“உனக்கு பசிக்கல..”
“இல்ல..”
“ஆனா எனக்கு பசிக்குதே..”
“ஆமா.. லொடலொடலொடனு பேசிக்கிட்டே இருந்தா பசிக்காம என்ன செய்யும்.. வாயை மூடுனா கேக்கறயா..”
“அத விடு சங்கு.. இப்போது என் கூட கேன்டீன் வரயா இல்லயா..”
“லூசு.. கிளாஸ் நடந்திட்டு இருக்கிறது கண்ணுக்கு தெரியல.. எப்படி போறது? அரைமணி நேரம் பொறுத்துக்கோ.. லன்ச் ஹவர் வந்துடும்..”
“முடியாது.. இப்பவே ஜன்னல் வழியாக வெளிய என் கூட வர..” என்றவள்.. லெக்சரர் கவனிப்பதற்குள் மித்ராவை ஜன்னலின் வெளியே தள்ளியவள்.. அவளும் குதித்தாள்..
“அடிப்பாவி.. மாட்டினா சங்குதான்..”
“சங்குமட்டும் இல்லை.. இந்த சங்குவோட அம்முவும் சேர்த்து தான் பாட்னர் இன் கிரைம்.. யாமிருக்க பயமேன்.. வா சாப்பிடலாம்” என்றவள் கேன்டினின் உள்ளே சென்று ஆர்டர் கொடுத்ததைகண்ட மித்ரா, அமிர்தாவின் முதுகில் அடித்தவள்.. “யாருக்குடி இத்தனை ஆர்டர் பண்ற? இவ்வளவு வாங்கறயே.. யார் சாப்பிடறது..”
“ஹேய்.. நான் எனக்கு மட்டும் தான் ஆர்டர் பண்ணினேன்.. உனக்கு நீயே பண்ணிக்கோ” என்றவள் அதையெல்லாம் வாங்கிக்கொண்டு இருக்கையில் அமர.. மித்ராவோ அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றாள்..
“ஏன்டி.. பசிக்குதுனு சாப்பாடு வாங்குன சரி.. இத்தனை ஸ்வீட் எங்கிருந்து வந்தது..”
“ஆக்சுவலா நான் ஸ்வீட் பிரியை.. டெய்லி ஏதாவது ஸ்வீட் சாப்பிடாம எனக்கு விடியலே ஆரம்பிக்காது.. இன்னிக்கு பர்ஸ்ட் டே லேட் ஆகிடகூடாதுனு என் டார்லிங் லட்டுவ காலைல சாப்பிட மறந்துட்டேன்.. அதான் டிபன்பாக்ஸ்ல எடுத்துட்டு வந்து சாப்பிடறேன்” என்றவளை ஏறஇறங்க பார்த்தாள் மித்ரா..
“எதுக்கு இப்போ உன் முட்டக்கண்ண விரிச்சிகிட்டு பார்க்குற..”
“இத்தனை ஸ்வீட் சாப்பிட்டு எப்படிதான் ஒல்லியா இருக்கயோனு பார்த்தேன்..”
“கண்ணுவைக்காத சங்கு.. நான் டெய்லி மார்னிங் ஜாகிங்.. ஈவினிங் சைக்கிளிங் போவேன்.. தெரியுமா..”
“பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் அம்மு.. எந்த ஹாஸ்டலில் இதெல்லாம் அலோவ் பண்றாங்க.. ம்ம்..?..”
“நீ ஏன் இவ்வளவு புத்திசாலியா இருக்க?.. இது நம் பிரண்ட்சிப்பின் விதிமீறும் செயல்.. ஆகவே இன்றுமுதல் சங்கு எனப்படும் சங்கமித்ரா புத்திசாலியாக இல்லாமல் மந்தியாக இருக்ககடவது என சங்குவின் அம்முவால் சாபம் கொடுக்கப்படுகிறது...” என நீதிபதி ரேஞ்சுக்கு அமிர்தா பேச, உடனே அவள் தலையில் கொட்டு வைத்த மித்ரா,
“இந்த வாய்தான் டீ உன்ன வாழ வைக்குது.. இதுக்கு மேல ஏதாவது வசனம் பேசுன?..” என ஆள்காட்டி விரலால் மிரட்ட, அமிர்தாவோ எதற்கும் கவலைப்படாமல்,
“இருந்தாலும் சைக்கிளிங் போகனும்னு எனக்கு ஆசை தெரியுமா..”
“சரி.. சரி.. வெட்டி பேச்சு பேசாம சாப்பிடு..”
“என்ன.. வெட்டி பேச்சா.. என முறைத்தவள் பின் அவள் பேவரட் ஹல்வாவிடம் நீ வா டார்லிங்.. நான் உன்ன வலிக்காம முழுங்கிடறேன்” என்றவள் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட.. மித்ராவோ அந்த காட்சியை கன்னத்தில் கை வைத்து கவனித்து கொண்டிருந்தாள்..
மித்ராவுக்கு அமிர்தாவை முதல்நாளே பார்த்தவுடன் பிடித்துவிட்டது.. அவளின் குழந்தைத்தனமான பேச்சும், குறும்புதனமும், தைரியமும்.. அப்போது அவள் வயதை கேட்க, அவள்கூறிய பதிலை கேட்டு திகைத்தாள் மித்ரா..
“உன் ஏஜ்க்கு ஏத்தமாதிரி பேசறயா நீ.. 16 வயசு ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்காதடீ.. காலேஜ் படிக்கற பொண்ணா இரு..”
“கரெக்ட்..”
“என்ன கரெக்ட்..”
“ஏஜ்..”
“என்ன சொல்ற..”
“எனக்கு 16 முடிந்து ஒரு மாசம்தான் ஆச்சு..”
என்ன......???
“ஆமாம் சங்கு.. சின்ன வயசுல நான் பண்ணிய குறும்பு தாங்கமுடியாம ஸ்கூல் சேர்த்துட்டாங்க.. அதான்..”
“அடப்பாவி.. நீ என்ன விட ஒரு வருடம் சின்னவளா?..”
“இப்ப எதுக்கு ஷாக் ஆகுற.. உன்னை யாரு லேட்டா ஸ்கூல் சேர சொன்னது?..”
“எல்லாம் என் நேரம்டீ.. நீ பேசி நான் கேக்கறதா ஆகிடுச்சு..”
“நீ லேட்டா சேர்ந்ததே பரவாயில்லை.. அதனால தான நாம ப்ரண்ஸ் ஆனோம்.. விட்டுத்தள்ளு..”
“கடவுளே.. இந்த கிரேஸி கேர்ள்கிட்ட இருந்து என்னை காப்பாத்து..”
“முடியாது மகளே.. நீ இனி என் சங்கு.. மை க்ளோஸ் ப்ரண்ட்..”