(Reading time: 10 - 20 minutes)

"இதோ வரேன் தம்பி!"-என்று சமையலறைக்குள் நுழைந்தார் அவர்.பொத்தென்று சோபாவில் விழுந்தவனின் சிரம் முழுதிலும் வலி!!!

"அம்மா!"தன்னையும் மீறி உடல் சோர்வினால் முனகினான்.

"ம்..."என்று அவன் முன் காபி கோப்பையை நீட்டியது ஒரு வளைக்கரம்.

புரியாமல் ஒரு நொடி திகைத்தவன்,நிமிர்ந்துப் பார்த்தான்.

"அம்மூ நீயா?"சற்றே அதிர்வுடன் நிமிர்ந்தான் அசோக்.

"நான் தான் குடிங்க!"கோப்பை அவனிடம் நீட்டினாள்.அவள் கரம் ஈந்த கோப்பையை வாங்கினான் அசோக்.

"எப்போம்மா வந்த?"

"அரை மணி நேரமாகுது!"-என்றப்படி உள்ளே சென்று ஒரு கிண்ணத்தில் எதையோ எடுத்துக் கொண்டு வந்தாள்.

"ம்..!கொஞ்சம் சாய்ந்துக்கோங்க!"

"எதுக்கு?"

"தலைக்கு மசாஜ் பண்ணி விடுறேன்.டென்ஷன் குறையும்!"-அவள் கூறியதிலே பாதி சோர்வு காணாமல் போனது அவனுக்கு!!

"அதெல்லாம் எதுவும் வேணாம்மா!நீ வா உட்கார்!"

"ப்ச்...காட்டுங்க!எப்போ பார்த்தாலும் வேலை!எங்கேயாவது முகத்துல தெளிவு இருக்கா?என்னமோ மாதிரி இருக்கீங்க!"-கையில் சிறிது எண்ணெய் ஊற்றி அவன் தலையில் தேய்க்கலானாள்.

"மா!வேணாம் சொன்னா கேளு!உனக்கு எதுக்கு இதெல்லாம்?"

"ஆ...வேற யார் செய்வா?பேசாம கண்ணை மூடுங்க!எல்லாம் நான் பார்த்துக்கிறேன்!"-அவனை அடக்கியவள்,தன் பணியைத் தொடர்ந்தாள்.அவளது அரவணைப்பினாலும்,அன்பினாலும் தன்னை மறந்து உறங்கிப் போனான் அசோக்.அவன் உறங்கியதை கவனித்தவள்,மெல்ல குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.அவளது நேசத்தில் பாலகனாய் உருமாறிப் போன ஒருவனை அவள் மனம் தன் முதற்பிள்ளையாகவே பாவித்தது.

"நிம்மதியா தூங்குங்க!இனி உங்க வாழ்க்கையில கஷ்டமே வராது!!"என்றாள் மென்மையான குரலில்!!ஒரு ஆண் மட்டும் அல்ல,காதலில் பரஸ்பரம் வாக்குகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.தனது அர்த்தாங்கினியாய் வரும் கன்னிகையிடம் ஒரு வரனுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ,அதே சம அளவு உரிமை வதுவிற்கும் வரனிடம் உண்டு!அக்னியை சாட்சியாக்கி வலம் சுற்றுகள் யாவற்றுக்கும் தனி பலம் உண்டு!ஒவ்வொரு சுற்றிலும் ஆண்-பெண் இருவரும் நம்பிக்கையையும்,நேசத்தையும்,உரிமையையும் பரிமாறி கொண்டு அதற்கு பவித்ர அக்னியை சாட்சியாய் வைக்கின்றனர்.காதலோ அல்லது மணவாழ்வோ வெறும் சம்பவம் அல்ல!அவை வாழ்வின் அங்கங்கள்!!!

சரியாக அரை மணி நேரத்திற்கெல்லாம் உறக்கம் கலைந்துவிட்டான் அசோக்!!தலைவலி இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தது.எல்லாம் அவள் மாயம்!!

"அம்மூ!"குரல் கொடுத்தான்.பதிலில்லை!!

"கிளம்பிட்டாளா?"சந்தேகத்துடன் எழுந்துச் சென்று தேடலானான்.

"சிவா?"

"இங்கே இருக்கேன்!"-சமையலறையில் இருந்து குரல் வந்தது.

"இங்கே என்னப் பண்ற?"-குரல் கொடுத்தப்படி உள்ளே நுழைய,அவள் ஏதோ அவனுக்காக செய்து கொண்டிருந்தாள்.

"ஹே...!என்னம்மா இதெல்லாம்?நீ வை..!"-அவளிடமிருந்து கரண்டியை வாங்கினான் அசோக்.

"சும்மா எதுக்கெடுத்தாலும் செய்ய வேணாம்னு சொல்லாதீங்க?இன்னும் கொஞ்ச நாள்ல நான் தானே வந்து செய்யணும்!"

"உன்னை யாரு இந்த வேலை எல்லாம் செய்ய சொன்னா?அதுக்கு தான் ஆள் இருக்காங்களே!"

"ம்...அந்தச் சமையல் ரொம்ப பிடித்திருக்கிறதால தான் தினமும் வெளியே சாப்பிட்டு வரீங்களா?"-சிரித்தப்படி அவள் கேட்க,சில நொடிகள் திகைத்தான் அசோக்.

"உனக்கு எப்படி தெரியும்?"

"மணி அண்ணன் தான் சொன்னாரு!தம்பி சரியாகவே சாப்பிட மாட்டிங்கிறார்.என்னன்னே தெரியலை!கேட்டா,சாப்பிட்டு வந்துட்டேன்னு சொல்றாரும்மான்னு சொன்னார்!"

"போட்டு கொடுத்துட்டாரா?"

"ம்...நீங்க என்னென்ன பண்றீங்கன்னு எனக்கு ரிபோர்ட் வந்துடும்!"

"ஒரு கலெக்டருக்கே ஸ்பை வைத்திருக்கியா நீ??"

"அப்படியா கலெக்டர் சார்!ஏன் நான் வைக்க கூடாதா?"

"வைக்கலாமே!டீச்சர் மேடமுக்கு இல்லாத உரிமையா??"

"சரி...நீங்க ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க!நான் சமைக்கணும்!"-அவனை துரத்தினாள் சிவன்யா.

"சமைக்கணுமா?"-அவள் பின்னால் சென்றவன்,தன்னை நோக்கி அவளை ஈர்த்து அணைத்துக் கொள்ள,சர்வ நாடியும் நொடி பொழுதில் ஒடுங்கியது அவளுக்கு!!

"எ...எ...என்ன...பண்றீங்க?விடுங்க.."திணறியது அவள் குரல்.

"நீ உன் வேலையை பாரு!என்னை ஏன் கவனிக்கிற?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.