(Reading time: 11 - 22 minutes)

“இவளை நம்பாதீங்க பா.. இவ சரியான தீனீப்பண்டாரம்..”

“என்ன சங்கு.. நீ வரலைனா விட்டுடு.. அவங்கள ஏன் பயமுறுத்துற..”

“எங்களுக்கு பயமெல்லாம் இல்லை நாங்க ரெடி” என தோழிகளை கண்ட மித்ரா கன்னத்தில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்..

சமோசா வந்தது.. அனைவரும் உண்ண ஆரம்பிக்க அமிர்தா சாப்பிட்ட வேகத்தை பார்த்து விக்ரம் கண்கள் விரிந்தன.. அனைத்தையும் வாயில் அடக்கிய அமிர்தாவை காணும் போது கியூட்டாக இருந்தது.. அதை ரசித்தான்.. இதையெல்லாம் யோசித்துக்கொண்டவன் உறங்கிப்போனான்..

போட்டியில் அமிர்தா வென்றதை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?..

அடுத்தநாள் காலை.. அதிகநேரம் தூங்கியதால் அவசரஅவசரமாக கிளம்பினாள் அமிர்தா.. தனது புக்சை எடுத்துக்கொண்டு  படிக்கட்டிலிருந்து அவசரமாக இறங்கியவள் நேராக மோதியது விக்ரம் மேல் இல்லை, மித்ராவின் மேல்(எத்தனை தடவை தான் ஹூரோமேலயே மோதுவது) தடுமாறி விழுந்த மித்ராவை விழாமல் பிடித்த விக்ரம் அமிர்தாவை திட்ட ஆரம்பித்தான்..

“அறிவிருக்கா உனக்கு.. எதுக்கு இவ்வளவு வேகம்.. உனக்கு எத்தனைதடவை சொல்றது மித்ராவுக்கு ஒன்னுனா  உன்னை சும்மா விடமாட்டேன் அமிர்தா.. கவனம்னா என்னனு உனக்கு தெரியாதா.. போன வாரம் ஒரு பையனோட மண்டைய ஒடச்சிருக்க.. அதுக்கு அப்புறம் காரை ஓட்டிட்டு போய் ஆக்சிடெண்ட் பண்ணி மித்ரா கைய ஒடச்சிட்ட.. அமைதியா ஒரு இடத்துல அடங்கி இருக்க மாட்டியா.. படிகட்டிலிருந்து வேகமா வந்தியே கால் தவறி விழுந்திருந்தா.. மித்ராவுக்கு ஏதாவது ஆகிருந்தா.. என திட்டிக்கொண்டிருந்தவன் அவள் அதிசயமாய் எதுவும் பேசாமல் கூலாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்ததை கண்டதும் கோபம் அதிகமாகி அவளருகே விக்ரம் செல்ல, அதை கண்ட அமிர்தா சீக்கிரம் தன்வாயில் சாண்விட்சை அடக்கியவள்.. எழுந்து வேண்டும் என்றே அவன்மீது வேகமாக இடித்து அவனை கீழே விழவைத்துவிட்டு அங்கிருந்து ஓட.. அதைக்கண்டு மித்ரா விழுந்து விழுந்து சிரிக்க.. அவளை முறைத்தான் விக்ரம்.. அம்மா.. என்னா இடி.. நெஞ்சே வலிக்குதுடா சாமி.. இவளை என்ன தான் செய்யறது என மனதினுள் புலம்பினான்..

காரில் மித்ராவுக்காக அமிர்தா காத்துக்கொண்டிருந்தாள்.. அங்கு வந்த மித்ரா, தான் இன்று கல்லூரி வரவில்லை என கூறியவள்,

“என் அண்ணனை ரொம்பதான் பாடா படுத்துற.. என்ன மேடம் என்ன விசயம்?..”

“என்ன விசயம்னா..?”

“இந்த லவ்வு..கிவ்வு.. எதாவது..”

“சே..சே.. அப்படியெல்லாம் இல்லையே..”

“காதல் வந்ததுக்கான அறிகுறியே பொய் சொல்றதுதான்.. சரி விடு.. நீயே என்கிட்ட வந்து சொல்லுவ.. அப்புறம்,நாளைக்கு என்ன நாளுன்னு தெரியுமா?..”

“என்ன?..”

“நாளைக்கு அண்ணாவோட பர்த்டே”

“உண்மையாவா..”

“சத்தியமா.. சரி, நாளைக்கு என்ன பரிசு தரப்போற அண்ணாக்கு?..ம்ம்..” என மித்ரா அமிர்தாவை பார்த்து கண்சிமிட்ட,

“சர்ப்ரைஸ்பா.. எப்படி உன்கிட்ட சொல்லமுடியும்..நான் காலேஜ் போரேன்..பை..” என நழுவினாள்..

அவளை பார்த்து புன்னகைத்த மித்ரா டாடா காட்டியவள்  நீ என் அண்ணியா வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன் அம்மு.. என்றாள் மனதினுள்..

காரில் சென்றுகொண்டிருந்த அம்மு, எனக்கு ஏற்கனவே தெரியும் மித்ரா.. நாளை உன் அண்ணா பர்த்டேனு.. இந்தநாளுக்காக தானே நான் காத்திருக்கிறேன்.. நாளைக்கு நான் தரப்போற கிப்ட்ட பார்த்து கண்டிப்பா விக்ரம் பயந்து ஓடப்போறாரு.. என சிரித்தாள் மனதினுள்..

தேநேரம் கங்காதரன் கோபமாக தன் அடியாட்களிடம் பேசிக்கொண்டிருந்தான்..

“ஒரு சின்ன பொண்ணு.. அவள உங்களால கொல்ல முடியல.. நீங்க எல்லாம் ஒரு ரௌடியா?..”

“அண்ணா.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுனுதான் கார் பிரேக் கட் பண்ணேன்.. ஆனாலும் தப்பிச்சுட்டா..”

“எனக்கு தெரியாது.. அந்த பொண்ணு சாகனும்..”

“அந்த பொண்ணு படிக்கிற காலேஜில ரொம்ப ஸ்ரிக்ட் அண்ணா.. உள்ளே நுழையமுடியல.. இவ்வளவு நாள் ஹாஸ்டலில் இருந்தவ இப்போதான் வெளிய பிரண்ட் வீட்டில் தங்கியிருக்கா..நான் ஏதாவது பண்ணி அந்த வீட்டில் நுழைந்து அந்த பொண்ணை கொன்றுவிடுறேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.