(Reading time: 17 - 33 minutes)

தாராவை ககன் நின்று நிதானமாக ரசித்துக்கொண்டே, தன்னுள் இருக்கும் நேர்மையான ககனிடம் போராடி முடித்து, அவனை அடக்கியபொழுது.. அவனுள் இவ்வளவு வருடங்களாக மறைந்திருந்த ரொமாண்டிக் ககன், “காதல் கசாட்டா... நெஞ்சில் இனிக்குதா....” என்று தொடங்க... ஒருவழியாக கடைசி விள்ளலை வாயில் அடக்கியபடியே ‘ஹன்ட் வாஷ்..’என்று ஆக்ஷனில் காவ்யாவிடம் பேசியபடியே சென்றாள், தாரா..!!

ப்பா... போய்ட்டாங்க டியுட்... வாயா அந்த பொண்ணுக்கு.. ஐயையையோ... என்ன பேச்சு பேசறா.. வாய் ஒரு முழம் நீளம்னா, கை ரெண்டு முழம் நீளம்.. ஷப்பா... இப்போவே கண்ண கட்டுதே....” என்று உதய், ககனின் அருகில் வந்து நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள... அப்பொழுதான் ககன் உணர்ந்தான் தாரா அங்கு இல்லாததை.

“ஹே... எங்க போய்டா அவ.. மறுபடி மிஸ் பண்ணிட்டேனே..” என்று அவன் வேகமாக தலையில் கை வைத்துக்கொள்ள.... உதய் பார்த்த வித்யாசமான பார்வையில் அசடு வழிய நின்றான்.

“என்ன மேன்... இவளா அவளான்னு முடிவு பண்ணிட்டியா..?!” என்று வெறுமையான குரலுடனும் முகத்துடனும் வினவ, நிஜமாகவே ககனுக்கு இப்பொழுது முகத்தை மறைப்பதற்கு இடம் தேட வேண்டி இருந்தது..

“உதி..”என்று ஆரம்பித்த ககனின் தயக்கமான குரலுக்கு செவி சாய்க்காமல், விறு விறுவென்று நடந்து சென்றுவிட்டான் உதய்.

‘என்ன மேன்...?!’ என்று தொடங்கிய மனதை ‘நீ அடங்கமாட்ட..??’என்று கோபமாக கேட்டு அடக்கிய வினாடி, ‘காதல் கசாட்டா...?!’ என்று இன்னொரு விதமாக எழுந்தது நின்றது..! ‘முதல்ல நட்பு.. அப்புறம்தான் கசாட்டா...’என்று மென்மையாக அமைதி படுத்திவிட்டு, நண்பனின் பின்னால் ஓடினான்.

“உதியும் காணும்.. கசாடாவையும் காணும்... அவளோட குரலை கூட கேட்க முடியல இன்னைக்கு.. யார் முகத்துல முழிச்சேன்..?!! எப்போதும் போல கண்ணாடில என் முகத்தை தானே பார்த்தேன்.... பின்னே ஏன் இன்னுக்கு அண்டா அண்டாவா பல்பு வாங்கறேன்... எனக்கும் தான் இன்னிக்கு பிறந்தநாள்.. ஆனா செலிபிரேஷன் மூடே ஓடிப்போய் ஒரே குழப்பமால இருக்கு... அதுசரி.. தாரா ககனுக்குன்னு இருந்தா கண்டிப்பா என் கண்ணுல படுவா.. அதுனால எதிர்காலத்தை எதிர்காலத்துல டீல் பண்ணிக்கலாம்.. இப்போ என் நண்பன் எங்க போனான்னு தெரிலையே.. வீட்ல வேற டாலி காளி கெட்டப்ல காத்துட்டு இருப்பா... தேவுடா... எல்லாரும் இப்படி என்னை இப்படி புலம்ப விட்டுட்டாங்களே..!!!” என்று சரமாரியாக புலம்பித் தள்ளியவன், முடிவாக உதய்க்கு போன் செய்ய... “பார்க்கிங்கில இருக்கேன்...”என்று மட்டும் சொல்லி, வைத்துவிட்டான், அந்த காவியத்தலைவன்.

பார்க்கிங்கிற்கு சென்ற ககனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது...

“மாமோய்... வாரா.. உன்கிட்ட கொஞ்சம் மனசுவிட்டு பேசனும் டா...” என்று ககன் தொடங்க...

“ஒன்னும் தேவை இல்லை... “என்று பட்டென்று வெட்டினான், உதய்.

“நான் சொல்றத ஒரு முறை பொறுமையா கேளுடா.. அவசரப்படாத...”

“இப்போ நான் அவசரப்படாம இருந்தா.. உன்னோட தாரா கிளம்பிப்போய்டுவா.. அப்பறம் அவளை கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்... பரவாயில்லையா.?!” என்று வேக வேகமாக கேட்டுமுடிக்க... நம்ப இயலாமல் ஒரு நொடி நண்பனை பார்த்த ககன், சட்டென்று தாவி அவனை அணைத்துக்கொண்டான்.

“உதி.. தேங்க்ஸ் உதி.. என்னை புரிஞ்சிகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்... இப்போ பத்து நிமிஷமா மனசு ரொம்ப பாரமா இருந்துது.. நான் எப்படிபட்டவன்னு எனக்கே புரியல... ஆனா இப்போ ரொம்ப ஈஸியா பீல் பண்ணறேன்... தேங்க்ஸ் அலாட் மச்சி...”

“ரிலாக்ஸ் டியுட்... ரிலாக்ஸ்... நான் என்னோட கருத்தை சொல்லி உன்னை இன்னும் குழப்ப விரும்பல ககன்... ரெண்டு நாள் டைம் எடுத்து, நீயாவே திங்க் பண்ணி டிசைட் பண்ணு... உனக்கு என்ன வேணும் யார் வேணும்னு நீ தான் முடிவெடுக்கணும்.. அப்படி உன்னால முடியலேன்னா, உன் மனசுல இருக்கறத என்கிட்ட சொல்லு.. நான் ஹெல்ப் பண்றேன்.. maybe you will get a solution, while sharing with me..  listen... only.. If you cannot decide at one, I will help you .. I hope you dint need any external help.  சரி வா.. இப்போதைக்கு அந்த பொண்ணை பாலோபண்ணி, அவளோட வீட்டை கண்டுபிடிப்போம்...” என்றவாறு பார்கிங் ஏரியாவின் எக்ஸிட் அருகே காரில் காத்திருக்க ஆர்ம்பித்தனர். 

காத்திருப்பு வீணாகாமல், போனில் பேசிக்கொண்டே மெல்லமாக வெளியே வந்துக்கொண்டிருந்தாள், தாரா.

அவளை கண்டவுடன் காரிலிருந்து இறங்கிய ககன், அவளின் குரலை கேட்கும் ஆவலுடன் காரிலேயே சாய்ந்தவாறு நின்றுகொண்டான்.

சற்று தூரத்திலேயே அவனை கவனித்துவிட்ட தாராவிற்கு, அவன் அவளுக்காக தான் காத்திருக்கிறான் என்பது அவனின் பார்வையிலேயே கண்டுகொள்ள முடிந்தது...

‘ஹப்பா... எவ்வளோ தைரியமா சைட் அடிக்கறான்..!! என்ன பார்வை டீ இது.. முன்னாடியும் இதே மாதிரிதான் பார்த்தான்.. காந்தம் மாதிரி கண்ணு... உள்ளுக்குள்ள இழுக்குது...’ என்று தாரா அலுத்துக்கொண்டதில் தவறேதும் இல்லை.. ககனின் பார்வை அப்படிப்பட்டது தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.