(Reading time: 21 - 42 minutes)

உங்க டிராமா எல்லாம் முடிந்ததுனா இப்போ வீட்டுக்கு போலாமா சங்கு..” என அமிர்தா கூறியதைக்கேட்ட விக்ரம் கோபத்துடன் திரும்பி,

இதெல்லாம் உன்னால தான்.. மித்ரா அடிப்பட்டதுக்கு வருத்தப்படாம எங்களை கேலி செஞ்சிட்டு இருக்க.. முதல்ல இங்கிருந்து கிளம்பு..”

நான் ஏன் தனியா போகனும்?.. மித்ரா கூட தானே நான் இருக்கபோகிறேன்..”

என்ன?

ஆமா.. நான்தான் அமிர்ததரங்கிணி.. என்னை திட்டினிங்கல்ல.. இனி டெய்லி உங்கள டார்ச்சர் பண்றேன்.. ஜாக்கிரதை..”

உன் அப்பாக்கிட்ட வாக்கு குடுத்ததாலே உன்னை சும்மா விடுறேன்.. யாரு யார டார்ச்சர் பண்றாங்கனு பொருத்திருந்து பார்க்கலாம்.. அமைதியா இருக்குறது உனக்கு நல்லது..”

நான் ஏன் அமைதியா இருக்கனும்.. சரியான மிலிட்டரி ஆபிசர்னு நினைப்பு..”

என்ன சொன்ன..”

இரண்டுபேரும் உங்க சண்டைய நிறுத்துங்க. அம்மு.. உனக்கு என்ன தலையில அடிப்பட்டு இருக்கு?. அடி பலமா இல்லையே.. ஏன்னா ஏற்கனவே நீ அரைலூசு..”

சங்கு.......  அதெல்லாம் இல்லை..” என்றவள் ஏதோ நினைவு வந்தவளாய்,

 “ஐயயோ சங்கு, தாயம்மா ஈவ்னிங் பிளைட்ள வராங்க.. என்னை இப்படி அவங்க பார்த்தா அவ்வளவு தான்.. ஏதாவது ஐடியா கொடு சங்கு..” என புலம்ப அதைக்கேட்டு மித்ரா சிரிக்க ஆரம்பிக்கவும் விக்ரம் கோபம் தணிந்தான்..

சங்கு, அவங்க வீட்டுக்கு வந்துடுவாங்க. வா போற வழியில யோசிச்சுகலாம்என்றவள் மித்ராவை இழுத்துக்கொண்டு காரில் டிரைவர் சீட்டில் அமர முற்பட்ட அமிர்தாவை  தடுத்த விக்ரமை கண்டவள்..

சரி..சரி.. நீங்களே ஓட்டுங்கஎன பெரியமனது பண்ணி விடுவதாக கெத்துக்காட்டியவள் மித்ரா அருகில் அமர்ந்தாள்..

சங்கு ஒரு ஐடியா.. உன் அண்ணா தான் கார் ஓட்டி ஆக்சிடெண்ட் பண்ணி காயம் ஆகிடுச்சுனு சொல்லிடலாமா?..” என்றவளை முறைத்த விக்ரம்

நீ என் மேல பழிய போட்டதுமட்டுமில்லாம மித்ராவை பொய் சொல்ல வைக்கிறயே.. நீயெல்லாம் என்ன ப்ரண்ட்?..”

நீங்க என்னை என்ன வேணாலும் சொல்லுங்க, என் நட்பு பத்தி ஏதாவது சொன்னீங்க..”

என்ன பண்ணுவ?..”

ஆங்.. இப்படி திடீரென்று கேட்டா என்ன சொல்றது.. சரி அதை விடுங்க, எனக்கு இப்ப பசிக்குதுஎன்றதும்,

அதானே பார்த்தேன்.. என்னடா இந்த பூனை இன்னும் எதும் சாப்பிட கேக்கலையே நினைச்சேன்என கிண்டல் செய்தாள் மித்ரா..

விக்ரம் அமிர்தாவை பார்த்தான்.. என்ன பொண்ணு இவ.. எதுபற்றியும் கவலை இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டு, ஆக்சிடெண்ட் செய்துவிட்டு குற்றஉணர்ச்சி இல்லாமல் ஜாலியாய் இருக்கிறாளே என ஒரு நிமிடம் நினைத்தவன், அவளின் முகத்தை பார்த்ததும் ஒன்று புரிந்தது, பேபிடால் நிறம், குழந்தைதனமான முகம், குறும்பு செய்யும் கண்கள்.. உதட்டில் அழகான ரகசிய புன்சிரிப்பு, டீன்ஏஜ்ஜின் எதைப்பற்றியும் கவலைப்படாத விளையாட்டு தனம் என அவளைப்பற்றி ஒப்பிட்டவனுக்கு மூளை  எச்சரிக்கை செய்ய அவளைப்பற்றி நினைவை ஒதுக்கிவிட்டு காரை ஓட்டுவதில் கவனமானான்..

வீட்டினுள் நுழைந்ததும் தாயம்மா தான் தென்பட்டார்.. இருவரின் காயத்தைகண்டு பதறியவர் என்னாயிற்று என கேட்க,

நான் டிரைவ் பண்ணும்போது கார் ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு.. ஒன்னும் பிரச்சினை இல்லைஎன மித்ரா சமாளிக்க,

அம்மு, இது உன் வேலைனு எனக்கு நல்லா தெரியும்என தாயம்மா கண்டுபிடித்து கூற, பிறகு இருவருக்கும் அர்ச்சனை நடந்தது.. இந்த ஆறுமாதத்தில் தாயம்மாவுடன் மித்ரா பேசி பழகியதால் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்ததால் உரிமையுடன் பொய் சொன்னதற்காக திட்டினார்.. பிறகு.,

அம்மு நீ செய்த தப்புக்கு தண்டனை, இன்னும் ஒரு வாரத்திற்கு உனக்கு ஸ்வீட் கட்...”

ஐயோ தாயம்மா ப்ளீஸ்என அவர்பின்னே கெஞ்சிக்கொண்டே சென்றவளை கண்ட மித்ரா விழுந்து விழுந்து சிரிக்க, அதைக்கண்ட விக்ரம் எதுவும் புரியாமல்,

இதெல்லாம் ஒரு தண்டனையா?..” என கேட்க,

அண்ணா உனக்கு அம்முவ பத்தி தெரியல.. அவ சரியான ஸ்வீட் பைத்தியம்.. அதுமட்டும் இல்லை..  அவ ஸ்வீட் செய்யறதுல எக்ஸ்பெர்ட் தெரியுமா.. உங்களுக்கு தான் ஸ்வீட் பிடிக்காது.. அவ செய்யற ஸ்வீட் மட்டும் சாப்பிட்டிங்கனா, அவ ஸ்வீட்டுக்கு அடிமை ஆகிடுவிங்க..”

உனக்கு ப்ரண்ட் ஆக வேற பொண்ணே கிடைக்கலயா.. சரியான லூசுப்பொண்ணா இருக்கா?..”

அந்த லூசுப்பொண்ணு பின்னாடிதான் காலேஜே அலையுது..”

என்ன?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.