(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 08 - தேவிஸ்ரீ

En nilavu devathai

மிர்தா தன் அறையினுள் நுழைந்து கதவை சாத்தினாள்.. சிறிது நேரத்திற்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்தவளின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.. அணைத்தது என்னவோ தெரியாமல் நிகழ்ந்த ஒன்றுதான்.. ஆனால் அணைத்தவுடன் கண்டுபிடித்து விட்டாள்,அது யாரென.. அவனைவிட்டு விலக மனமின்றி சிறிது நேரம் அப்படியே இருந்தவள் பின்பு அங்கிருந்து அவளறைக்கு ஓடினாள்..

இந்த ஆறுமாதமாகவே விக்ரமை பற்றி மித்ரா பேசும்போது ஆவலுடன் கவனிப்பாள்.. மித்ராவுக்கு எப்போதும் அவள் அண்ணன் புராணம் பேசுவது என்றால் கொள்ளை இஷ்டம்.. அதனால் அமிர்தாவுக்கு வசதியாய் போயிற்று.. கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்திலேயே விக்ரமை முதன்முதலில் கண்டாள்.. தன் தங்கையை பார்க்க வந்தவன் வெயிட்டிங் ஹாலில் இருந்தான்.. மித்ராவோ தலைவலி என தூங்கிக்கொண்டிருக்க அவளை எழுப்ப மனமில்லாமல் தானே செல்ல முடிவெடுத்தாள் விவரத்தை சொல்ல.. அது ஒரு காரணம் என்றாலும் அவனைப் பார்க்கவேண்டும் எனும் எண்ணத்தில் கிளம்பினாள்.. இதுவரை அறையில் விக்ரமும் மித்ராவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தவள் அவனை நேரில் பார்க்க விரும்பி ஆவலுடன் சென்றாள்..

வெயிட்டிங் ஹாலில் நுழைந்தவள் விக்ரமை கண்டாள்.. கம்பீரமாக நின்றுகொண்டிருந்தவனை ரசித்தவள் அவனருகே சென்றாள்..ஆனால் அதற்குள் அவளுக்கு தன் அன்பு அக்காவிடமிருந்து கால் வர, அருகிலிருந்த பெண்ணிடம் மித்ராவுக்கு தலைவலி என்று விக்ரமிடம் கூறுமாறு சொல்லிவிட்டு தன் அக்காவிடம் பேச ஆரம்பித்தாள்..

பேசிமுடித்தவள் விக்ரமை நினைத்தாள்.. அவனை பார்த்து பேசமுடியாததால் வருந்தியதை இன்றுகூட நினைவு இருக்கிறது.. அதன்பிறகு விக்ரம் மித்ராவை பார்க்கவரும்போதெல்லாம் மறைந்திருந்து ரசிப்பாள்.. பிறகு ஆக்சிடெண்ட் ஆனபோது ஆஸ்பிட்டலில் தான் நேரில் பார்த்தது..  விக்ரமை அவளுக்கு பிடித்திருந்தது.. மிக அதிகமாக பிடித்திருந்தது.. அவன் கண்களை பார்த்தாலே இதயத்துடிப்பு தாறுமாறாக துடிக்கும்.. உடன் படிக்கும் அனைத்து ஆண்களிடமும் சீறிக்கொண்டு சண்டைப்போடும் அமிர்தா முதன்முதலாக ஒரு ஆணை பார்த்து வெட்கப்பட்டது விக்ரமை பார்த்துதான்.. அவன் பார்வையில், அவன் தன்னை திட்டுவதில், அவன் கோபத்தில், அவன் சிரிப்பில், அவன் தள்ளிப் பழகும் விதத்தில் அனைத்திலும் ஈர்க்கப்பட்டாள்.. விக்ரமை கண்டாளே  தன்னுடையவன் எனும் இனம்புரியா உணர்வு அவளினுள் எழும்.. காதல்... ஆம்.. காதல்தான்.., அமிர்தாவின் காதல்.. அமிர்தாவுக்கு விக்ரமின் மேல் உள்ள காதல்.. அவள் உணர்ந்துவிட்டாள்.. அவன் அதை உணர்வானா..? எனும் யோசனையுடன் தூங்கினாள் அமிர்தா..

விக்ரமும் அமிர்தாவை பற்றிதான் நினைத்துக்கொண்டிருந்தான்..மித்ரா அமிர்தாவை பற்றி சொன்ன அடுத்தநாள் காலேஜிற்கு அமிர்தாவை பார்க்க வந்துவிட்டான்.. முதல் சந்திப்பை நினைக்கும் போது இப்போதும் சிரிப்பு வந்தது விக்ரமுக்கு..

முதலில் அவள் வகுப்பறைக்கு வெளியே நின்று அவளை தேடினான்.. வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த லெக்சரரை கவனிக்காமல் அமிர்தா சகமாணவிகளுடன் வளவளவென பேசிக்கொண்டிருந்த அமிர்தாவை முதன்முதலாக கண்டான் விக்ரம்.. தன் அத்தையின் சாயலில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தஅமிர்தாவை விக்ரம் ரசிக்க, லெக்சரரோ கோபமாய் பார்த்துக்கொண்டிருந்தார்..

“மிஸ்.அமிர்ததரங்கிணி..” என கோபமாக லெக்சரர் கூப்பிட,

“எஸ் மேம்” என அப்பாவியாய் முகத்தை வைத்தபடி எழுந்தாள்..

“இங்க நான் பாடம் எடுத்துட்டு இருக்கேன்.. நீ கவனிக்காம உன் பிரண்ட்ஸோட என்ன பேசிட்டு இருக்க..”

“மேம் எனக்கு சந்தேகம் வந்தது.. அதான் கேட்டுட்டு இருந்தேன்..” என சிரிக்காமல் பதில் கூறினாள்..

“என்ன டவுட்னாலும் என்கிட்ட கேளு..”

“அப்படியா.. கேட்கட்டுமா..”

“கேளு..”

“நீங்க ஆரம்பத்தில் கம்பியூட்டர் எல்லாம் ரூம் சைஸ்க்கு இருக்கும் என்று சொன்னீங்க..”

“ஆமா..”

“அப்போ கீபோர்டில் இருக்க பட்டன்ஸ் கூட பெருசா தான் இருந்திருக்கனும்.. அப்போ அதை டைப் பண்ணணும்னா அதுமேல ஏறி குதிச்சு குதிச்சு டான்ஸ் ஆடிட்டு இருந்திருப்பாங்கதானேனு யாழினிக்கிட்ட சொன்னேன்.. அவ நம்ப மாட்டிங்கிறா” என்றதும் கோபமடைந்த லெக்சரர்,

“ஆல் யூ பைவ் கெட் அவுட்” என அவர்களை பார்த்து கத்த,

“தேங்க்யூ மேம்” என சிரித்துக் கொண்டே தன் தோழிகளைக்கூட்டிக்கொண்டு வெளியேறினாள்..

இடியட்ஸ் என முணுமுணுத்துக்கொண்டு பாடத்தை எடுக்க் ஆரம்பித்தார் லெக்சரர்.. அதைக்கண்ட விக்ரம் சிரித்துக்கொண்டே அமிர்தாவை பின்தொடர்ந்தான்..

அமிர்தா நேராக சென்றது கேன்டீன்தான்.. “அப்பாடா.. அறுவை கிளாஸிலிருந்து தப்பிச்சிட்டோம்.. இப்போ யார் அதிக சமோசா சாப்பிடறாங்கனு பெட் வைக்கலாமா?..” என தன் தோழிகளிடம் அமிர்தா கேட்க, அனைவரும் ரெடி என்றனர்.. மித்ராதான் அனைவரையும் எச்சரித்தாள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.