(Reading time: 17 - 33 minutes)

தூரத்திலிருந்தும் தெளிவாக தெரியும் கூர்மையான கண்கள்.. அடர்த்தியான வளைந்த புருவங்கள்.. மொழுமொழுவென்று இருந்தாலும் ஆண்மை நிரம்பிய முகம்.. கோதுமை நிற பேன்ட்... வெளிர் மஞ்சள் நிற சட்டை.. சட்டையின் கையை முட்டியளவு மடித்து விட்டிருந்தான்... கடிகாரம் மோதிரம் என்று ஒன்றும் இல்லாத, கைகள்.. கேஷுவல் ஷூ... ‘ஹ்ம்ம்... ஆளு நல்லாதான் இருக்கான்... பார்க்க கொஞ்சம் சாப்ட் நேச்சர் மாதிரி இருக்கான்... ஆனா அறிவாளிபோல... கண்ணோட ஷார்ப்நெஸ் சொல்லுதே.. இவனும் இவன் கைப்பிள்ளையும் தமிழ்ல தான் பேசினாங்க.. அவன் லுக்கே சொல்லுதே... ‘ஹி லைக்ஸ் மீ’ன்னு... இவன் மட்டும் அந்த சிக்னல்காரனா இருந்த... வாவ்......’ என்று பார்வையால் எடைபோட்டுக்கொண்டே அவனின் ஜாகுவார் காரை கவனித்தவள் முகம் சட்டென்று சோர்ந்தது...

‘இவன் அந்த பைக் கொண்டுவரலையா...?!’ என்ற ஏமாற்றம் பரவியது, தாராவின் மனதில்.

தாராவின் முகத்திலேயே பார்வையை பதித்திருந்த ககனுக்கு, அவளின் பார்வை ஏமாற்றத்துடன் அவனின் காரையும் அவனையும் கண்டதில் ஒன்றும் புரியாமல் விழித்தான். பின், முதுகுத்தண்டில் மின்னல் வெட்டியதுபோல் நிமிர்ந்தவனுக்கு ‘ஒரு வேளை இவள், என் வண்டிய  தேடறாளோ..??!!!’ என்ற சந்தேகம் கிளம்பியது.

இன்றைக்கென்று காரில் வந்த தன்னையே ககன் நொந்துக்கொண்டு இருக்கும்போது...   

பார்க்கிங்கில் இருந்து வெளியே வரும் வழியில் இருக்கும் வளைவில் வேகமாக வந்துக்கொண்டிருந்த கார் ஒன்று எழுப்பிய ஹாரன் சத்தத்தில் பதறிப்போன தாரா, ஒரு முறை ஜெர்க் ஆகி கால்கள் தடுமாறி விழப்போக... நாலே தாவலில் அவளிடம் ஓடி வந்த ககன் அவள் விழாமல் தடுக்கும்முன், தாராவே சமாளித்து நின்றுவிட்டாள். 

“ஆர் யூ ஒகே?” என்று ககன் தடதடக்கும் இதயத்துடன் கேட்க.. பதட்டத்துடன் இருந்தாலும்  ஒரு சமாளிப்பான புன்னகையை ககனை பார்த்து பதிலாக தந்தவள்.. தன் கால்களை ஒரு முறை குனிந்து பார்த்துக்கொண்டாள்.. முகம் வலியில் கசங்கியது.. ‘கால் பிசகி விட்டதோ..?!!’ என்று தாரா யோசித்து முடிக்கும் முன்..

சட்டென்று அவளின் கைகளை பிடித்து சற்று ஓரமாக அழைத்துப்போன ககனின் கண்கள், தாராவின் முகத்தை விட்டு அங்கு இங்கு அகலவில்லை. வலியில் முகத்தை சுருக்கிக்கொண்டு பற்களால் கீழுதட்டை கடித்தபடி வந்தாலும் ‘ஆ...’ ‘ஓ..’ என்று ஒருவித அலட்டலும் செய்யவில்லை தாரா.

ககனை ஒரு பார்வை பார்த்துவிட்டு... பின்னால் வந்த காரையும் பார்த்தவளின் முகம், கோபத்தில் ஜொலிக்க ஆரம்பித்தது.

அந்த கோபத்தை கண்டு ககனே ஒரு நொடி அரண்டாலும், நியாயமான கோபம் என்பதால் அவனும் சேர்ந்து கோபம்கொண்டான்.  

“ஒரு செகண்ட்... நீங்க ஸ்லிப் ஆகி விழுந்துருந்தா... அந்த கார் வேற செம ஸ்பீட்ல வந்துது.. கற்பனைகூட பண்ண முடியலேங்க.. ஒ காட்... தேங்க்ஸ் அலாட்...”என்று ககன் கூறும் போது, அவனின் கைகள் நடுங்கியதை தாரவால் உணர முடிந்தது. ஆனாலும் ‘இவன் எதுக்கு இவ்வளோ டென்ஷன் ஆகறான்..?’என்று அவளால் நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

கோபம் குறைந்த முகத்தில் புன்னகை பூசிக்கொண்டு “சில்(chill)...எனக்கு ஒன்னும் இல்லீங்க.. I’m Alright” என்றாள். ஆனாலும் கோபமான ஒரு முறைப்பு பறந்தது அந்த கார் ஓட்டிவந்தவருக்கு..

தற்குள்... உதய், காரிலிருந்து இறங்கி, வேகமாக வந்து இக்கட்டான சூழலில் நடுவிலேயே நின்றுவிட்ட காருக்கருகில் கோபத்துடன் சென்றான்...

“Hey… senseless fellow… Do you think you are riding the car in the sky…?! Why didn’t you check the half-dome mirror over there…?! Come out I say….” என்று கோபமாக காரின் கதவை தட்ட... அதிலிருந்து வெளிவந்த காவ்யாவை கண்டு முழிகள் பிதுங்க நின்றுவிட்டான்... 

சட்டென சுதாரித்து.. குற்றம் செய்த குழந்தையின் முகத்துடன் மலங்க மலங்க முழித்தபடி பாவமாக பார்த்தவளை, ஒன்றும் பேசாமல் கோபத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு.. தாராவையும் ககனையும் பார்த்தான்..

அதற்குள், அடுத்து அடுத்து வந்த கார்கள், ஹாரன் அடிக்கத் துவங்க, “வண்டிய ஓரமா பார்க் பண்ணிட்டு உன் அக்காக்கிட்ட போ காவ்யா... ஷி நீட்ஸ் யுவர் ஹெல்ப்” என்றான்...

இப்பொழுது நிஜமாகவே காவ்யாவின் கைகள் நடுங்க ஆரம்பிக்க... கண்களில் மிகுதியான பயத்துடன் தாராவை பார்த்தபடி, “ப்ளீஸ்...”என்று கார் சாவியை உதய்யிடம் தந்து அவனை பார்க் பண்ணுமாறு வேண்டினாள்.

“ஒகேய்.........” என்று உதய் காரில் ஏறிக்கொள்ள... தாராவிடம் ஓடினாள், காவ்யா.   

பதட்டம் அடங்காமல், சிறிய மேடை மாதிரி இருந்த இடத்தில் தாராவை அமரவைத்து.. அவளின் வலது கால் ஷூவை அகற்றி.. பாதத்தை மடிமீது வைக்க முயன்றான்... அவ்வளவே... தாரா ஒத்துழைக்காததால் நிமிர்ந்து அவளை புரியாத பார்வை பார்த்தவனுக்கு, பதிலாக கண்டனப்பார்வையை வீசினாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.