(Reading time: 10 - 20 minutes)

"விடுங்க..."-அவனிடமிருந்து சற்றே விலகினாள் சிவன்யா.

"என்ன பழக்கம் இதெல்லாம்?வர வர ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க!"முகம் முழுதும் நாணத்துடன் அவனை அதட்டினாள்.

"நான் எல்லாம் நல்லப் பையனா தான் இருந்தேன்!நீதான் இப்படி மாற்றினாய்!"

"உங்களை....பேசாம போங்க!"

"முடியாது!"-அவள் சிறு பிள்ளையாய் சிணுங்கினாள்.

"சரி...சரி!அழாதே!போறேன் போறேன்!"-பெரும் ஏமாற்றத்துடன் வெளியே வந்தான் அசோக்.

வெளியே வந்தவனின் செவிகளில் மெல்லியதாக ஏதோ பாடல் ஒலி கேட்டது.

"டீச்சர்!உங்களுக்கு போன் வருது!"என்று கூக்குரலிட்டான் அசோக்.

"அங்கே தானே இருக்கீங்க!அட்டண்ட் பண்ணுங்களேன்!"

"என்னையே வேலை வாங்குறீயா?"-முனகிக்கொண்டே கைப்பேசியை செவிகளில் வைத்தான்.

"ஹலோ!"

"ஹலோ யாரு?"

"நீங்க யாரு?"

"நான் உதயக்குமார் பேசுறேன்!சிவன்யா அப்பா!"

"ஐயோ!நான் அசோக் பேசுறேன் மாமா!"

"நீங்களா?சிவன்யா போன் உங்கக்கிட்ட...எப்படி?"-தந்தையின் மனதில் ஒரு அச்சம்!

"அது சிவன்யா வீட்டுக்கு வந்திருக்காங்க!"சற்றே ஸ்ருதி இறங்கியது அவன் குரலில்!!

"என்ன விஷயம்?இந்த நேரத்துல?என்கிட்ட கூட சொல்லலை?"

"இல்லை...ஒண்ணுமில்லை!நான்தான் கூட்டிட்டு வந்தேன்!ஜஸ்ட் அவங்களை வெளியே பார்த்தேன்!அதான்...மன்னிச்சிடுங்க!உங்கக்கிட்ட சொல்லாம.."-அவள் குற்றவாளியாய் நிற்க அவன் மனம் விரும்பவில்லை.

"பரவாயில்லை...பரவாயில்லை தம்பி!கொஞ்சம் சீக்கிரம் அவளை அனுப்பிடுங்க!அவ அம்மா தேடுறாப்பா!"

"ஆ..சரிங்க மாமா!இதோ நானே கொண்டு வந்து விடுறேன்!"

"சரிப்பா!"இணைப்பைத் துண்டித்தான் அசோக்.

"என்ன டீச்சர்?வீட்டில் சொல்லிட்டு வரலையா?"என்றப்படி அவன் திரும்ப,விழிகளில் ஏதோ தயக்கத்துடன் நின்றிருந்தாள் சிவன்யா.

"என்னம்மா?என்னாச்சு?"அவள் முகத்தில் அப்படியொரு கிலி!!

"சிவா!"-அவனுக்கு ஏதோ தவறாகப்பட,அவளருகே சென்று அவளது புஜங்களைப் பற்றி உலுக்கினான்.

"சிவா!"சட்டென அவன் எதிர்நோக்கா வகையில்,அவன் நெஞ்சில் தன் முகம் புதைத்துக் கொண்டாள் சிவன்யா.

"ஏ...என்னாச்சு?"

"நான் உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லணும்!"

"என்ன விஷயம்?"

"2 நாள் முன்னாடி எனக்கு ஒரு நம்பர்ல இருந்து கால் வந்தது!"

"யாரு?"

"தெரியலை!போன் பண்ணி கொஞ்சம் இன்டிசண்ட்டா பேசுறான்!அவன் யாரு?எங்கே இருந்து பேசுறான் எதுவும் தெரியாது!அடிக்கடி கால் வருது!தினமும் நான் என்னப் பண்றேன்!எங்கே போறேன்!எல்லாத்தையும் சொல்றான்!பயமா இருக்குங்க!"சட்டென விழிகள் கலங்கிவிட்டன அவளுக்கு!பெண் சுதந்திரமாம்...!ஆம்...!சுதந்திரம் தான் கைகளில் விலங்கு பூட்டப்பட்ட சுதந்திரம்!

"நம்பர் என்ன?"

"ஃப்ரைவட் நம்பர்னு வருது!"

"சரி...நீ பயப்படாதே!நான் இருக்கேன்.சரியா!நான் பார்த்துக்கிறேன்!"அவள் விழிகளை துடைத்தான் அசோக்!!

"சரி..வா!மாமா கால் பண்ணிட்டார்!நீ கிளம்பு!நான் பார்த்துக்கிறேன்!"

"நீங்க முதல்ல சாப்பிட வாங்க!"

"நான் சாப்பிடுறேன்!நீ வா!முதல்ல உன்னை வீட்டில் விட்டுட்டு வந்துடுறேன்!நேரமாகுது!"ஆறுதலாக அவளை அழைத்துச் சென்றான் அசோக்.காரில் அவள் என்ன நினைத்தாளோ,அவனது தோளில் சிரம் பதித்து சாய்ந்துக் கொண்டாள்.

Episode 08

Episode 10

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.