(Reading time: 21 - 42 minutes)

ஆமா.. நான் க்ளோஸ்... தான்..”

சரி.. வா க்ளாஸ்கு போலாம்..”

ஏன்டீ, நீ சாப்பிட்ட, சரி... நான் சாப்பிட்டனானு கவனிச்சயா..”

.. இரு. என்றவள், அவளுக்கு சாப்பிட வாங்கி வந்து சாப்பிட வைத்தாள்.. பின் இருவரும் க்ளாஸூக்கு சென்றனர்..

மாலை 4.00 மணி,

அமிர்தாவின் அப்பா மானோகர் வந்திருந்தார்.. அம்முவுக்கு ஹாஸ்டலுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வந்திருந்தார்.. அமிர்தா மித்ராவை அறிமுகப்படுத்தியவள்.. பிறகு அக்காவை நலம் விசாரித்தாள்.. அம்முவின் அக்கா ட்ரீட்மெண்டிற்காக யுஎஸ் செல்வதால் அம்முவை ஹாஸ்டல் சேர்த்துவிட்டு மனோகர் விடைபெற்றார்..

அக்காவுக்கு என்ன அம்மு?..”

அன்புதரங்கிணி என் அக்கா பெயர்.. அவங்களுக்கு கேன்சர் சங்குஎனும்போதே அம்முவின் குரல் உடைந்தது.. பின் தன்னை சமாதான படுத்தியவள் முதல் ஸ்டேஜீல் தான் இருக்கு அதனால் குணப்படுத்திடலாம்னு சொல்லிருக்காங்க.. அப்பாவின் ப்ரண்ட்தான் பெட்டர் ட்ரீட்மென்ட்காக யுஎஸ்கு போக சொல்ல, அப்பாவும் குடும்பத்தோடு போகிறார்.. நான் இங்கே படிக்கிறேனு சொன்னதால சரினு சொல்லிட்டாங்க.. தாயம்மா 6மாசத்துல இங்க வந்துடுவாங்க.. அப்புறம் எனக்கு துணையா இருப்பாங்க..”

யாரு தாயம்மா..”

அவங்க எனக்கு இன்னோரு அம்மா மாதிரி.. சின்ன வயசுல இருந்து என்கூட இருக்காங்க.. ஐ லவ் ஹியர்..”

ம்ம்.. சரி வா.. உன் திங்க்ஸ்அ அடுக்கலாம்.. எப்படியோ அந்த வார்டன்கிட்ட பேசி என் ரூம்கு வந்துட்ட..”

அதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும் சங்கு..”

போடி அரட்டை.. உன் ட்ரஸ் எல்லாம் இங்க வை..”

சரி என்றவள் இருவரும் எல்லா பொருட்களையும் ஒழுங்கு படுத்தினர்.. பின் தத்தம் குடும்பத்தினருடன் மொபைலில் பேச ஆரம்பித்தனர்..

ஹலோ.. ஆனந்தி.. என்ன செய்யற..”

ஏய் வாலு.. ஹாஸ்டலுக்கு போனியா? வசதியா இருக்கா? மதியம் என்ன சாப்பிட்ட..? காலேஜ் எப்படி இருக்கு..? இப்ப என்ன பண்ணிட்டு இருக்க..? பாவம் அந்த காலேஜூம் ஹாஸ்டலும் என்ன பாடுபடபோகுதோ..”

ஐயோ அம்மா.. நீ தான் உண்மையாலும் வாயாடி.. இப்படி ஓராயிரம் கேள்வி கேட்டா நான் எதுக்கு பதில் சொல்றது?...”

உன்னை எல்லாம் அடிச்சு வளர்த்திருக்கனும்.. உன் வாய் கொஞ்ச நேரம் சும்மா இருக்கா? ஒன்னு ஏதாவது சாப்பிட்டுட்டே இருக்கறது, இல்லைனா தொணதொணனு பேசிட்டே இருக்கறது..”

அதைவிடும்மா.. அன்பு எப்படி இருக்கா?..”

அவ இப்போது பரவாயில்லை.. டுடே நைட் பிளைட்ல கிளம்புறோம்.. நீ பத்திரமா இருந்துக்கடா.. உடம்ப பாத்துக்கோ.. எங்கேயும் வெளியே தனியா போகாதே.. டெய்லி கால் பண்றேன், ஐ வில் மிஸ் யூ டா குட்டி..” என ஆனந்தி வருத்தத்துடன் கூற

மீ டூ அம்மா.. யூ டோன்ட் வொர்ரி.. ஐ வில் டேக் கேர்.. அக்காவ பத்திரமா பார்த்துக்கோ மா..” என்றவள் மித்ராவை பற்றி கூறி தான் நன்றாக இருப்பதாகவும், தான் தனியாக சமாளித்து கொள்வதாகவும் வாக்களித்தவள் போனை வைத்து திரும்ப, அங்கு மித்ரா போனில் யாரிடமோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தாள்..

அவள் பக்கத்தில் மெதுவாக சென்றவள் அவளின் காதிற்கு அருகே நின்று ஒட்டுக்கேட்க.. அதை கவனித்த மித்ரா அவசரமாக போனை கட் செய்தவள் அவளைப்பார்த்து முறைக்க..

வாட்.. ப்ரண்ட்சிப்-குள்ள எதையும் மறைக்க கூடாது என்பதுதான் முதல் விதியே.. நீ சொல்லாததால் நானே தெரிந்துக்கலாம் என்று நினைத்தேன்.. சரி யாரு அந்த ரோமியோ..”

யாரு..

நடிக்காதிங்க மேடம்.. “என் செல்ல மித்துனு உருகுன ஆசாமி யாரு?”

நான் உன்கிட்ட சொல்றதா இல்லை.. போடி..”

நீ சொல்லலைனாலும் எனக்கு தெரியும் சங்கு.. அது உன் பாய்பிரண்ட்.. ஆம் ஐ ரைட்..”

சரியான பாம்பு காது..”

தேங்க்யூ.. தேங்க்யூ.. பார் யுவர் கைண்ட் இன்பர்மேசன், பாம்புக்கு காது இல்லைங்க மேடம்..”

அப்படியா.. என போலி ஆச்சரியத்துடன் மித்ரா கூற,

நீ பேச்சு மாத்தாதே.. உன்  ரோமியோ பேரென்ன?..”

புகழ்.. ஐ மீன் புகழேந்திஎன அவனைப்பற்றி கூறினாள்..

.. ஐயா போலிஸ்ஆ..”

ம்ம்.. ஆமா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.