(Reading time: 21 - 42 minutes)

இதுவரைக்கும் அவளுக்கு நிறையாபேரு லட்டர் தந்தாச்சு.. பொண்ணு அதுக்கெல்லாம் அசரல.. தன்னோட ப்ரின்ஸ்காக வெயிட் பண்ணிட்டு இருக்காளாம்.. எனக்கென்னமோ அவளோட பிரின்ஸ் இன்னிக்கு அவ முன்னாடி வந்தாச்சுனு நினைக்கிறேன்..”

என்ன உளருற..”

எந்த பொண்ணு பத்தியும் கண்டுக்காத என் அண்ணா இன்னிக்கு அமிர்தாவை பத்தி விசாரிக்கிறாரு.. அவளை அரைலூசுனு கமெண்ட் பண்றாரு.. அவக்கூட சரிக்கு சரி சண்டை போடுறாரு.. எதோ சரியில்லையேஎன மித்ரா விக்ரமை சந்தேக கண்ணுடன் பார்க்க,

எனக்கு முக்கியமான கால் பேசனும்என எஸ்கேப் ஆனான் விக்ரம்..

நைட் சாப்பிட்டு விட்டு மித்ராவின் அறைக்கு வந்த அமிர்தா..

எல்லாம் உன் அண்ணாவால தான் இந்த பிரச்சினையே..” என உள்ளே நுழைந்துக்கொண்டே புலம்ப..

என்னடி உளருற..புரியும்படி சொல்றயா..”

உன் அண்ணா மட்டும் நான்தான் ஆக்சிடெண்ட் பண்ணேனு பொய் சொல்லிருந்த இன்நேரம் நான் என் டார்லிங் லட்டுவை சாப்பிட்டுருப்பேன்..”

சரி, அதை விடு.. என் அண்ணாவைபற்றி என்ன நினைக்கிற..”

சரியான மிலிட்டரி, சிடுமூஞ்சி ஆபிசர், பார்க்க நல்லா இருந்தா மட்டும் போதுமா..அன்பா பேசக்கூட தெரியாத ஆளு.. அவரை என்ன பண்ண போறேனு பாரு..”

அப்போ பார்க்க நல்லா இருக்காருனு சொல்ற..”

அதெல்லாம் ஹீரோ மாதி..ரி...” என தடுமாறியவள்.. “நான் என்ன சொல்ல வந்தேன்னா, சரியான முசுடுனுஎன இழுத்தாள்..

மேடம், என்கிட்டயே பொய்யா..”

சரி.சரி.. ஏதோ சுமாரான ஹீரோ..”

அப்படிங்களா மேடம்.. ம்ம்.. நடத்து நடத்து..”

சும்மா தொணத்தொணனு கேள்வி கேட்காத.. நான் தூங்க போறேன்என்று அறையை விட்டு வெளியே வந்தவள் எதன்மீதோ மோதினாள்..

விக்ரம் தன்தங்கை மாத்திரை எடுத்துக்கொள்ள ஞாபகப்படுத்த அவளறைக்கு வந்தவன், அவன்மீது மென்மையாய் ஏதோ ஒன்று மோதியதை உணர்ந்தான்..

அமிர்தா விக்ரம்மீது மோதியதை கண்டவள் தடுமாறினாள்.. அவன் திட்டுவதற்குள், “பார்த்துவரமாட்டிங்களா? கண்ணில்ல உங்களுக்கு?..” என்றவள் வேகமாக அங்கிருந்து அவளறைக்கு ஓடினாள்..

சரியான லூசு என முணுமுணுத்தவன் அங்கிருந்து அகன்றான்..

த்யா தன் அசிஸ்டண்ட் ரிஷியிடம் தனது வீட்டில் விவாதித்துக்கொண்டிருந்தார்..

ரிஷி.. நாம எச்சரிக்கையா இருக்கனும்னு நான் உன்னை நிறையா தடவ வார்ன் பண்ணினேன். இப்போ பாரு.. நல்ல வேலை நீ சரியான நேரத்தில் அங்க போயிட்ட, இல்லைனா அமிர்தாவை லாரி ஏத்திக் கொன்றுருப்பாங்க..”

எஸ் சார்.. இனி நான் மிகுந்த எச்சரிக்கையோட இருக்கேன்.. ஆனாலும் இதுக்கு பின்னாடி யார் இருக்காங்கனு நம்மால தெரிந்துக்க முடியல, ஒரு க்ளு கூட கிடைக்கல சார்..”

பொறுமையா இரு.. அவனே மாட்டுவான், அப்போ பார்த்துக்கலாம்.. தாயம்மா தான் பயந்துட்டாங்க.. இனி உஷாரா இருக்கனும்.. அவன் மறுபடியும் ட்ரை பண்ணலாம்..”

நிச்சயமா சார்.. நான் பார்த்துகிறேன்.. அப்போ நான் வரேன் சார்..”

சரிப்பாஎன்றவர் மனோகரிடம் பேசியப்பின் அமைதியடைந்தார் ஐபிஎஸ் சத்யா...

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.