்வீட் நேம், நீங்க சொன்ன பொய்யினால நான் தப்பிச்சிட்டேன்.. ஒன்ஸ்அகைன் தேங்க்ஸ்..”

.. இந்த தேங்க்ஸ் சொல்லும் படலத்தை முற்றுபெற வைத்துடலாம்னு நினைக்கிறேன் நீ என்ன சொல்றஎன அமிர்தா ஒருமைக்கு தாவ..

எப்படி?..”

நாம ப்ரண்ஸ் ஆகிட்டா நோ சாரி,நோ தேங்க்ஸ்.. அப்படி..”

நிச்சயமாக நாம ப்ரண்ஸ் தான் ஓகே வா..”

டபுள் ஓகே.. பை த வே.. நான் முழு பொய் சொல்லல பா.. சத்யா அங்கிள் என் அப்பாவோட ப்ரண்ட்.. ஒரு நாளைக்கு இங்க அவங்கள கூட்டிட்டு வந்து சீனியர்அ கதிகலங்க வைக்கிறேன் பார்.. என்றவள்.. நீ எந்த ஊர்?..” என கேட்டாள்..

நான் ஏற்காடு.. இப்போ காலேஜ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன்..”

..வாவ்.. நானும் இன்னிக்கு ஹாஸ்டல்ல சேரப்போறேன்.. நான் இதே ஊர் தான்.. ஆனா 9த் ல இருந்தே என்ன ஹாஸ்டல் சேர்க்க ஆரம்பிச்சிடாங்க.. ஏன்னு கேட்டா சொல்லவேமாட்டாங்க.. ஆனா, நீ காலேஜ் படிக்கும்போது நிச்சயமா ஹாஸ்டல் அனுப்பமாட்டேனு சொன்னவங்க இப்போ என்னையும் 6 மாசம் மட்டும் ஹாஸ்டலில் இருக்க சொல்லிட்டாங்க...” என அவள்பாட்டுக்கு வளவளவென பேசிக்கொண்டே போக.. அதைக்கேட்ட மித்ராவோ புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டே வந்தாள்..

இருவரும் தன் வகுப்பறையை கண்டுபிடித்து அமர்ந்தனர்.. பின் அமிர்தா அனைவரிடமும் லொடலொடவென பேசிக்கொண்டே இருக்க.. ஒருக்கட்டத்தில் அமைதியிழந்த மித்ரா.. இப்போ எதாவது பேசன..வாயில் பிளாஸ்திரி ஒட்டிடுவேன்.. என்றதும் தான் அமைதியானாள்.. பின் முதல்நாள் வகுப்பு ஆரம்பித்தது.. பெரும்பாலும் இன்ட்ரோ தான் நடந்தது..  மணி 12.00 இருக்கும்..

சங்கு..”

ஏய் மித்ரானு கூப்பிடுடி.. சங்குனா நல்லாவே இல்லை.. நான் இதுவரை யாரையும் அப்படி கூப்பிட விடமாட்டேன்..”

அப்படினா இனி நான் உன்னை இனி செல்லமா சங்குனுதான் கூப்பிடுவேன்.. ஏன்ன நான் உன் பெஸ்ட் ப்ரண்ட்.. நான் கூப்பிடறமாதிரி வேற யாரும் உன்னை கூப்பிட கூடாது..எப்புடி..”

ஆமான்டி.. நீ என் ரகசிய காதலன்.. செல்லபெயர் வைச்சு கூப்பிடறதுக்கு.. மானத்த வாங்காதடி..”

முடியாது நீ என் சங்கு தான்..”

கூப்பிட்டு தொலை..”

ஹி..ஹி..ஹி சங்கு..”

மறுபடியும் என்னடி..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.